Friday, October 28, 2011

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக

கொல்லா நெறி

கொள்ள நெறிக்கு வள்ளல் பெருமான் மிகவும் முக்கியதுவம்
கொடுக்கிறார்.

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பளிதர ஆடு பன்றிக் ,குக்குடங்கள்(கோழி )
பலிகடா முதலிய உயிரைப்
போலியுறக் கொண்டே போகவுங் கண்டே
பந்தி நொந்து உளம நடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வேங்கோயில்
கண்டகாலத்தும் பயந்தேன் .

அதை போலவே வள்ளுவ பெருந்தகையும் ஒரு அதிகாரமாக சொல்லி
இருக்கிறார்.

தன் ஊன் பெருக்கற்கு பிருதூன்(பிறது ஊன் )
உண்பான் எங்கணும் ஆளும் அருள் .

கொல்லான் புலால் மறுத்தானை எல்லா
உயிர்களும் கை கூப்பி தொழும் .


திருமந்திரத்தில்
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை

கொல்லாமல் கொன்றதைத் தின்னாமல்
- பட்டினத்தார்

அனைத்து உயிரினங்கள்பாலும் கருணை காட்டுவதே ஜீவ காருண்ய ஒழுக்கம்.'' ஆன்ம நேய ஒருமைப்பாடு '' என்பது ஜீவ காருண்ய ஒழுக்கத்தின் முழுமை வடிவம் என்றும் கொள்ளலாம்.

''ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின்சாரப் பொய்யாமை நன்று '' என்பது குறள்.

தலையாய அறம் கொல்லாமை என்று குறள் உரைக்கிறது.

''அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும் '' என்ற குறள், கொல்லாமைக் கோட்பாடே பிறவினைகள் அணுகுவதைத் தவிர்க்கும் என்பதைத் தெளிவாக்குகிறது.

கொல்லாமை மேற்கொண்டொழுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று
- குறள்.

கொல்லாமை, பொய்யாமை, களவாடாமை, மிகுபொருள் விரும்பாமை,

பிறன் மனை விழையாமை ஆகியவை 'அணு விரதம் ' என சொல்லப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் கொல்லாமைக் கோட்பாட்டை எடுத்துக்கூறும் பல பகுதிகளைக் காணலாம். அறம் எனப்படுவது ஆரூயிர் ஓம்பல், விரதம்,

எனப்படுவது பிற உயிர் கொல்லாமை' என்ற பொருள் பொதிந்த பாடல்களை நாம் காணலாம்.

''பொய்யாமை நன்று பொருள்நன்று உயிர்நோவக்
கொல்லாமை நன்று கொழிக்கும்கால் ''
-சிறுபஞ்சமூலம் .39.

" கொல்லாமை நன்று கொலைதீது எழுத்தினைக்
கல்லாமை தீது கதம்தீது - நல்லார்
மொழியாமை முன்னே முழுதும் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி ''
-சிறுபஞ்சமூலம் ,51

கொன்றான் கொலை உடம்பாட்டான்
கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்கால் கொன்றதனை
அட்டான் அடவுண்டான் ஐயவரினும் ஆகுமென்
சுட்டெரித்த பாவம் கருது
-சிறு பஞ்சமூலம் ,70.

கொல்லான் உடன்பாடன் கொல்வார் இனஞ்சேரான்
புல்லான் பிறர்பால் புலால்மயங்கல் - செல்லான்
குடிப்படுத்துக் கூழ் ஈந்தான் கொல்யானை ஏறி
அடிப்படுப்பான் மண்ணாண்டு அரசு.ஏலாதி. 42

கொல்லாமல் கொன்றதைத் தின்னாமல்
- பட்டினத்தார்

கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே
-தாயுமானவர்.

உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்து உண்ணன் மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகழ்ந்து ஓரீஇக்
கதிகள் நல்லூருக் கண்டனர் கைதொழு
மதிகள் போல மறுவிலர் தோன்றுவீர்
-வளையாபதி.

கொன்றூ நுகரும் கொடுமையை உள்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல் - என்றும்
இடுக்கண் எனவுண்டோ இல்வாழ்க்கைக் குள்ளே
படுத்தானாம் தன்னைத் தவம்
- அறநெறிச்சாரம் 63

புலையும் கொலையும் களவும் தவிர்.
- கொன்றை வேந்தன்

ஊன் ஊண் துறமின் ! உயிர்கொலை நீங்குமின்
- சிலப்பதிகாரம்

தன்னுயிர் தான் பரிந்து ஓம்புமாறு போல்
மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
இன்னுயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்ப்
பொன்னுயி ராய்ப்பிறந்து உயர்ந்து போகுமே..- சீவக சிந்தாமணி

இவ்வுலகின் எவ்வுயிரும் எம்முயிரின் நேர் என்று
அவ்வியம் அகன்று இருள் சுரந்து உயிர் வளர்க்கும்
செவ்விமையின் நின்றவர் திருந்தடி பணிந்து உண்
எவ்வினை கடந்துயிர் விளங்குவிறல் வேலோய்
- யசோதர காவியம்

யசோதர காவியத்தில் கோழியைக் கொல்வது பாவம் என்று எடுத்தோதப்படுகிறது.

யசோதரன் அல்லல்(பாவம்) தீர கோழியைப் பலியிட முனையும் போது, சிந்தனையில் இம்சை எண்ணம் இருப்பதே பாவம் என்று தாய் யசோதமதி

அறிவுரை கூறுவதை பின் வரும்பாடலில் காணலாம்.

இன்னுமீது ஐய கேட்க
யசோதமதி தந்தை யாய
மன்னவன் அன்னையோடு
மாவினிற் கோழி தன்னைக்
கொன்னவில் வாளில் கொன்ற
கொடுமையிற் கடிய துன்பம்
பின்னவர் பிறவி தோறும்
பெற்றன பேச லாமோ

தன்னுடைய வழி பயணத்தில் புலால் உண்ணாமையையும் கொல்லாமையும் போதித்த சீவகனை சிந்தாமணியில் திருத்தக்க தேவர் காட்டுகிறார். மேரு மந்திர புராணம் என்ற இன்னொரு காப்பியமும் இந்தக் கொல்லாமைக் கோட்பாட்டைப் போதிக்கிறது. கொல்லாமை விரதத்தைப் பின்பற்றாவிட்டால் கொடு நரகு கிடைக்கும் என்று அச்சுறுத்துகிறது.

கொல்லாமை தவிர்த்தல் என்பது தமிழர்களிடையே தொன்று தொட்டு வந்த மரபாகும். திருவள்ளுவர் உள்ளிட்ட அனைவரும் கொலையும் , கொல்லாமையும் தவிர்க்க கோரினார்கள். அதற்கு மகுடம் வைத்தார் போல் வள்ளலார் கொலை, புலால் ஒழித்தல் கொள்கையை தீவிரமாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உயிர் எல்லாம் பொதுவில் உளம்பட நோக்கவேண்டுமாயின் அதற்கு அடிப்படையாக அமையவேண்டியது அன்பும் , கருணையும் ஆகும். எவ்வுயிரையும் தம் உயிர்போல் பாவித்து " அன்பு செய்தல் வேண்டும். இப்படிச் செய்வோர் உள்ளத்திலேதான் இறைவன் தங்கி உறைவன்"

என்று தம் கருத்துக்களை வல்லளார் வலியுறுத்தி வந்தார். தாம் கண்ட
இந்த நெறிக்கு 'சமரச சுத்த சன்மார்க்கம்' என்று பெயரிட்டார்.

ஒரு பெண்ணை ஆணாக்கினாலும் , அல்லது ஒரு ஆண் மகனை பெண்ணாக்கினாலும் ஜீவகாருண்யம் இல்லாவிட்டால் அவரை ஞானி என்று கூறக்கூடாது. என்பதை பின் வரும் பாடல் மூலம் அறியலாம்.

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்
கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே
திருவருட்பா 184

மேலும் கீழ்வரும் திருவருட்பா பாடல்கள் அனைத்தும் கொல்லாமையை
வலியுறுத்துகின்றன. திருவருட்பா ( 4161 -4163)

உயிர் கொலை தவிர்த்தோர் –அக இனத்தார் மற்றவர்கள் புற இனத்தார் என்பதை இந்த பாடல் கூறுகிறது...

உயிர்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே

இறைவனே ஜீவகாருண்யம் என்னும் பசி தவிர்த்தல் புரிக, அனைவருக்கும் துன்பம் தீர உதவி புரிக என்று உரைத்ததாக உள்ள பாடல்கள்.

வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்
மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில்
அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக
அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே
இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்
ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே
துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றதிருப் பொதுவில்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே

கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே

இவ்வாறு பல பாடல்கள் மூலம் கொல்லாமையை வள்ளலார் வலியுறுத்தினார், ஆனால், இன்றைய நாகரீகம் என்ற போக்கு ஊனினை சுருக்கி உள்ளொளியினை வளர்க்க மறந்து, எந்த ஒரு சுப –அசுப நிகழ்ச்சிகளுக்கும் ஊனை தின்று உயிரை வளர்க்கிறது.


1 comment:

  1. கதிக்குவழி காட்டுகின்ற கண்ணே என்கண்ணில்
    கலந்தமணி யேமணியில் கலந்த கதிர் ஒளியே...

    தி.,அருட்பா.,அருள்விளக்கமாலை...8


    ReplyDelete

Popular Posts