ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சமாதிப்பழக்கம் பழக்கம் அல்ல சகஜப்பழக்கமே பழக்கம்

பல மகான்கள் தங்கள் உயிரை ஆதாரத்தில் ஒடுங்க செய்து
விடுவதால் புறச்செயல் அற்று சமாதியில் ஆழ்ந்து விடுகின்றனர்,
இப்படி சமாதி கூடி அறிதுயில் கொள்வது ஒன்றும் மேலானது அல்ல
என் வள்ளலார் கூறுகிறார், உயிர் அரியாது ஒடுங்குவது தூக்கம்,உயிரை
அறிந்து ஆதாரத்தில் ஒடுக்குவது சமாதி.

உயிரை அறிந்து ஆதாரங்களில் ஒடுங்கிவிடாமல் உணர்வோடு இருப்பது
ஞான நிலை! மோன நிலை. சமாதியில் மூழ்குவது பெரிதல்ல .
உயிர் அனுபவம் பெற்ற பேரின்ப நிலையிலே எப்போதும் இருப்பது சிறப்பு

சகஜ நிலையிலே எப்போதும் இருப்பதுவே மரணம் இல்லா
பெருவாழ்வுக்கு வழியாகும்

- சாகாக்கல்வி - ஞான சற்குரு சிவசெல்வராஜ்.



யோக நிலை அனுபவத்தில் ஒவ்வொரு நிலை அனுபவமும் பெற 8 முதல் 12 வருடம் வரை ஆகும். அதற்கு நமக்கு காலம் இல்லை என பெருமான் உரைநடைப் பகுதியில் கூறியுள்ளார்.

எனவே இந்த ஆறு நிலைகளை கடந்து செல்வது மிகக்கடினமானதாகும். சுத்த சன்மார்க்கத்தின் அனுபவநிலை ‘கண்டத்திற்கு மேல்’ என பெருமான் கூறியுள்ளதை கருத்தில் கொண்டு, நாம் புலை, கொலை, சாதி, சமய பேதங்களைத் தவிர்த்து எவ்வுயிரையும் தம்முயிர்போல பாவிக்கும் உணர்வை வரவழைத்துக் கொண்டால் அதி சீக்கிரமாக சுத்த சன்மார்க்க அனுபவ நிலைகளுக்கு செல்லலாம்.

எனவே சன்மார்க்க அன்பர்கள் ஆறு நிலை அனுபவமான யோக நிலை அனுபவத்தில் முயற்சிப்பது தேவையற்றது. மனதை எப்பொழுதும் புருவ மத்தியில் வைத்துப் பழகுதல் வேண்டும். மனம் அடங்கினால் காற்றும் அடங்கும், காற்று அடங்கினால் அருள் அனுபவம் கூடும்.


இதற்கு உபாயமாக திருவருட்பா பாடல்களை மெல்லெனப்பாடுதல், தியானம், தெய்வபாவனை போன்றவை செய்தல், மேலும் உண்மையான உயிர்இரக்க உணர்வோடு ஜீவகாருண்யப் பணி செய்தாலும் அருள் நிலை அனுபவம் உண்டாகும்.


யோக நிலை அனுபவங்கள் – மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா என்ற ஆறு நிலைகளிலும் யோக நிலை அனுபவங்கள் ஏற்படுவது இயல்பு என சித்தர்களும், யோகிகளும் கூறியுள்ளனர்.

இந்த யோக நிலை அனுபவங்கள் ஒவ்வொன்றும் பல சித்துவேலைகளைச் செய்யத்தூண்டும். அப்படி சித்து வேலைகளை செய்தால் சன்மார்க்கத்தின் மேல் நிலை அனுபவமான ‘மரணமில்லாப் பெரு வாழ்வு பெற’ தடை ஏற்படும்.

எனவே தான் சமாதிப்பழக்கம் பழக்கம் அல்ல சகஜப்பழக்கமே பழக்கம் எனவும் பெருமான் கூறியுள்ளார். ஏனெனில் யோக நிலை அனுபவத்தில் “சமாதியில்” சென்று தான் முடிவடையும்.

http://www.vallalarspace.com/VallalarVarugai/Articles/2178

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts