குயிற்பத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குயிற்பத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 செப்டம்பர், 2026

18. குயிற்பத்து



18. குயிற்பத்து

“கீத மினிய குயிலே கேட்டி யேல்
எங்கள் பெருமான்
பாத மிரண்டும் வினவில் பாதாளம்
ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து
நின்ற தொன்மை
ஆதி குணமொன்று மில்லான் அந்தமி
லான் வரக் கூவாய்”

இனிய குரலை உடைய குயிலே கேட்பாய்! எங்கள் பெருமான் பாதங்கள் இரண்டும் பாதாளம் ஏழுக்கும் கீழே கீழே கீழே உள்ளதாம்! ஒளிமிகு மணிமுடி சிரம் சொல்ல முடியாத அளவு உயரே உயரே உயரே மேலே ஆகாயத்தில் மேலே மேலே உள்ளதாம்! மிகப் பழமையான இன்ன காலம் என்று அறியப்படாத காலத்துக்கு முன்னமேயே உள்ள ஆதி முதல்வன்! குணமொன்றும் இல்லாதவன்! குணாதீதன்! அந்தமில்லாதவன் - முடிவேயில்லாதவன் அவனை வரக் கூவுவாய் குயிலே!

“ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுருவும்தன் னுருவாய்
ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர்வண்டோ தரிக்கும்
பேரரு ளின்ப மளித்த பெருந்துறை
மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி
நாடனைக் கூவாய்”

மேல் ஏளுலகமும் போற்றி புகழும் படி எவ்வுருவும் தன்னuruவான தாயபாரன்! கடலால் சூழப்பட்ட அழகான தென்னிலங்கை நாட்டின் மகாராணி மண்டோதரிக்கு பேரருள்-பேரின்பம் தந்து புக்தியருளிய திருபெருந்துறை மேவிய பிரான்! உன் சீர் மிகு வாயால் குயிலே தென் பாண்டி நாட்டானை கூவி அழைப்பாயாக! இலங்கையின் இராவணன் ஒப்பற்ற சிவபக்தன்! தன் சிறுமதியால் செய்த ஒரு தவறால் இராமபிரான் கையால் மாண்டான்! அந்த இலங்கை வேந்தன் தசங்கன் இராவணனின் உத்தம பத்தினியே மனைவியே மண்டோதரி! சிவன் அவளுக்கும் புக்தியளித்தான்!! கணவனே தெய்வமாக வாழ்ந்த உத்தம பத்தினியானதால்!

நீல வுருவிற் குயிலே நீண்மணி
மாட நிலாவும்
கோல அழகில் திகழுங் கொடிமங்கை
உள்ளுறை கோயில்
சீலம் பெரிதும் இனிய திருவுத்
தரகோச மங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயக
னைவரக் கூவாய்”

கருநீல நிறங்கொண்ட குயிலே நீண்ட மணிமாட நிலாவும் - கருநீல நிறங்கொண்ட நம் கண்மணியே இடப்பாக நிலாவான - இடது கண்ணே சக்தியம்சம் ஒலி - நாதம் தோன்றி கேட்கும் தலம்! வலப்பாகம் சூரியன் - ஒளி - வலதுகண் சிவஅம்சம் ஒளி தோன்றும் இடம்! ஒளி ஒளியே மெய்ஞ்ஞானத்தின் ஆதியும் அந்தமும்! அழகான வடிவம் கொண்ட கொடி மங்கை உள்ளுறை கோயில் - நம் இருகண் உள்ளே சேரும் இடமே! புகழ் வாய்ந்த ஒப்பற்ற உத்தரகோச மங்கை இருக்கும் இடம்! அத்தாய்க்கு தலைவனை நாயகனை உலகை காத்து அருளும் உத்தமனை அழைத்துவாகுயிலே!

“மன்னன் பரிமிசை வந்த வள்ளல்”

மாணிக்க வாசகருக்காய், நரியை பரியாக்கி குதிரைக்காரனாக குதிரைமேல் வந்த வள்ளல் இறைவன் திருப்பெருந்துறை மேவிய பிரான்!

“விண் பிளந் தோங்கி மேவிஅன் றண்டம் கடந்து
விரிகட ராய்நின்ற மெய்யன்”

திருமாலும் நான்முகனும் முன்பு அடிமுடி தேடி விண்ணுக்கும் பாதாளத்துக்குமாய் போனார்களே! அப்போது விண்ணை பிளந்து மேல்மேலும் ஓங்கிமேவி அண்டம் கடந்து விரிசுடராய் - பெரும்

நெருப்பு மலையாய் நின்றவன் நம் இறைவன்! அவன் யார் தெரியுமா?! மெய்யன் - நம் மெய்யிலே உள்ளவன்! நம் மெய்யிலே உள்ள இறைவனை வெளியேயா தேடுவது?! மெய்யிலே - உடலிலே தான் உயிராக உள்ளான் மெய்யன்! அதை உணர்ந்து திருமாலும் பிரம்மனும் காண அடிமுடியை நாம் நமக்குள்ளே காணலாம்! இறைவன் நம் மீது கருணை கொண்டு அருளியுள்ளான்! தகுந்த ஞானசற்குருமூலம் ஞானோபதேசம் ஞானதீட்சை பெற்று இறைவனடிகண்டு சரண்புகுங்கள்!

“சீருடைச் செங்கம லத்தில் திகழுருவாகிய செல்வன்”

இறைவன் நமக்கு அருளியசீர் நம் இரு கண்கள்! உள்ளிருக்கும் தாய்வீட்டு சீதனம் நம் இரு கண்கள்! அது ஞானதவம் செய்யும்போது வெள்ளை தாமரையாக இருப்பது செங்கமலமாகிவிடும்! செந்தாமரை மலர் போலாகிவிடும்! கண் மணி ஒளி தவத்தால் பெருகும் போது கண் சிவந்து செங்கமல கண்ணாகும்! அங்கே திகழும் - நடமாடும் செல்வன் தான் நம் இறைவன்! நம் தலைவன்! ஒப்பற்ற கருணையே உருவான ஞானசெல்வன் இறைவன் நமக்கு அருளியதே நம் கண்ணாகிய செல்வம்! சீர்! கண்ணே நம் செல்வம்!

“அந்தண னாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி
எந்தம ராம்இவன் என்றிங் கென்னையும் ஆட்கொண்டருளும்
செந்தழல் பால்திரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய்”

திருப்பெருந்துறையிலே அந்தணனாகிவந்து அழகிய சேவடி - திருவடி காட்டி ஞான தீட்சை அருளி, என்னவன் - எந்தமர் இந்த மாணிக்க வாசகர் என்று என்னையும் ஆட்கொண்டருளும் செந்தழல் போல் திருமேனி கொண்ட தேவர் பிரான் வரக் குயிலே கூவி அழைப்பாய்! இறைவன் செந்தழல் மேனியான் - அக்கினி சொரூபம்! ஜோதிஸ்வரூபம்! தங்கம் போல் தகதகக்கும் ஜோதியானவன்! தங்கஜோதி!


Deeksha - Upadesam -Satsang - www.vallalyaar.com

Popular Posts