"வேதநூல் பிராயம்நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு பேதை
பாலகனதாகும் பிணிபசி மூப்புத் துன்பம் ஆதலால்
பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே"
- பாடல் -874
அரங்கமாநகரமான கண்மணி உள் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமா!
வேதம் உரைத்த படி மனிதனின் ஆயுள் நூறு வருடம் என்றாலும் அதில் பாதி தூக்கத்தில் கழிந்து போகும்! மீதி 50 ஆண்டில் பதினைந்து ஆண்டுகள் குழந்தைப் பருவத்திலும் போய்விடும்! அதன்பின் ஆசையில் அலையும் வாலிபப்பருவம் விவரம் இல்லாத பருவம், பலகாலும் நோயால் பீடித்த நிலை, தினமும் மூன்று வேளையாவது உணவு உண்ணும் வேளை, வயோதிக பருவம் இப்படி பல்லாண்டுகள் கழிந்துவிடுமே!? கஷ்டம் நஷ்டம் துன்பம் வேதனை இப்படி காலம் வீணாகுமே!
நீ வாழ்ந்த நாள் எத்தனை?
100 வருடத்தில் நாம் எத்தனை நாள் இறைவனை நினைந்து உணர்ந்து வாழ்ந்தோம்!
இப்படிப்பட்ட வீணான மானிட பிறவி எனக்கு வேண்டாம்!
இப்படிப்பட்ட மானிடன் பாவச்செயல்கள் பல செய்து சாகும் நேரத்தை தேடி ஓடுகிறான்! நல்லோரை சார்ந்து 👁️கண்ணனை👁️ எண்ணி பொய்த்தேகமதை புண்ணிய தேகமாக மாற்றுங்கள்!
இறைவனை🔥 உணர்ந்து எவ்வுயிரையும் நேசியுங்கள்! பரமபதம் கிட்டும்!👁️🔥👁️
பக்கம் 100
உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக