ஞாயிறு, 18 ஜூன், 2023

🔥 சத்தியஞானசபை - ஞானவிளக்கம் 🔥



நூல் : உலககுரு வள்ளலார் 30

🔥 சத்தியஞானசபை - ஞானவிளக்கம் 🔥


திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பல்லாண்டுகளாக பல்வேறு உபதேசங்கள் வாயிலாகவும், ஆறாயிரத்துக்கும் மேற்ப்பட்ட பாடல்கள் மூலமாகவும் மரணமிலா பெருவாழ்வுக்கு வழிகாட்டினார்கள் !!

அப்போதும் வள்ளலார் திருப்தியடையவில்லை !

உலகுக்கு ஞானத்தை இன்னும் எப்படி சொல்லலாம் தெளிவுபடுத்தலாம் என்று சிந்தித்தார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வழிகாட்டினார் !

உலகுக்கு வள்ளலார் வழங்கிய அருட்கொடை "சத்திய ஞான சபை" உதயமானது !

இதுவரை இவ்வுலகில்,திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் பெருமான் திருப்பெருந்துறையிலே கட்டிய ஆவுடையார் கோவில் தான் மிகப்பெரும் ஞானவிளக்கமாய் இருந்தது. கருவறையிலே ஆவடை மட்டுமே !? இறைவன் உருவங்கடந்த நிலையிலே ஒலிஒளியாக திகழ்கிறான் என்பதால் லிங்கம் ஸ்தாபிக்கவில்லை ?! பீடம் மட்டுமே இருக்கிறது. இதன் உண்மை உணராத மூடர்கள் லிங்கத்தை கொண்டு வைத்தனர். ஆவடை மட்டுமே பீடம் மட்டுமே உள்ளதால் தான் அக்கோவில் ஆவுடையார் கோவில் ஆனது ஊர்பெயரும் ஆவுடையார் கோயிலே !

இன்றும் ஆவுடையார் கோவிலிலே திருவிழா மாணிக்கவாசகருக்கே !

மாணிக்கவாசகரை தெய்வமாகவே போற்றிய வள்ளலார் அவர் ஆசியோடு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளோடு உலகருக்கு வழங்கிய ஞானதானமே "சத்திய ஞான சபை". 25-01-1872 பிரஜோற்பத்தி வருடம் தை மாதம் 13-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரத்தன்று முதன்முதலாக சத்திய ஞானசபையில் வழிபாடு தொடங்கப்பெற்றது.

நாம் செய்த தவப்பயன் திருவருட்பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் தமிழ்நாட்டில் வடலூரில் சத்திய ஞான சபையை உருவாக்கியது !! ஒரு ஆண்டாக தானே முன்னின்று சபையை உருவாக்கினார்.

"சத்திய ஞான சபையை என்னுட் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்" என்று பாடுகிறார் !

நம் தலையின் அமைப்புதான் சத்திய ஞானசபை ! உள்ளே நடுவே சுடர்விட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்ஜோதி ! முன் இருபுறமும் சிற்சபை பொற்சபை !

வள்ளல்பெருமான் சத்திய ஞான சபை இயற்கை விளக்கம் என்பார் !
நம் அகத்தே தலையின் உள் நடுவே விளங்கும் நம் ஆத்மஜோதியை காணுதற்குரிய அனுபவத்தைப் புறத்தே அடையாளமாகக் காட்டுவதே சத்திய ஞானசபை !! நாம் ஜோதி தரிசனம் காண முடியாமல் அசுத்த மாயா திரைகள் ஏழு மறைத்துள்ளது !

வடலூரில் சத்தியஞானசபையில் ஏழு திரை நீக்கிய பின் தானே ஜோதிதரிசனம் காண்கிறோம் ?
அதுபோல, நம் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஏழு நிலைகளாக ஏழு திரைகளாக உள்ளது !

நாம் சிற்சபை பொற்சபையாகிய நம் இரு கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்யச் செய்ய இருகண் சூரியசந்திர ஜோதி உட்புகுந்து ஆத்மஜோதியை அடையும் அம்முயற்சியின் போது ஒவ்வொரு திரையாக விலகும் !

என்னென்ன கலர் ஒளி தெரியும் என்றும் நம் உலககுரு வள்ளலார் தெளிவாக கூறுகிறார் ! முடிவில் நம் ஆத்மஜோதி தரிசனம் நாமே காணலாம் !!

ஒவ்வொருமனிதனும் இப்படித்தான் ஞான தவம் செய்யணும் !

இன்னின்ன மாதிரி அனுபவம் கிட்டும் என வள்ளல் பெருமான்மிகமிக தெளிவாக ஞான அனுபவங்களை புட்டு புட்டு வைக்கிறார் !

"சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு"

என்றும் அகவலில் ஒவ்வொரு திரையின் தன்மையும் கூறி நம்மை பரவசத்திலாழ்த்துகிறார் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts