"இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லது மற் றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்று மல வெம்மாயை யற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம் "
துன்றுமல வெம் மாயை யற்று - கொடியமும் மலங்களான ஆணவமலம், கர்ம மலம் இதைவிட அதிக துன்பம் தரும் மகா மாயை மலம் ஆகியன இல்லாமலாகி வெளிக்குள் வெளி கடந்து - நம் கண்மணி உள்ளே அகண்ட பரவெளி உள்ளது. அதுவே உன் வெளி! அந்த உள் வெளிக்குள் வெளி கடந்து! " சும்மா இருக்கும் சுகம் " _ நம் மும்மலங்கள் இல்லாமலாகி நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்ளே உள்ள பரவெளியின் எல்லையை, உள்வெளி கடந்து போக வேண்டுமானால் " சும்மா இருக்கும் சுகம் " தெரிந்திருக்க வேண்டும்.
சும்மா இருந்தாலே- சுகம் பேரின்பம் கிடைக்கும்! நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்!? அது அதன் இயல்பான தன்மையில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும்i!
நீங்கள் ஏதாவது செய்தால் ஏதாவது பலன் கிட்டும்! உங்கள்செயல் - வினை - அதற்கு தகுந்த பாவ புண்ணியத்தை கொடுக்கும் ! ஏற்கனவே இருக்கின்ற வினையோடு இந்த வினையும் சேர்ந்து கொள்ளும்! கர்ம வினைகளை தீர்க்கின்றேன் என்று ஏதோ ஒரு சாதனை செய்து அறியாமல், புரியாமல் மீண்டும் மீண்டும் வினைகளை சேர்த்துக் கொள்கிறான் மனிதன்.
அதற்குதான் ஞானிகள், எதையாவது செய்தால் ஏதாவது வினை வந்திடும் அல்லவா? ஒன்றும் செய்யாமல் " சும்மா இரு" என்கிறார்கள்! சும்மா இருப்பது எப்படி? என்பதையே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருவருட்பாவின் மூலம் நமக்கு விளக்கி அருளியுள்ளார்கள்! இந்த சும்மா இருக்கும் திறனை உபதேசித்து தீட்சை வழங்குவதே மிகப் பெரிய ஞான நிலையாகும்!
இப்பணியில்தான் அடியேன் தொண்டாற்றுகிறேன்! வாருங்கள் சும்மா இருக்க ! வந்தால்! இன்றே கிட்டும்! நாளை வந்தால் நாளைக்கே கிட்டும்! நாளை, நாளை என நாட்களை கடத்தாதீர்! இப்படி ஒருவாய்ப்பு உங்கள் வாழ்வில் இனி என்று வருமோ?
ஞானசற்குரு
சிவ செல்வராஜ் ஐயா,
திருவருட் பிரகாச வள்ளலார் அருளிய "திருவருட்பாமாலை " நூலில் பக்கம் எண் 13
www.vallalyaar.com
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
வெள்ளி, 31 மே, 2019
வியாழன், 30 மே, 2019
ஆறறிவு பெற்றதுதான் கோளாறோ?
"உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகிச் செம்புலால் உண்டுவாழும் முதலைமேல் சீறிவந்தார்"
தேவர்களாலும் அறிய முடியாதவன் அருட்பெருஞ்ஜோதி! ஆண்டவன்! பரந்தாமன்!
பாற்கடல்வாசன்!
அந்த கருணைக்கடல், நதிக்கரையில் முதலை வாயில் அகப்பட்ட ஆனைக்காக,ஆதிமூலமே என்று ஶ்ரீமந்நாராயணரை கூவி அழைத்த கஜேந்திரனுக்காக ஓடோடி வந்து முதலையை சக்கராயுதத்தால் கொன்று இரட்சித்தானே!!
அந்த கருட வாகனனை கண்டு களிக்கும் நாள் எந்நாளோ?!
ஶ்ரீரங்கத்தின் அருகே திருவானைக்கா எனும் அப்புஸ்தலமான சிவ ஷேத்திரத்தில்,தினமும் காவிரி நீர் எடுத்து சிவனுக்கு துதிக்கையால் அபிஷேகம் செய்த ஆனைக்கு மோட்சம் அருளினான் சிவபெருமான்! அத்தலமே திரு ஆனைக்காவல் என்றாயிற்று!
ஓரறிவு முதல் ஐயறிவுவரை எல்லா ஜீவராசிகளுமே இறையருள் பெற்றிருக்க, ஆறறிவு பெற்ற நாம் இறையருள் பெற வேண்டாமா? ஆறறிவு பெற்றதுதான் கோளாறோ?
விதண்டா வாதம் புரியவும்,முட்டாள் தனமாக பேசுவதும், எல்லாம் தெரிந்தவன் போல் நடப்பதும் தான் ஆறறிவு இல்லாத இந்த மனித குலத்தின் மிகப்பெரிய பண்பு! முட்டாள்கள்!!
நாலாயிர திவ்ய பிரபந்தம் எழுதி வருகிறேன். குருவாயூர் குட்டி கிருஷ்ணன் கோயில் அரவணை பாயாசமும் அமுத பஞ்சாரையும் அன்பர் ஒருவர் கொண்டு வந்தார்! சாரதா ஆஸ்ரமத்திலிருந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் முற்றோதல் நடக்கிறது வாருங்கள் என அழைப்பு வந்தது! ஶ்ரீமத் நாராயணன் அருள் கிட்டுகிறது! நாராயணா! நாராயணா!
பரமபதம்
பாடல்−899
ஞானசற்குரு சிவசெல்வராஜ்

வியாழன், 9 மே, 2019
மும்மலத்தில் பெரியது மாயை!
அந்த மனோன்மணிதாய்க்கு வாலைக்கு அகில லோக அன்னைக்கு சேவகம் செய்ய காத்திருக்கும் பேயும் பூதகணங்களும் 2 கோடியாகும்!
அவ்வாறு உள்ள 2 கோடி பூதகணங்கள் தான் உலகெங்கும் தாயின் கட்டளையை நிறைவேற்றும்
சேவகர்கள்!
மிகப்பெரிய இரகசியம் இது!
சித்தர் சொன்ன இரகசியம்!
ஆய்ந்து அறிந்து அறிய முடியாத மனோவாக்கு காயத்துக்கு அப்பார்ப்பட்ட அந்த அரனுக்கு இவளே எல்லாமாம்!
ஆதி சக்தியாகி படைத்ததால் தாய்!
சிவத்தோடு சக்தியாக ஒளியோடு ஒலியாக இரண்டற கலந்து நிற்பதால் சிவசக்தியாய் துலங்குவதால் மனைவி!
உயிரெல்லாம் சக்தியம்சமல்லவா சிவம் படைத்தாரல்லவா எனவே உயிரை படைத்ததால்
உயிராக உள் பாதியாக சக்தி துலங்குவதால்\ மகளுமாவாள்!
ஆஹா அற்புதம்!
எவ்வளவு பெரிய உண்மை ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள் பரிபாலனம் செய்வதற்காக
பூதகணங்கள் உள்ளன!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கில் உள்ளது!
"நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலாயிரம் பேர் முருகப்
பெருமானின் பூதகணங்களின் எண்ணிக்கை நாலாயிரம்!
வீரபாகு முதலானவர்கள்!
முருகனின் கணங்கள் தான் முதலில் வந்து அடித்து நொறுக்கி நம்மை பக்குவப்படுத்தி ஞானப்பாதைக்கு அழைத்துச் செல்வர்!

தாயே வாலையே என மகாமாயையை பணிந்தால் அரவணைப்பாள்!
மும்மலத்தில் பெரியது மாயை!
எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிப்பாள்!
தாயே என்று சரணடைந்தால் மட்டுமே தப்பலாம்!
உலகத்திலுள்ள எல்லா பெண்களையும் தாயாக
பார்த்தால் மட்டுமே தப்பலாம்!
அபிராமிபட்டரைப் போல!
அழுதால் அமுதம் தருவாள்!
ஞானசம்பந்தருக்கு தந்ததுபோல!
பசித்தால் சோறு தருவாள் வள்ளலாருக்கு தந்ததைப் போல!
இன்னும் சொல்லிக் கொண்ட போகலாம் அன்னையின் மகிமையை!
அடியேனையும் சாவிலிருந்து காத்தருளினாள்!?
இன்றும் படியளக்கிறாள் அவள் சொன்னது போல!?
எம்மைப் பொறுத்தவரை எல்லாமே தாய்தான்!
வாலைதான்!
கன்னி'ய'குமரி பகவதி அன்னை சரணம்! சரணம்! சரணம்!
நூல் : மந்திர மணி மாலை
பக்கம் : 109
குருவின் திருவடி சரணம்
தோணி போன்ற கண்களிலே ஒளியிலே மனதை நாட்டி....
மனம் என்னும் தோணிபற்றி மதியென்னுங் கோலை துடுப்பாக யூன்றி
சினம், கோபம், பொறாமை முதலிய துர்குணங்களை சரக்காக ஏற்றிக்கொண்டு
சம்சார சாகரத்திலே பெருங்கடலிலே போகும் போது
காமம் என்னும் பாறை தாக்கி, மோதி கவிழ்ந்து விட்டதாம்!
நம் காயக்கப்பல்! ஏன் இந்த அவலம்!
எத்தனையோ பிறவியாக இப்படியே கழிகிறது!
நம் காயமாகிய கப்பல், நம் உடலாகிய தோணி பிறவிப்
பெருங்கடலை தாண்டி கரை சேர வேண்டுமாயின், பரம்பொருளை(சற்குருவை)
நினைத்து உணர்ந்து ஞானதவம் செய்யவேண்டும்!
தோணி போன்ற கண்களிலே ஒளியிலே மனதை நாட்டி நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தால் ஊன்றியிருந்து தவம் செய்தால் கண் ஒளி பெருகி நம் துர்குணங்களை அகற்றி வினையாகிய சரக்கு இல்லாமல், காமம் எனும் பாறையில் மோதி கவிழாமல் பத்திரமாக போய்சேரலாம்!
எப்படி? யாரால்?
நம் காயக்கப்பலுக்கு மாலுமி தான் கண்மணி ஒளி!
மாலுமியான ஒளி நம் உடலாகிய கப்பலை ஒட்டிச்சென்று பத்திரமாக கரை சேர்க்கும்!
எந்த கரை? இறைவன் இருக்கும் அக்கரையிலே!
*அக்கரை போகவேண்டுமென்ற அக்கறை நமக்கு இருந்தால் மட்டுமே, மாலுமியை நம்பி நம் காயகப்பலை ஒப்படைத்தாலே நாம் கரை சேரமுடியும்!*
மாலுமியை நம்பு! பிறவிப் பெருங்கடல் கடக்கலாம்!

ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா
நூல் : மூவர் உணர்ந்த முக்கண்
பக்கம் : 102
குருவின் திருவடி சரணம்
நூல் : மூவர் உணர்ந்த முக்கண்
பக்கம் : 102
குருவின் திருவடி சரணம்
லேபிள்கள்:
ஞானதவம்,
துர்குணம்,
தோணி,
பிறவிப் பெருங்கடல்
உஞ்சைவிருத்தி
“நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே"
பாடல் - 1888
சதா சர்வ காலமும் இறைவனையே நினைந்து நினைந்து தவம் செய்யும் மெய்யடியார்கள் சாப்பாட்டைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள்!
ஒரு ஜாண் வயிற்றை நிரப்ப ஆகாரம் தேடி அதற்காக சம்பாதிக்க போகமாட்டார்கள்!
தேவையெனில் பிச்சை எடுப்பர்! அது நான் என்னும் ஆணவத்தை விட்டொழிக்கும்!
உண்மையான சன்னியாசியின் இலட்சணமே "உஞ்சைவிருத்தி” தான்! அதாவது பசித்தால் புசிக்க பிச்சை எடுத்து உண்பான் அவனே உண்மையான சந்நியாசி!
"இருக்கும் இடம் தேடி என் பசிக்கு உருக்கமுடன் உணவு கொண்டு வந்தால் உண்பேன் அல்லது உண்ணேன்" என பட்டினத்தார் கூறினார்.
பட்டினத்தார் சீடர் பத்திரகிரியார் பிச்சையெடுத்து குருவுக்கு கொடுத்து மீந்ததை தான் சாப்பிட்டு மோட்சம் பெற்றார்!
அந்த பரமனே பிரம்ம கபாலத்திலே பிச்சையெடுத்துத்தான் உண்டார்!
அந்த பரமன் போட்ட பிச்சைதானே நம் உயிர்! மறக்கலாமா?
ஆணவம் அழிய வேண்டுமானால் நீயும் பிச்சையெடு! உயிர்பிச்சை போட்டவனை

அப்போதுதான் உணர முடியும்!
ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா
நூல் : மந்திர மணி மாலை
பக்கம் : 158
குருவின் திருவடி சரணம்
ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா
நூல் : மந்திர மணி மாலை
பக்கம் : 158
குருவின் திருவடி சரணம்
www.vallalyaar.com
லேபிள்கள்:
உஞ்சைவிருத்தி,
பிச்சை,
மெய்யடியார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
வெண்ணிலாகக் கண்ணி "தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே " தன்னை அறிந்தாலே இன்பமுறலாம்...