சனி, 12 ஜனவரி, 2019

பூ - தலத்திலே இறைவா நீ இருப்பதை அறிந்து

அத்தேவர் தேவர் அவரதேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிக் புலம்புகின்ற புதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றற நான் பற்றி நின்ற
மெய்த்தேவர் - திருக்கூத்தும்பி



அந்த தேவர் - கடவுள்! அந்த தேவதை தான் கடவுள், என
உண்மையறியாமையால் தெய்வம் எது? தேவதை எது என்ற
விவரமில்லாமல் கண்ட கண்ட கோவிலை தேவதையை கொண்டாடும் உலகர்!
தான் சொல்வது தான், இந்த தெய்வம் தான், இதுதான் தெய்வம் என்று
பொய் பல பேசி புலம்புகின்றார்கள் இன்றும்!?

பூதலத்தே - உலகிலே! ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகு ஆதலால் பூதலம் என்றார் மாணிக்கவாசகர்! இப்படிப்பட்ட உலகிலே எந்த பற்றும் இல்லாமல் எனை தடுத்து காத்து , இறைவனை அறியாத எனக்கு தன்னை அறிவித்து நான் வேறு பற்றின்றி அந்த இறைவனையே பற்றிட அருள்புரிந்தான் மெய்த்தேவன்!

இறைவன்! சிவம்! என் கண்ணிலே குடிகொண்ட ஒரே மெய்த்தேவன்! நம் தேவன் நம் மெய்ப்பொருளிளே உள்ள ஒளியே! வேறு தெய்வமில்லை! திருவடியை பணி !

பூ - தலத்திலே - பூ போன்ற கண்மலராகிய தலத்திலே இறைவா நீ இருப்பதை அறிந்து என் மெய்யிலே
உள்ள தேவராகிய உன்னை நான் பற்ற, பூதலத்தில் பற்றியுள்ள என் மும்மலப் பற்றை அறுத்த
இறைவா! உலகுக்கு நீ ஒருவனே தேவன்!


ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts