"இருதயந் தன்னில் எழுந்த பிராணன் "
- பாடல் - 2761
இரு உதயம் - இருதயம்! (இதயம்)
வலது கண்ணில் சூரிய உதயம்
இடது கண்ணில் சந்திர உதயம்!
இரு கண்களே இருதயம் எனப்படும்.
இதுவே ஞான விளக்கம்! மார்பல்ல இருதயம்?
"இருதயத்தில் சுத்தமுடையவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் " இது பைபிள் வாசகம்!
இருதயமான இரு கண்ணிலும் ஒளியை தூண்டி தூண்டி கண்ணீர் விடவிட கண்மணி ஊசிமுனை துவாரத்தை மூடியிருக்கும் அழுக்கு மும்மலம் அகன்று இரு - கண்ணும் - இருதயம் சுத்தமாகும்! அவரே உள் ஒளியை தேவனை தரிசிப்பர்!
எவ்வளவு உயர்ந்த ஞானம் இது! உலகில் தோன்றிய எம்மத ஞானியும் இதைத்தானே கூறுகின்றனர்! பின் ஏன் அடித்துக் கொள்கிறீர்கள்?! இரு கண்மணி ஒளியைத் தூண்டி ஞான சாதனை செய்யச் செய்ய ஞானக் கனல் எழும்பும் பிராணன் ஏழும்பும் உள் ஒளியோடு கூடும்!
ஆத்ம ஜோதி தரிசனம் கிட்டும்!
பிராணன் என்றால் உயிர் சக்தி! பிராண வாயு வல்ல! ஒளிசக்தி!
திருமூலர் பக்தி கர்மம் யோகம் ஞானம் எல்லாம் சொல்லியிருக்கிறார்! ஞானமே முடிந்த முடிவாம் | ஞானமே பெறுவதே பேரின்பம் தரும்!
ஞானத்துக்கு நாம் நாட வேண்டியது ஒளியையே! இறைவன் பேரொளியல்லவா !
ஞானசற்குரு
சிவ செல்வராஜ் ஐயா,
நூல் : மந்திரமணி மாலை,
பக்கம் எண் : 202
Www.VallalYaar.Com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக