புதன், 28 ஆகஸ்ட், 2013

புண்ணிய விளக்கம் - அடியார் பணி அருளவேண்டல்


பாடற் கினிய வாக்களிக்கும்
பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம்
கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சே நீ
அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும்
சிவாய நமஎன் றிடுநீறே.

பாடும் திறன், பஞ்சமில்லா எப்போதும் கிட்டும் உணவு, நல்ல தவம் செய்யும் அடியவர் கூட்டம் தரும் சத்சங்கம், நல்ல குணவானாக திகழ்வான்...பயப்படாதே இதெல்லாம் நடக்கும்...என் மேல் ஆணை என்கின்றார் வள்ளல்பெருமான்! சிவாயநம என இறைவன் நமக்கு வழங்கிய சீர் - கண்மணி ஒளி! அதைத் தேடிக் காண்பதே இனிமையான அனுபவம்.


அடியார் பணி அருளவேண்டல்

எப் பாலவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள் என்
அப்பா உன் பொன்னடிக் கென் நெஞ் சகம் இடமாக்கிமிக்க
வெப்பமான நஞ்சன வஞ்சகர் பாற் செலும் வெந்துயர் நீத்த
இப்பாரில் நின்னடி யார்க்கேவல் செய்ய வெனக்கருளே

எவ்வுலகில் உள்ள எவரும் வணங்கும் தணிகையான கண் மணி ஒளியான என் அப்பா! உன் பொன்னடிக்கு என் நெஞ்சகத்தில் இடங்கொடுத்து அருள் புரிவாயாக! தீயவர்கள் பக்கம் நான் போகாமால் தடுத்து என் வினையகற்றி உன் மெய்யடியார்க்கு தொண்டு செய்ய அருள் புரிவாயாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts