வியாழன், 4 ஜூலை, 2013

மனதை நிறுத்தும் இடம் ?


மதி என்றால் சந்திரன் நமது இடது கண்! நமது கண்ணில் பிறக்கும்போதே விதிக்கப்பட்ட கர்மாக்கள் சேர்ந்தே கண்மணியோடு உள்ளது! அதையே விதி பிராரப்தம் என்பர்! அந்த மத்தியில் உள்ள விதியை இல்லாமல் செய்தாலே வாழ்க்கை மேம்படும்!

இறைவனை உணரவும் விதியை நொந்து வாழாமல் வாழ்வாங்கு வாழ ஒரு வழி  - உபாயம் உள்ளது. அது நம் மனம் அடங்கும் இடத்தில தவம் செய்வது ஆகும்  அதாவது நம் கண்மணி வாசலில் உள்ள சவ்வே நம் வினை தொகுதியான விதி! அதிலிருந்து செயல் படுவதே மனம் !

கண்மணி வாசலில் இருந்து விதியாகிய சவ்வில் இருந்து புறப்படும் மனதை வெளியே வர விடாது அதை அதிலே நிறுத்துவது தான் சாதனை! தவமாகும்! மனதை நிறுத்தும் இடம் அது புறப்படும் இடமே! அங்கு மட்டும்  தான் அடங்கும். நாம் நம் மனதை அங்கு மட்டுமே நிறுத்த முடியும்.இப்படி செய்து சும்மா இருப்பதுவே ஞான சாதனை !  பரம ரகசியம்!

இதை தெரிந்த அறிந்த உபதேசிக்கும் குருமார்களை வணங்கிடவும் தெரியவில்லையே! எந்தை இறைவன் இருக்கும்  மணிமன்றம் - கண்மணி உள் போக தெரியவில்லையே ! ஞான சற்குரு மூலம் தீட்சை பெற்று தவம் செய்தால் உட்புகலாம்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ மரணமில பெருவாழ்வு பெற்றிட வள்ளலார் வள்ளலார் நம் கண்மணியே மெய்ப்பொருள் என்றும் மணி ஒளியே  சிவம் என்றும் ஞான ரகசியங்களை வெளிப்படுத்தினார்! வருக எல்லோரும் வாழ்வாங்கு வாழலாம்!

-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

1 கருத்து:

Popular Posts