Saturday, October 27, 2012

சிறு தெய்வ வழிபாடு கூடாது, ஏன்?

சிறு தெய்வ வழிபாடு கூடாது என்றார் வள்ளலார் ! சித்தர்களும் ஞானிகளும் சிறு தெய்வங்களை வழி பட்டதே இல்லை!? சிறு தெய்வங்கள் எல்லாம் சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் ஏவல் செய்யும் மெய்க்காப்பாளர்களே! ஏவளர்களே! இறைவனின் செல்ல பிள்ளைகளான சித்தர்களும் ஞானிகளும் இட்ட கட்டளை படி பணிகளை செவ்வனே செய்பவை தான் சிறு தெய்வங்கள்! உலக நலன் கருதியே இப்பணி நடக்கும்! என் நண்பர் ஒருவர் தெய்வத்தில் பெரிசாவது சின்னதாவது ! ஒரே தெய்வம் தானே, நான் என் குல தெய்வத்தை தான் வணங்குகிறேன்! எனக்கு எல்லாமே அதுதான் என்றார்!? அவர் குல தெய்வம் 'சுடலைமாடன்'. இங்கே குமரி மாவட்டத்தில் உள்ள சுடலை காப்போன் சுடலை மாடன்! பெரிதாக வில்லுபாட்டு கதைகள் எல்லாம் உண்டு! ஒவ்வொரு ஊர் எல்லையிலும் இசக்கியம்மன் முத்தாரம்மன் என தேவதைளும் உண்டு! எல்லை காவல் தெய்வங்களே இவைகள்! ஊர் புறங்களிலே இது போல் தேவதைகள் எல்லாம் வைத்து வழி படுகிறார்கள் மக்கள்! இதில் கொடுமை என்றால்; உயிர் பலி தான்! வாய் இல்லா பிராணிகளை அந்த தேவதைகளுக்கு பலி கொடுக்கிறார்கள்! சுற்று புற ஊர்களிலே நடக்கும் இது போன்ற உயிர் பலியை வடலூரில் இருந்த போது வள்ளலார் தடுத்து நிறுத்தி நல்வழி காட்டியிருக்கிறார்!

ஆதி சங்கரர் காஞ்சி வந்த போது அப்போது மட மக்கள் ஏராளமான ஆடு, மாடுகளை காமாட்சி அம்மனுக்கு பலி கொடுத்து தான் வழிபட்டனர்! மிகவும் வருந்திய சங்கரர் காமாட்சியம்மனை துதித்தி மக்களுக்கு நல்ல புத்திமதி கூறி திருத்தினார். ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார்! பலி கொடுத்ததால் உக்ர ரூபமாய் இருந்தாள்! பாயாசம் படைத்தால் சாந்த ரூபமாய் அருளும் தாயாகிறாள்! இப்படி பற்பல ஊர்களிலும் யாரோ வழிகாட்டி மக்கள் தெய்வத்தை வணங்குவதை விட்டு தேவதைகளை வழி பட ஆரம்பித்து விட்டனர்.


அரபு நாட்டிலே முன்னூறுக்கும் மேல் உருவங்களை வைத்து வழி பட்டவர்களை திருத்தி, எல்லா வல்ல இறைவன் ஒருவனே அவனே "அல்லாஹ்"! அவனை மட்டுமே, ஒளியான அந்த ஒரே இறைவனை வழிபட வழிகாட்டினார்! முகமது நபி பெருமான்! தான் கண்ட ஒளியான எல்லோருக்கும் கூறி அவர் வழங்கிய திரு குரானை ஓதினார்! இயேசு பெருமானும் அவர் காலத்தில் மக்களிடையே இருந்த மூட பழக்க வழக்கங்களை மாற்றி தேவன் ஒருவரே அவர் ஒளியானவரே அவர் எல்லா மக்களுக்கு பிதா! அவரை தூய்மையான அன்பால் வழிபடுங்கள் என்று கூறி அருளினார்!


"துள்ளும் மரியாமனதை பலி கொடுத்தேன் துட்ட கன்ம தேவதைகளில்லை" என தாயுமான சுவாமிகள் நம் மனதை தான் பலி கொடுக்க வேண்டும் பிற உயிர்களை யல்ல! என்றும் துட்ட தேவதைகளை வழிபட வேண்டாம் என்றும் தெளிவாக கூறியுள்ளார். நமது பாரத பழம் பெரு நாட்டிலே தோன்றிய ஒவ்வொரு மகானும் சிறு தெய்வ வழிபாடு செய்ததேயில்லை?! ஆக உலகில் உள்ள எந்த மத ஞானி யானாலும், எல்லாம் வல்ல, அந்த பேரொளியை, இறைவனை, ஒரே கடவுளை, பரம் பொருளை, பரமாத்மாவைதான் அன்பால் வழிபட சொன்னார்கள்! தவம் செய்து இறைவனை அடையுங்கள் என்று கூறி,அடையுங்கள் என்று கூறி, அடைய வழியாக விழியையும் காட்டி சென்றுள்ளனர்! ஞானம் பெற விழி உள்புகு!

பாகவதத்தில் கிருஷ்ணபரமாத்மா இந்திர பூஜை செய்ய வேண்டாம் என கோகுல வாசிகளை தடுத்தார். கோவர்த்தன மலையை குடையாக பிடித்து எல்லோரையும் காத்தான். கடவுளை பணித்தால் தேவதைகள் ஒன்றும் செய்யாது.

சிறு தெய்வங்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவை! தந்திரத்தில் அடங்குவபவை! மனிதன் வசபடுத்தி விடலாம்! நல்லது கெட்டது நடக்கலாம். சிறு சிறு தேவதைகள் யார் என்றால், இறைவனால் இந்த பிரபஞ்சத்தை பரிசீலிக்க நிர்மாணிக்கபட்டவர்கள். தாம்!

சர்வ வல்லமை படைத்த இறைவன்

படைப்பு தொழில் புரிகையில் - பிரம்மா
காக்கும் தொழில் புரிகையில் - விஷ்ணு
மறைத்தல் தொழில் புரிகையில் - மகேஸ்வரன்
அருளல் தொழில் புரிகையில் - சதாசிவன்
அழிக்கும் தொழில் புரிகையில் - ருத்ரன்

என பஞ்சமூர்த்திகளாக விளங்குகிறார்! அந்த ஏக இறைவனின் அருள் அம்சங்களே! பஞ்ச பூதங்களான உலகை பரிபாலிக்க நவகிரகங்களை அஷ்டதிக் பாலகர்கள் ஒவ்வொரு காரியத்திற்கும் அதி தேவதைகள், இப்படி கடைசி வரை பூதகணங்கள் எல்லைக்காவல் தெய்வங்கள் வரை போகிறது!!

 நீ படைத்தவனை வணங்க வேண்டுமா ? இறைவனால் படைக்க பட்டவர்களை வணங்க வேண்டுமா? நாம் வணங்கி வழி படவேண்டியது சர்வ வல்லமை படைத்த எங்கும் நிறைந்த அந்த அருள் மயமான பெருஞ்சோதியை தானே!? அதை விடுத்து மாடன் கருப்பன் முனியன் என்று போனால் இந்த ஜென்மத்தில் விமோசனம் இல்லை! எல்லவற்றுக்கும் மேலான பரம்பொருளைப்பார்!

அது உன்னிலே உன் மெய்ப்பொருளாக விழியாக உள்ளதே! உன் கண்ணிலே மணியிலே ஒளியாக துலங்கும் எல்லாம் வல்ல இறைவனை பார்ப்பதை உணர்வதை விடுத்து ஊர் உலகெங்கும் தேடுகிராயே, உனக்கு அறிவு இருக்கிறதா? கையில் வெண்ணை இருக்க நெய்க்காக ஊரில் அலையாதே!
மதம் கிடையாது? ஜாதியே கிடையாது! நாடு மொழி வேற்றுமை கிடையாது?

ஒரு உண்மை சம்பவம் கூறினால் உங்களுக்கு புரியும்? என் சிறு தெய்வ வழிபாடு கூடாது என்று!? கேரளத்தில் ஓர் பித்தன் சித்தன் இருந்தான். மலையாள மொழியில் பிராந்தன் என்றனர் அவரை. அவர் பெயர் நாராயணன்! பிராந்தன் என்றால் பைத்தியகாரன்! உலக மக்களாகிய பைத்தியகார பயல்கள் அந்த ஞானிக்கு வைத்த பெயர் நாரணத்து பிராந்தன்! எப்படி? ஒரு நாள், எப்போது போல சுடுகாட்டிலே நம் நாரணத்து இருத்த போது திடீர் என்று காளி தோன்றினாள்! நம்மாள் கண்டுக்கவே இல்லை! காளியே கூப்பிட்டாள், நான் தோன்றினால் தரிசனம் பெற்றவருக்கு எதாவது வரம் கொடுக்கவேண்டும். உனக்கு என்ன வரம் வேண்டும் என்றால் காளி! அதிபயங்கர ரூபிணியாக! எனக்கு ஒன்றும் வேண்டாம் நீ போ என்றார் நாரணத்து பிராந்தன்! இல்லை எதாவது வரம் தந்து தான் தீர்வேன் என காளி மீண்டும் கூற , நாரணத்து தன் ஒருகால் வீங்கி இருப்பதை காட்டி இன்னொரு காலுக்கு மாற்று என்றார்! உடனே காளி அது உன் கர்மம்! நீ அனுபவித்து தான் என்று கூற, போய்விடு ஓடிவிடு என்று கத்தினான் நம் நாரணத்து பிராந்தன்! ? காளி போய் விட்டது நம்புங்கள்! இது சத்தியம்! உண்மை! கோவண துணி ஒன்றே சொந்தமென கொண்ட கேரளத்து நாரணத்து பிரான்தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்?! ஞானியை விட தேவதைகள் ஒன்றுமில்லாதது தான்?

 இதோடு ஒப்பிட்டு இன்னொரு உண்மை சம்பவம் கூறுகிறேன், நமது திருஅருபிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், வேட்டவலம் ஜாமீன் தார் மாளிகைக்கு சென்றார்! அவர் வீட்டு வாசல் படியை மிதித்தது தான் தாமதம், வேட்டவலம் ஜாமீன் மனைவியை பிடித்த பிரம்ம ராட்சசன் ஐயோ நான் போகிறேன் என்று ஓடி விட்டது! வள்ளலார் ஒன்றும் செய்யவில்லை! அவர் காற்று பட்டதுமே காத்து கருப்பு எல்லாம் காத தூரம் ஓடிவிட்டது?! இது தான் ஞானி லட்சணம்! அங்கே காளியால் கர்ம வினை தீராது என்று கூறப்பட்ட விஷயம் இங்கே ஞான சற்குருவால் வள்ளலாரால், வள்ளலாரை கண்டதுமே தீர்ந்தது! "குரு பார்க்க கூடி வினை தீரும்" அதற்க்கு இது ஒரு உதாரணம்! அது மட்டுமா? வேட்டவலம் ஜமீன் மனைவிக்கு தீராத மகோரதம் வியாதி வள்ளலார் விபூதி கொடுக்க உடனே குணமானது! சுத்த ஞானிகள் கைபட்ட கால்பட்ட மண்ணே பொன் ஆகும்போது? பேய்கள் ஓடாதா? நோய்கள் தீராதா? இப்போது புரிந்ததா? சிறு தெய்வங்களால் நமக்கு ஒரு பிரயோஜனம் இல்லை!?


ஞானியை பணிந்தால் அவரே நம் குருவாகி தாயாகி தந்தையாகி நம் கர்மவினைகளை போக்கி நம்மை கடவுளிடம் சேர்ப்பார்! இது சத்தியம்! 

மகாகவி காளிதாசனுக்கு அருளினாள் மாகாளி! அம்பிகை! மூடன் மகாகவி யானான்! அம்மாவசையன்று நிலவும் வந்தது! அருட்கவியானான் மகாகவி காவி காளிதாசன்! என்ன பயன்? முடிவு ஒரு பெண்ணாலே மாண்டானே! வேதனை வேதனை! வாலை தாயின் ஆதி சக்தியின் பரிவார தேவதைகளில் ஒன்று காளி! பரிவார தேவதைகளையும் காவல் தெய்வங்களையும் கும்பிடுவதை விட்டு, கண்ணான கடவுளை, கண்ணில் துலங்கும் கடவுளை , கண் உள்ளே விளங்கும் வாலையை பணிந்தாலே மோட்சம் கிட்டும்!! சிந்தித்து தீர்க்கமாக முடிவெடு! அறிவில்லாமல் அயோக்கிய சாமியார்கள் பின்னே போய்விடாதே! ஏமாறாதே! வேதனை படுவாய்?!ஞான சற்குரு சிவசெல்வராஜ்

வாலை - கன்னி-ய-குமரி - ஞானம் பெற விழி 

 ------------------------------------------------------------------------------

குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். ஞான தானம் செய்யவும்!
Contact : http://www.vallalyaar.com/contact-us/

10 comments:

 1. விளக்கமான சிறப்பு பகிர்வு...

  நன்றி...

  ReplyDelete

 2. ஐயா.

  கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்......கிழே உள்ளவையில் எவை சிறு தெய்வங்கள்????
  முருகன்,
  விநாயகன்,
  பெருமாள்
  சூர்யன்,
  சந்திரன்
  நரசிம்ஹன்,
  சிவன்,
  ஒன்பது கிரகங்கள்,
  மகாலக்ஷ்மி,
  சரஸ்வதி,
  ஆயுர் தேவி,
  துர்கா,
  தாரா தேவி,
  லலிதா திரிபுர சுந்தரி,
  பத்து தச மஹாவித்யா தேவிகள்
  ella siddhargal,
  etc.........

  ReplyDelete
 3. உயிர் பலி கொடுக்கும் தெய்வங்களை சிறு தெய்வங்கள் என்று சொல்லுவர். வள்ளலார் சொன்னது அருட்பெருஞ்சோதியை வழிபடுங்கள் என்று.

  ReplyDelete
 4. மாரி அம்மன்
  செல்லி அம்மன்,
  துல்கத்தா அம்மன்
  பைரவன்,
  முண்ட கண்ணி அம்மன்,
  ப்ரித்யன்கிற தேவி,
  வாரஹி,
  ஏழு சப்த மாதர்கள்
  ..................இவை எல்லாம் சிறு தெய்வமா???
  ................................

  ReplyDelete
 5. Mostly yes i think. Please take deekshai from guru. You will have more clarity.

  ReplyDelete
 6. சிலர் எது எது சிறு தெய்வம் என்று பட்டியல் தேடுகிறார்கள் அவ்ர்களுக்கு பதில் இந்த பதிவிலே உள்ளது

  நீ படைத்தவனை வணங்க வேண்டுமா ? இறைவனால் படைக்க பட்டவர்களை வணங்க வேண்டுமா? நாம் வணங்கி வழி படவேண்டியது சர்வ வல்லமை படைத்த எங்கும் நிறைந்த அந்த அருள் மயமான பெருஞ்சோதியை தானே!? அதை விடுத்து மாடன் கருப்பன் முனியன் என்று போனால் இந்த ஜென்மத்தில் விமோசனம் இல்லை! எல்லவற்றுக்கும் மேலான பரம்பொருளைப்பார்!

  அது உன்னிலே உன் மெய்ப்பொருளாக விழியாக உள்ளதே! உன் கண்ணிலே மணியிலே ஒளியாக துலங்கும் எல்லாம் வல்ல இறைவனை பார்ப்பதை உணர்வதை விடுத்து ஊர் உலகெங்கும் தேடுகிராயே, உனக்கு அறிவு இருக்கிறதா? கையில் வெண்ணை இருக்க நெய்க்காக ஊரில் அலையாதே!

  ReplyDelete
 7. அன்புள்ள அய்யா அவர்களுக்கு ,

  தாங்கள் சிறுதெய்வம் குறித்த விளக்க உரை மிகவும் அருமை.ஆனால் ,இன்றும் கிராமப்புறங்களில் ,ஆடி மாதம் வந்துவிட்டால் ,உயிரனங்களை பலி கொடுப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது .விழிப்புனர்வு இல்லை என்று தான் தெரிகிறது.மிக நன்றி.

  ReplyDelete
 8. http://tamilpoongga.blogspot.com/2009/06/blog-post_29.html இல் தாங்கள் இட்ட இத்தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி ! மிகவும் பயனுள்ள பதிவு, படித்தேன் பயனடைந்தேன்.

  ReplyDelete
 9. சிறு தெய்வம் கோவில்களை தெரிந்து கொள்ள சுலபமான வழி என்ன வென்றால் சிறு தெய்வ கோவில்களில் ஐயர் பூஜை செய்ய மாட்டார். அங்கே பூசாரி தான் இருப்பார். பூசாரி இருந்தால் அது சிறு தெய்வ வழி பாடு கோவில்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

  ReplyDelete

Popular Posts