"கலையுரைத்த கற்பனையை நிலைஎனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக மலைவறு
சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற"
கலை - ஒளிக்கலை! கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வர் ஞானம்
பெறார்! ஏன்? கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்பவர்களுக்கு மாயை
கலையாக ஒளியாக வெளிப்பட்டு மனம் மயங்கும்படியாக பலபல காட்சிகளை
காட்டும். உடனே ஆஹா எனக்குப் பல அற்புத காட்சிகள் காண கிடைக்கின்றது.
நானே ஞானம் பெற்றவன் நானே பெரியவன் என , ஏமாந்து, இறுமாந்து, பிதற்றுவான்!!
கண்ணை மூடி தியானம் செய்பவன் நிச்சயம் ஏமாந்து போவான்!
மாயை அற்ப காட்சிகளையும்
அற்ப சித்திகளையும் அருளும்! அந்தச் சிறு சிறு ஒளியை கண்டு கண்மூடி தவம் செய்பவன் மனம் மயங்கி தான்
எல்லாம் அடைந்து விட்டதாக கருதி பல்லிளித்து இறுமாந்து ஆணவம்
மிகுந்து கெட்டுவிடுவான்! அதனால் தான் வள்ளல் பெருமான் கலையுரைத்த
கற்பனையே
உயர் நிலை என கொண்டாடும் கண் மூடி வழக்கமெலாம்
மண்மூடி போகட்டும் போகட்டும்
என்று கூறுகிறார்! கண்ட கண்ட
வழிமுறைகளை பின்பற்றி மக்கள் கண்மூடித்தனமாக செயல்பட்டு இறந்து
போகின்றார்களே என்ற வேதனையால் தான் வள்ளல் பெருமான் இதைக்
கூறினார்!
இறைவன் நிலை, நம் நிலையை தெளிவாக உறுதியாக இதுதான் என அறுதியிட்டு கூறுவதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வழங்கும் திருவடி உபதேசமாகும்!
இப்படி திருவடி உபதேசம் வழங்கும் சன்மார்கமே சிறந்த ஒப்பற்ற ஞான மார்க்கத்தை
உலகுக்கு வழங்குகிறது ! திருவடி உபதேசம் பெற்றவர் மெய்யுணர்வு பெற திருவடி
தீட்சை பெற கன்னியாகுமரி தங்க ஜோதி ஞான சபைக்கு வருக! உங்கள் நடுக்கண்ணை
திறந்து ஞானம்பெற வழிகாட்டுவார் வள்ளலார்! கண்ணை திறந்து தான் தவம் செய்ய
வேண்டும்!
கண்ணை திறந்தால்தானே, நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்தால் தானே கண்ணீர் பெருக்கெடுத்து நம் உடலும் நனையும். ஆகவே மெய்யுணர்வு பெற்று கண்ணை
திறந்து இருந்துதான் சும்மா இருந்துதான் தவம் செய்ய வேண்டும்!! இது ஒன்று தான்
ஞான வழி. கண்ணை மூடி செய்யும் எந்த பயிற்சியும் தியானமும் ஞானத்தை தராது?!
உங்கள் அகக்கண்ணை ஞான சற்குரு திறந்து திருவடி தீட்சை தருவார்! உங்கள் அறிவுக்கண் திறக்கும்! மனக்கண் திறக்கும்! ஞானக்கண் பெறுவீர்கள்! ஊனக்கண்ணால்
விழித்திருந்து பார்த்து உணர்ந்து, இறைவனை அடைய வேண்டும் அடைந்த தீர்வது
என்ற ஆன்ம பசியோடு சும்மா இருந்து மனதில் எண்ணமே தோன்றாத படி மனதையே
திருவடியில் ஒப்படைத்து தனித்திருந்து தவம் செய்பவனே கண்ணை திறந்து இருந்து
தவம் செய்பவனே ஞானம் பெறுவான்! பதவி - முக்தி - மோட்சம் கிட்டும்!
திருவருட் பாமாலை - ஞான சற்குரு சிவசெல்வராஜ்
----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும்.
குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள்,
உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய்
இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.
-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
சனி, 28 ஜனவரி, 2012
வெள்ளி, 27 ஜனவரி, 2012
கண் திறந்து தவம் செய்.
சித்தர்கள் என்றாலே இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் மேலும் அவர்கள் அன்பு, இரக்கம், புலால் தவிர்த்தல், கொலை தவிர்த்தல் என்பதை வலியுறுத்துகிறார்கள். மேலும் கடவுளை புறத்தில் தேடாமல் அகத்தில் அதாவது நம்முள்ளே தேட சொல்கிறார்கள் என்பதும் தெரிந்ததே!
இதையெல்லாம் தாண்டி இவர்களின் பாடல் வரிகளில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இந்த பாடல் வரிகளில் இருக்கும் ஒற்றுமையை அறியாமல் இருப்பவர்களுக்கும் அல்லது அந்த வார்த்தையை மட்டுமே தெரிந்திருந்து அது எதை குறிக்கிறது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கும் இந்த பதிவு நிச்சயம் உபயோகமாக இருக்கும். இந்த பதிவில் பார்க்க போவதே எல்லா சித்தர்கள் மற்றும் ஞானிகளின் பாடல்களில் மிளிரும் மெய்யான மெய்பொருளான இறைவன் திருவடிதான்.
ஆம், சித்தர்கள் என்றாலே அன்பு, இரக்கம், புலால் மறுத்தல் மற்றும் கொலை தவிர்த்தல் என்ற கொள்கை உடையவர்கள் மேலும் பல அற்புதங்களை செய்வார்கள் என்று தெரிந்திருக்கும் அளவிற்க்கு இந்த இறைவன் திருவடி பற்றி அதிகம் தெரியவில்லை. ஈடு இணையில்லாத இந்த திருவடி தவத்தை செய்த மற்றும் அதை நமக்கும் தந்த எல்லா சித்தர்களின் பாதத்தையும் பணிந்து பதிகிறோம்.
இங்கு நாம் பார்க்க போவது இறைவன் திருவடி (அ) அடி (அ) தாள் (அ) பத்ம பாதம் (அ) நற்றாள் (அ) நிமலனடி என்பதைத்தான். ஆம், இந்த எல்லா வார்த்தைகளும் ஒரே வார்த்தையைதான் குறிக்கின்றன. இந்த இறைவன் திருவடி பற்றி பட்டவர்த்தனமாக எங்கும் வெளியில் சொல்வதில்லை. இங்கு நான் தெரிந்து கொண்டதை பதிகிறேன். அதாவது நான் தெரிந்து கொண்டதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதை சொல்ல வாய்ப்பு தந்த என் குரு நாதர் சிவ செல்வராஜ்அய்யாவை வணங்கி, வள்ளல் பெருமானையும் வணங்கி எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வணங்கி பதிகிறேன்
ஆம், மூச்சு பயிற்ச்சி, சூரிய நமஸ்காரம், யோகாசன பயிற்ச்சி, மனிதர்களுக்குள் இருக்கும் உறவு முறைகளை அதாவது இகலோக வாழ்க்கையை பிரச்சினை இல்லாமல் எப்படி நகர்த்துவது போன்று உபதேசங்களும் மற்றும் கழுத்துக்கு கிழே செய்யும் கர்ம பயிர்ச்சிகள் எல்லாம் ஒரு அளவிற்க்கு நம் உடம்பை சிறிது பண்படுத்துவத்ற்க்கு பயன்படுமே தவிர ஒரு காலும் இறைவனிடம் கொண்டு சேர்க்காது என்று நம்புகிறோம். சொல்வது மட்டும் அல்லாமல் சித்தர்கள் மற்றும் ஞானிகள் பாடலகளை விளக்கங்க்ளோடு வைக்கிறோம்.
வள்ளலார் மற்றும் சித்தர்களின் திருவடி தவ முறையை அறியாதவர்களுக்கு, ஆன்மீகத்தில் உண்மையான தேடுதல் உள்ளவர்களுக்கு இங்கு போடப்படும் பாடல்களும் விளக்கங்களும் நிச்சயம் உபயோகமாக இருக்கும் மேலும் உங்களுக்கு வள்ளலாரின் மீது நம்பிக்கை இருந்தால் (அ) ஏதாவது ஒரு சித்தரின் மீதோ (அ) ஞானியின் மீதோ நம்பிக்கை இருந்தால் அவர்களை நினைத்து படித்தால் நிச்சயமாக இது உங்கள் கண்களை திறக்கும். இங்கு நீங்கள் ஒரு விடயம் கவனிக்க வேண்டும். ஆம், இங்கு நான் வள்ளலாரை ஞான சற்குருவாக ஏற்றிருந்தாலும் வள்ளலாரை மட்டுமே நம்பி நான் உங்களை படிக்க சொல்ல வில்லை எந்த சித்தரின் மீது நம்பிக்கை இருந்தாலும் அவர்களை நம்பி படிக்க சொல்கிறோமே எப்படி!!!! ஏன் எனில் எல்லா சித்தர்களும் மற்றும் ஞானிகளும் இந்த இறைவன் திருவடி (அ) மெய்பொருளை பற்றிதான் சொல்லியிருக்கிறார்கள். இதுதான் ஞானத்திற்க்கான பாதை. எல்லா ஞானிகளும் இந்த திருவடி (அ) மெய்பொருளை பற்றித்தான் சும்மா இருந்தார்கள். ஆம், சும்மா இருந்தே சுகம் பெற்றார்கள்! இதை விட்டு விட்டு வேறு எதை செய்தாலும் ஞான பாதையில் முன்னேற முடியாது! ஆம், சும்மா இருப்பது எப்படி என்று தெரிய வேண்டும் என்றால் நிச்சயமாக இந்த இறைவன் திருவடி பற்றி தெரிந்திருக்க வேண்டும் ஏன் எனில் அப்பொழுதுதான் சும்மா இருக்க (தவம் – Meditation) முடியும்.
இறைவனை நோக்கி நாம் வைக்கும் அடியில் இந்த வார்த்தை (திருவடி – கண்) எல்லா சித்தர்கள் மற்றும் ஞானிகள் பாடல்களிலும், நாம் இறைவனை வழிபடும் இடங்களிலும் மேலும் நமது தமிழ் பழமொழியில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை பற்றியே பார்க்க போகிறோம்.
ஏனெனில் இங்கு Meditation என்றால் கண்மூடி செய்வது என்று பெரும்பாலும் பரப்பபட்டிருக்கிறது. ஆனால் தவம் என்பது கண்மூடி செய்வதல்ல!!! சித்தர்கள் சொன்ன தவ முறையை தெரிந்து கொள்ள இந்த சித்தர்கள் சொன்ன திருவடி பற்றி நிச்சயம் புரிந்திருக்க வேண்டும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar), திருமூலர் (Thirumoolar), மாணிக்கவாசகர் (Manikavasagar), திருஞானசம்பந்தர் (thirugnanasambandar), சிவவாக்கியர் (SivaVakiyar), தாயுமானவர் (Thayumanavar), அபிராமி பட்டர் (Abirami Pattar), பட்டினத்தார் (Pattinathar) போன்ற எல்லா ஞானிகளின் பாடல்களிலிருந்தும் மற்றும் வள்ளல் பெருமானின் பாடல்களிலிருந்தும் இறைவன் திருவடி கண் தான் என்பதை எடுத்து வைக்கிறோம். படித்து சிந்தித்து தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.
-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
லேபிள்கள்:
சிவ செல்வராஜ்.வள்ளலார்,
சிவசெல்வராஜ்
வியாழன், 26 ஜனவரி, 2012
தன்னை அறிந்தாலே இன்பமுறலாம்!
வெண்ணிலாகக் கண்ணி
"தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு
தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே "
தன்னை அறிந்தாலே இன்பமுறலாம்! தன்னை அறிந்தவனே தலைவனைஅறிவான்! தன்னை - தான் யார் என்பதை ஒருவன் கண்டிப்பாக அறியவேண்டும் உணரவேண்டும்!
இந்த மனிதபிறவி எடுத்த நோக்கமே அதுதான்!
நான் யார் ? நான்-ஆத்மா! நான் ஏன் பிறந்தேன்?
நான் ஏன் வாழ்கின்றேன்? எத்தனை காலம் வாழ்வேன்?
உலகத்தில் நான் காண்பதெல்லாம் என்ன?
இது போன்ற கேள்விக்கு நான் யார்? என தெரிந்தால் தான் விடை கிடைக்கும்!
திருவருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் என்ன கூறுகிறார்? தன்னை அறிந்து இன்பமுற வேண்டும். அதற்கு ஒரு தந்திரம் வெண்ணிலவே நீ தான் சொல்லவேண்டும் என்கிறார்! ஏனைய்யா , வேறு யாரும் கிடைக்க வில்லையா? தன்னை அறிந்து இன்பமுற வழி சொல்ல வெண்ணிலாவைத்தான் கேட்க வேண்டுமா?
இது தான் சூட்சுமம்! ஞான ரகசியம்! ஒருவன் தன்னை அறியவேண்டுமானால் நான் யார் என உணரவேண்டுமானால் அதற்குரிய வழி உபாயம்-தந்திரம் வெண்ணிலா மூலமே அறியவேண்டும்! வெண்ணிலா மூலம் தன்னை எப்படி அறியமுடியும்? எப்படி?
வெண்ணிலா - சந்திரன் - மதி - இடது கண் - சக்தி - ௨ - இப்படி நமது வலது கண் ஞானத்திற்கு வழி காட்டுகிறது. அது ஒரு தந்திரம் ! சூட்சுமம்!
"சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவில்
முக்திக்கு மூலம் அது" - ஔவை குறள்.
சக்தியான சந்திரனை செங்கதிரோனான சிவம், இடது கண் ஒளியை வலது கண் ஒளி ஊடுருவ நமக்கு ஒளிக்கலைகள் ஒன்றாகி , ஒளிபெறுகி ஞானம் கிடைக்கும், நான் -ஆத்மா - உயிர் ஜீவன் - பிராணன் எது? எப்படி இருக்கிறது? எங்கிருக்கிறது? என்ன செய்கிறது ? இப்படி எல்லாவற்றையும் அறியலாம்! உணரலாம்! இதற்காக நாம் செய்வதே தவம்! திருவடி தீட்சை பெற்று சும்மா இருப்பதே தவம்.
"வினை போகமே ஒரு தேக கண்டாய்" என்று ஒரு ஞானி சொல்லுகிறார். "வினைக்கீடாய் மெய்கொண்டு" என திருமூலர் கூறுகிறார்! " பற்றி தொடரும் இருவினை யன்றி வேறொன்று இல்லை பராபரமே" என
தாயுமான சாமிகள் கூறுகிறார்! இப்படி எல்லாரும் கூறும் பிறப்பின் ரகசியம் அவரவர் செய்த வினைப்படியே அமையும் என்பதே விதி!- பிராரப்தம் என்பதெல்லாம் இதுதான்!
விதிக்குட்பட்டு பிறந்த மனிதன் விதிப்படி வினைப்படி மனம் செயல்படுவதால் தான் இவன் மனிதன்! " மனம் போன போக்கில் போக வேண்டாம் " என ஔவையார் கூறிய உபதேசத்தை சற்று செவிமடுக்க வேண்டும்.
விதி படி பிறக்கிறான் மனிதன் ! விதிப்படி மனம் செயல்பட்டு மனம் போனே போக்கில் வாழ்கிறான் மனிதன் ! வினை கூடிக் கூடி அதுவே மீண்டும் பிறக்க ஏதுவாகிறது! பாவ மூட்டையை பெருக்கி கொண்டே போகிறான் ! விடுபட என்னதான் வழி! பிறவி நிற்கதி அடைய என்ன வழி? இனி பிறவாமலிருக்க என்ன வழி? மரணமில்லாது வாழ என்னவழி?
அதற்கும் ஒரு தந்திரம் சொல்லி நமக்கு வழி காட்டி இருக்கிறார்கள் ஞானிகள்!
நமது இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்! இரு கண்மணி ஊசி முனை துவாரத்தை மறைத்து இருக்கும் வினை திரை அகன்று தான் உள் இருக்கும் சோதியை காணலாம்.
நமது மனது வேலை செய்து கொண்டிருக்கும். சும்மா இருக்கவே இருக்காது! மனம் வேலை செய்தால் வினை நடக்கும் உருவாகும். வினை இருக்க இருக்க மீண்டும் பிறப்பு! வினை த்திரை மெல்லிய ஜவ்வு அற்று போனால் தன் பிறப்பு இறப்பு நீங்கும். அது எப்படி? இதுதான் சூட்சுமம்!
வினை திரை அகலவே நாம் தியானம் செய்யவேண்டும் எப்படி என்றால் மனம் சும்மா இருக்காது. நாம் தான் சும்மா இருக்க வேண்டும்! முடியுமா ? நம்மால் முடியாது? ஆனால் முடியும்? அதுதான் தந்திரம்! செயல்பட்டு இருக்கும் மனதை நம் இறைவன் திருவடியிலே நம் கண்மணி ஊசி முனை துவாரத்தின் உள் ஒளியிலே இறுதி விடவேண்டும். நாம் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! புறத்திலே வரும் மனதை அகத்திலே இருத்திவிட்டால் போதும்! நாம் சும்மா இருந்தால் போதும்!
இப்படி இருந்து தவம் செய்ய சற்குரு மூலம் திருவடி உபதேசம் திருவடி தீட்சை பெறவேண்டும் ! சற்குரு உங்கள் கண்ணில் திருவடியில் ஒளி உணர்வை ஊட்ட அதிலே நீங்க லயித்தால் - சும்மா இருந்தால் இது சித்திக்கும்.
மனதை திருவடியில் இருத்துவதே "மானஸ பூஜை"! புறத்தே மனம் செல்லாமல் அகத்தே ஒளியில் ஒன்ற வைப்பதே "அகவழிபாடு"!
குருவின் புத்தகங்கள்

சிவ செல்வராஜ்,
சிவசெல்வராஜ்,
வள்ளலார்,
வெண்ணிலா
புதன், 25 ஜனவரி, 2012
திருக்கதவம் திறவாயோ
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே
நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசிமுனை துவாரமே, அதன்
உள்துலங்கும் சிவம் இருக்கும் வீட்டின் வாசலாகும்! அந்த வாசல்
மெல்லிய ஜவ்வால் அடைக்கப்பட்டுள்ளது! அந்த ஜவ்வையே கதவு என்கின்றனர் ஞானிகள்! திருக்கதவமாகிய கண்மணி வாசல்
திறக்காதா!? ஜவ்வே திரைகளாக சொன்னார்! கண்மணி மத்தியில்
உணர்வு பெற திருவடி தீட்சை பெற்று தவம் செய்தால், உள்ளிருக்கும் சிவம் திருக்கதவை திறந்து தன் உரு காட்டி அருள்வார்!
மெய் உருகி தவம் செய்து உள் ஊறும் அமுதம் உண்டு உடம்பும் உயிரும்
ஒளிமயமாகிட திருவடி தீட்சை யாகிய மெய் உணர்வு அருள்வாயே!
கருவை தன்னுள் கொண்ட தனி ஒளி வடிவமே! கருவில் கலந்த
துணையே! உன்னை என்னுட்கலந்து பேரின்பத்தில் இரவு பகலற்று
எப்போதும் திளைத்திட அருள் செய்வயாக! அன்பே நாடும் அமைதியையே
நாடிடும் மெய்யடியர்களுக்கே அருளும் சித்திகள் விளங்கும் பரசிவமே
எல்லாம்வல்ல பெருமைமிகு மணியே கண்மணியே அங்கே விளங்கும்
நடமிடும் நாயகனே இறைவா!
'மணிக்கதவம் திறவாயோ மறைப்பை எல்லாம் தவிர்த்தே!"
கண்மணி மத்தியில் உள்ள மெல்லிய ஜவ்வாகிய கதவை திறப்பாயே!
அந்த மெல்லியே ஜவ்வே நம் மும்மலமாகிய கர்மத்திரையாக
விளங்குகிறது! அந்த திரை மறைப்பு நீங்கினாலே உள் உள்ள சிவத்தை காணமுடியும்!
திரை நீங்கினாலே ஜோதி தரிசனம். சத்திய ஞான சபையில் வள்ளல்பெருமான் ஏற்படுத்திய அமைப்பு இதுவே! நம் கண்மணியுள் விளங்கும் ஜோதியை ஆத்ம ஜோதியை தரிசிக்க தடையாக உள்ளதே நம் வினையாகிய திரை! மெல்லிய ஜவ்வு! ஞான சற்குரு மூலம் திருவடி உபதேசம் பெற்று தீட்சை பெற்று மெய் உணர்வு பெற்று சும்மா இருந்து தவம் மேற்கொண்டால் ஜவ்வு - திரை உஷ்ணத்தால் உருகி கரையும்.
விலகும் அப்போது ஜோதி தரிசனம் கிட்டும்!
நாம் உய்ய வழி காட்டியிருக்கிறார் வள்ளல் பெருமான்.
வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் பார்த்து மகிழ்ந்தவர்களே
உங்களுக்குள் அந்த ஜோதி தரிசனம் காண வேண்டுமா?
தங்க ஜோதி ஞான சபைக்கு வாருங்கள்! வள்ளலார் உங்களுக்கு மெய் உணர்வு தந்து உங்களுக்கு உள்ளே தங்க ஜோதியை தரிசிக்க அருள்புரிவார்!
கூடவே துணையாக இருந்து ஞானம் பெற நல் வழிகாட்டுவார்! ஒளி ஊட்டுவார்! மரணமில்ல பெருவாழ்வு பெறலாமே நாமே!
- ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை நாலஞ்சாறு பக்கம் 138
----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.
-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
லேபிள்கள்:
கண்மணி,
சிவ செல்வராஜ்,
சிவசெல்வராஜ்,
திருக்கதவம்,
தீட்சை,
வள்ளலார்,
ஜவ்வு,
vallalar
திங்கள், 16 ஜனவரி, 2012
ஜீவன் இருப்பிடம் (ஸ்தானம்)
(வள்ளலார் உரைநடை பகுதி)
இந்தத் தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் 5. அதில் முக்கிய ஸ்தானம் 2.
அவை யாவை?
- கண்டம்,
- சிரம்
சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்;
இது இறக்காது.
கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷ ஜீவன்; இது
இறந்துவிடும்.
மேற்படி தேகத்தில் பிரமபேதம் கீழும் மேலு மிருப்பதால்,
நாமடைய வேண்டிய பதஸ்தானங்கள் எவை என்றால்; அவை கண்டமுதல் உச்சி வரையில்
அடங்கியிருக்கின்றன. மேற்படி பதங்களாவன சொர்க்க பூர்வமாக சதாசிவபத மீறாக
வுள்ளன. இதற்கு மேல் நாதாதி சுத்த மீறாக உள்ளன. கைலாசாதி பதங்கள் உந்திக்கு
மேல் கண்ட மீறாக வுள்ளன; இது சாதாரணபாகம்.
நரக இடமாவன உந்தி முதல்
குதபரியந்தம். கர்ம ஸ்தானம் குத முதல் பாத மீறாக வுள்ளது. இவைகளில்
பிரமாதிப் பிரகாச முள்ளது. அனுபவிப்பது கண்டத்தில். இந்தத் தேகத்தில்
எமனிருக்குமிடம் குதமாகிய நரகஸ்தானத்துக்கு இடது பாகம். மேற்படி தேகத்தில்
ஆன்மா தனித்திருக்கும்;
ஜீவன் மனமுதலிய அந்தக்கரணக் கூட்டத்தின்
மத்தியிலிருக்கும்.
செவ்வாய், 10 ஜனவரி, 2012
யார் குரு?
சொல்பவன் குரு! கேட்பவன் சீடன் ! தெரியாததை தெரிவிப்பவன் குரு!
தெரிந்து தெளிந்து கொள்பவனே சீடன்!
நாம் பிறந்ததில் இருந்து வாழ்நாள் முழுவதும் கற்று கொண்டே தான்
இருகிறோம். கல்வி கடவுள் சரஸ்வதி தேவியே! இன்னும் கற்று கொண்டு
இருக்கிறாளாம்.
கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என ஞான கிழவி அவ்வை கூறுகிறாள்! ஒவ்வொரு விசயத்தையும் ஒவ்வொருவரிடம் இருந்து கற்கிறோம். எல்லாரும் குருவே !
இயற்கையில் இருந்து மற்ற ஜீவராசிகளிடம் இருந்து எவ்வளவோ கற்று கொள்கிறோம்! எல்லாமே குரு தான்!
அப்படியானால் குரு என தனித்து சொல்ல என்ன காரணம்?
எல்லாரும், எல்லாமும் பல விசயங்களை நமக்கு அறிவிக்கின்றனர் அவ்வளவுதான்! எல்லாவற்றுக்கும் வாழ்க்கையை நெறிபடுத்த அறிவிப்பதே வேலை. இது குருவல்ல!
யார் நம் அறிவை தூண்டி, நாம் யார்? என அறிய வழிகாட்டி, விழியின் உணர்வை ஊட்டுகிறரோ அவரே குரு!
ஒப்பற்ற குரு ! சத்குரு ! ஞான குரு! நாம் யார் என ஒருவன் உணர வழி காட்டும் அந்த ஒப்பற்ற குருவை! பெற்றாலே ஒருவன் வாழ்க்கை கடை தேற முடியும் !
உலக வாழ்வில் சிறப்பாக நோயின்றி வாழ்வாங்கு வாழ்ந்து இனி பிறவாமல் இருக்க யார் வழி சொல்கிறாரோ அவரே சத்குரு!
அறியாமையில் உழலும் மனிதன் சிந்தனையை தூண்டிம பிறப்பறுக்க, விழியால் உணர்வூட்டி முன்னேற்றுபவரே ஞானகுரு!
ஒப்பற்ற குருவே சத்குரு! சத்குருவே ஞான குரு! நாமும் பெற்றால் தான் தப்பித்தோம்! இல்லையேல் மீண்டும் மீண்டும் பிறவி பிணி தான்!
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வளர, வளர தான் ஒவ்வொன்றாக அறிந்து கொள்கிறான்!
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! பின் அவன் நல்லவன் ஆவதும் கேட்டவன் ஆவதும் அன்னை வளர்க்கையிலே! சூழ்நிலையிலே ! எந்தவொரு சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தாலும் எல்லோரும் இறைவன் தன்னை உணரும் சந்தர்ப்பத்தை அருள்கிறார்!!
அவரவர் கர்ம வினைப்படி எல்லாம் நடந்தாலும் எல்லாருக்கும் இறைவன் அருள்புரிந்து ஞானம் பெற உதவுகிறார்! இதில் பெரும்பங்கு ஞானிகளை சேரும்! இறைநிலை பெற்ற சாகவரம் பெற்ற ஞானிகள் இயல்பே அதுதான்! ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனை உணரவேண்டும் என்பதற்காக கர்மவினையால் துன்புறும் நிலை மாற்றி வழிகாட்டி கூடவே இருந்து காத்து அருள்கிறார்கள்.
நாம் யாரையும் அறிந்திருக்க வேண்டியது இல்லை! நம்மை அவர்கள் அறிவார்கள்!
ஞானிகளுக்கு சாதி மதம் இனம் மொழி நாடு ஒன்றும் கிடையாது !
யாதும் ஊரே யாவரும் கேளீர்! இதுவே அவர்கள் நிலை!
"என் கடன் பணி செய்து கிடப்பதே"
எந்த வித பேதமும் இன்றி எல்லோருக்கும் வலிந்து வந்து உதவி,
காத்து அருள்பவர்கள் தான் ஞானிகள்!
எண்ணில்லா சித்தர் ஞானிகள் தோன்றியது நம் நாட்டிலே!
இங்கு பிறந்த நாம் அதற்க்கு பெருமை படவேண்டும்! கடந்த
நூற்றாண்டில் தமிழகத்தில் அவதரித்து, மரணமில்ல பெருவாழ்வு
பெற்ற உன்னதமான பேரின்ப நிலை அடைந்தவர் திருவருட் பிரகாச
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்!
இராமலிங்க சுவாமிகளை சத்குருவாக கொண்டு தான் அடியேன்
வாழ்கிறேன் ! இராமலிங்க சுவாமிகள் உரைத்த திருவடி ஞானத்தை
தான் என்குரு ஜோதி இராமசாமி தேசிகர் எமக்கு உபதேசித்தார், தீட்சை
வழங்கினார்! கடந்த இருபத்தைந்து ஆண்டாக சாதனை செய்து இராமலிங்க
சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணியானனேன் ! எமக்கு இராமலிங்க
சுவாமிகள் சுட்டிகாட்டி உணர்த்திய ஞான சித்தர் திருச்சி ஜோதி இராமசாமி
தேசிகர் அவர்கள் சமாதி கொள்ளுமுன் அடியேனை அழைத்து குரு பீடத்தை
அளித்தார்கள்! அடியேனை பக்குவபடுத்தி முதல் 12 ஆண்டு முடிவில்
"கண்மணிமாலை" எழுதி வெளியிட வைத்தார்கள்! அடுத்த 12 ஆண்டிற்குள்
என்னை குரு பீடத்தில் இருத்திவிட்டார் வள்ளலார்.
அடியேனை குருவாக இருத்தி உள்ளிருந்து தீட்சை வழங்குவதும் அவர்களே!
அடியேன் செய்த புண்ணியம்! ஞானவான்களின் அருள் கிட்டி இன்று ஞான குருவாக இருக்கிறேன்! அவர்கள் இட்ட பணியை செவ்வனே செய்கிறேன்! செம்மையாக செய்துவைப்பதும் அவர்களே!
உலகோரே வாருங்கள் !
உபதேசம் பெறுங்கள் !
தீட்சை பெறுவது அவசியம்!
அரிதான இப்பிறவி ஆண்டவனை அறியவே! காலம் தாழ்த்தாதீர்! கண் திறக்க
வாருங்கள்!
குரு யார் என தேர்ந்தெடுப்பதில் பலருக்கு குழப்பம்.
தன் சாதியில் ஒரு சாமியாரை போற்றுகிறது ஒரு கூட்டம்.
தன் மதத்தில் உள்ள சாமியாரை கொண்டாடுகிறது மற்றொரு கூட்டம்,
தன் மொழி பேசும் ஒருவனை பாராட்டுகிறது இன்னொரு கூட்டம் .
அரபியில் சொன்னாலும், ஹீப்ருவில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும்
சமஸ்கிரதத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் எல்லாராலும் சொல்ல பட்டது இறைவனை பற்றி மட்டுமே!
உலகுக்கு ஆதி குரு முதல் குரு தட்சிணமூர்த்தி தான் ! இதுவே உண்மை !
அதன்பின் தந்தைக்கே உபதேசித்தான் தனயன் ! அகத்தியருக்கும் அருணகிரிக்கும் உபதேசித்தான் !
இந்த வழி வந்த, வாழையடி வாழைஎன வந்தவர் தான் வள்ளல் இராமலிங்க சுவாமிகள் ! இவர்கள் உள்இருந்து உணர்த்த அடியேன் உபதேசம் தீட்சை வழங்குகிறேன். "நான் யார் " எனவும் அறிவை தந்து, உணர்த்தி நம்மை வழி நடத்துபவரே உண்மை குரு!
வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்
வேறோருவர்க்கும் எட்டாத புட்பம்
இனி முடிந்து கட்டாத லிங்கம் கருத்தினுள்ளே
முட்டாத பூசை இறையாத தீர்த்தம் !
இதை சொன்ன தெரிந்தவனே இறைவனை உணர்த்த தகுதி யானவன்
ரகசியம் என இருப்பதை தெளிவு படுத்தி உணரவைப்பவனே குரு!
புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. வருக பலன் - ஆன்மலாபம்!
குருவாக இருந்து ஞானிகளின் அருளால் தீட்சை வழங்கி வருகிறேன், வாருங்கள்.
தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே! - திருமந்திரம்
ஞான சற்குரு சிவ செல்வராஜ்.
சனாதன தர்மம்
http://www.vallalyaar.com/

கர்ம,
குரு,
சத்குரு,
சிவ செல்வராஜ்,
சிவ செல்வராஜ்.வள்ளலார்,
ஞான குரு,
வினை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
வெண்ணிலாகக் கண்ணி "தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே " தன்னை அறிந்தாலே இன்பமுறலாம்...