திங்கள், 16 ஜனவரி, 2012

ஜீவன் இருப்பிடம் (ஸ்தானம்)

(வள்ளலார் உரைநடை பகுதி)

இந்தத் தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் 5. அதில் முக்கிய ஸ்தானம் 2. 

அவை யாவை? 
  1. கண்டம், 
  2. சிரம் 

சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. 

கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷ ஜீவன்; இது இறந்துவிடும். 

மேற்படி தேகத்தில் பிரமபேதம் கீழும் மேலு மிருப்பதால், நாமடைய வேண்டிய பதஸ்தானங்கள் எவை என்றால்; அவை கண்டமுதல் உச்சி வரையில் அடங்கியிருக்கின்றன. மேற்படி பதங்களாவன சொர்க்க பூர்வமாக சதாசிவபத மீறாக வுள்ளன. இதற்கு மேல் நாதாதி சுத்த மீறாக உள்ளன. கைலாசாதி பதங்கள் உந்திக்கு மேல் கண்ட மீறாக வுள்ளன; இது சாதாரணபாகம். 

நரக இடமாவன உந்தி முதல் குதபரியந்தம். கர்ம ஸ்தானம் குத முதல் பாத மீறாக வுள்ளது. இவைகளில் பிரமாதிப் பிரகாச முள்ளது. அனுபவிப்பது கண்டத்தில். இந்தத் தேகத்தில் எமனிருக்குமிடம் குதமாகிய நரகஸ்தானத்துக்கு இடது பாகம். மேற்படி தேகத்தில் ஆன்மா தனித்திருக்கும்; 

ஜீவன் மனமுதலிய அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.

1 கருத்து:

  1. அன்புள்ள நண்பரே ,
    தங்களின் பதிவு நன்றாக இருந்தது.என்னை போன்ற ,சிறியோனுக்கு,புரிவதற்கு விளக்கம் தேவை..
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Popular Posts