வெண்ணிலாகக் கண்ணி
"தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு
தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே "
தன்னை அறிந்தாலே இன்பமுறலாம்! தன்னை அறிந்தவனே தலைவனைஅறிவான்! தன்னை - தான் யார் என்பதை ஒருவன் கண்டிப்பாக அறியவேண்டும்
உணரவேண்டும்!
இந்த மனிதபிறவி எடுத்த நோக்கமே அதுதான்!
நான் யார் ?
நான்-ஆத்மா! நான் ஏன் பிறந்தேன்?
நான் ஏன் வாழ்கின்றேன்? எத்தனை காலம்
வாழ்வேன்?
உலகத்தில் நான் காண்பதெல்லாம் என்ன?
இது போன்ற கேள்விக்கு நான் யார்? என தெரிந்தால் தான் விடை கிடைக்கும்!
திருவருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் என்ன கூறுகிறார்? தன்னை அறிந்து இன்பமுற வேண்டும். அதற்கு ஒரு தந்திரம் வெண்ணிலவே நீ தான் சொல்லவேண்டும்
என்கிறார்! ஏனைய்யா , வேறு யாரும் கிடைக்க வில்லையா? தன்னை அறிந்து இன்பமுற
வழி சொல்ல வெண்ணிலாவைத்தான் கேட்க வேண்டுமா?
இது தான் சூட்சுமம்! ஞான ரகசியம்! ஒருவன் தன்னை அறியவேண்டுமானால் நான் யார் என உணரவேண்டுமானால் அதற்குரிய வழி உபாயம்-தந்திரம் வெண்ணிலா மூலமே
அறியவேண்டும்! வெண்ணிலா மூலம் தன்னை எப்படி அறியமுடியும்? எப்படி?
வெண்ணிலா - சந்திரன் - மதி - இடது கண் - சக்தி - ௨ - இப்படி நமது வலது கண் ஞானத்திற்கு வழி காட்டுகிறது. அது ஒரு தந்திரம் ! சூட்சுமம்!
"சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவில்
முக்திக்கு மூலம் அது" - ஔவை குறள்.
சக்தியான சந்திரனை செங்கதிரோனான சிவம், இடது கண் ஒளியை வலது கண் ஒளி ஊடுருவ நமக்கு ஒளிக்கலைகள் ஒன்றாகி , ஒளிபெறுகி ஞானம் கிடைக்கும், நான் -ஆத்மா -
உயிர் ஜீவன் - பிராணன் எது? எப்படி இருக்கிறது? எங்கிருக்கிறது? என்ன செய்கிறது ?
இப்படி எல்லாவற்றையும் அறியலாம்! உணரலாம்! இதற்காக நாம் செய்வதே தவம்!
திருவடி தீட்சை பெற்று சும்மா இருப்பதே தவம்.
"வினை போகமே ஒரு தேக கண்டாய்" என்று ஒரு ஞானி சொல்லுகிறார். "வினைக்கீடாய் மெய்கொண்டு" என திருமூலர் கூறுகிறார்! " பற்றி தொடரும் இருவினை யன்றி வேறொன்று இல்லை பராபரமே" என
தாயுமான சாமிகள் கூறுகிறார்! இப்படி எல்லாரும் கூறும் பிறப்பின் ரகசியம் அவரவர் செய்த வினைப்படியே அமையும் என்பதே விதி!- பிராரப்தம் என்பதெல்லாம் இதுதான்!
விதிக்குட்பட்டு பிறந்த மனிதன் விதிப்படி வினைப்படி மனம் செயல்படுவதால் தான்
இவன் மனிதன்! " மனம் போன போக்கில் போக வேண்டாம் " என ஔவையார் கூறிய
உபதேசத்தை சற்று செவிமடுக்க வேண்டும்.
விதி படி பிறக்கிறான் மனிதன் ! விதிப்படி மனம் செயல்பட்டு மனம் போனே போக்கில் வாழ்கிறான் மனிதன் ! வினை கூடிக் கூடி அதுவே மீண்டும் பிறக்க ஏதுவாகிறது! பாவ
மூட்டையை பெருக்கி கொண்டே போகிறான் ! விடுபட என்னதான் வழி! பிறவி
நிற்கதி அடைய என்ன வழி? இனி பிறவாமலிருக்க என்ன வழி? மரணமில்லாது வாழ
என்னவழி?
அதற்கும் ஒரு தந்திரம் சொல்லி நமக்கு வழி காட்டி இருக்கிறார்கள் ஞானிகள்!
நமது இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்! இரு கண்மணி ஊசி முனை
துவாரத்தை மறைத்து இருக்கும் வினை திரை அகன்று தான் உள் இருக்கும்
சோதியை காணலாம்.
நமது மனது வேலை செய்து கொண்டிருக்கும். சும்மா
இருக்கவே இருக்காது! மனம் வேலை செய்தால் வினை நடக்கும் உருவாகும்.
வினை இருக்க இருக்க மீண்டும் பிறப்பு! வினை த்திரை மெல்லிய ஜவ்வு அற்று
போனால் தன் பிறப்பு இறப்பு நீங்கும். அது எப்படி? இதுதான் சூட்சுமம்!
வினை திரை
அகலவே நாம் தியானம் செய்யவேண்டும் எப்படி என்றால் மனம் சும்மா இருக்காது.
நாம் தான் சும்மா இருக்க வேண்டும்! முடியுமா ? நம்மால் முடியாது? ஆனால்
முடியும்? அதுதான் தந்திரம்! செயல்பட்டு இருக்கும் மனதை நம் இறைவன்
திருவடியிலே நம் கண்மணி ஊசி முனை துவாரத்தின் உள் ஒளியிலே இறுதி விடவேண்டும். நாம் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! புறத்திலே வரும் மனதை
அகத்திலே இருத்திவிட்டால் போதும்! நாம் சும்மா இருந்தால் போதும்!
இப்படி இருந்து தவம் செய்ய சற்குரு மூலம் திருவடி உபதேசம் திருவடி தீட்சை பெறவேண்டும் ! சற்குரு உங்கள் கண்ணில் திருவடியில் ஒளி உணர்வை ஊட்ட அதிலே நீங்க லயித்தால் - சும்மா
இருந்தால் இது சித்திக்கும்.
மனதை திருவடியில் இருத்துவதே "மானஸ பூஜை"! புறத்தே மனம் செல்லாமல் அகத்தே ஒளியில் ஒன்ற வைப்பதே "அகவழிபாடு"!
குருவின் புத்தகங்கள்
----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும்.
குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள்,
உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய்
இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.
-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
வியாழன், 26 ஜனவரி, 2012
தன்னை அறிந்தாலே இன்பமுறலாம்!
லேபிள்கள்:
சிவ செல்வராஜ்,
சிவசெல்வராஜ்,
வள்ளலார்,
வெண்ணிலா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
கண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...
அன்பு நண்பரே ,
பதிலளிநீக்குமிகவும் போற்றி பாதுகாக்க வேண்டிய பதிவு.தங்களின் தொலைபேசி என்னை தாருங்கள்.
இந்த முறையாவது ,திருவடி தீக்ஷை பெற முயற்சி செய்கிறேன் . மிக்க நன்றி .
Please give me your mail id. we'll communicate in mail.
பதிலளிநீக்குஅன்பு நண்பரே ,
நீக்குஎனது மின் அஞ்சல் முகவரி :mgramalingam@gmail.com
Dear Mr.SivamJothi..
பதிலளிநீக்குA warm wishes...First and foremost wish to appreciate you for the noble and profound intentions in spreading the truth about "saga kalvi"....wish to contact you..my email id drkarthikmds@gmail.com...thanks in anticipation...
Kangalai moodamal jabam allathu dhiyanam seithal manakkan thirakkuma hoe any days tel me
பதிலளிநீக்குApdilam pannuna onnum thirakkathu enga irukangalo anga poi parunga karanam la irunthu thappichiklam
நீக்குPuthukottai meivazhi Salai la poi asirvatham vangi maranathula irunthu thappichi konga
Kannai moodamal manakkan thirakka mudiyuma koorungal sir
பதிலளிநீக்குTake deekshai then you can do the thavam only then you will understand this.
பதிலளிநீக்குTalk to Mathi +919940102227
ஞானம் அடைய மிகச்சிறந்த வழியை உலக மக்களுக்கு தெலிவாக விளக்கி உள்ளிர்கள் மிக்க நன்றி
பதிலளிநீக்கு