வெள்ளி, 27 ஜனவரி, 2012

கண் திறந்து தவம் செய்.


சித்தர்கள் என்றாலே இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் மேலும் அவர்கள் அன்பு, இரக்கம், புலால் தவிர்த்தல், கொலை தவிர்த்தல் என்பதை வலியுறுத்துகிறார்கள். மேலும் கடவுளை புறத்தில் தேடாமல் அகத்தில் அதாவது நம்முள்ளே தேட சொல்கிறார்கள் என்பதும் தெரிந்ததே!

இதையெல்லாம் தாண்டி இவர்களின் பாடல் வரிகளில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இந்த பாடல் வரிகளில் இருக்கும் ஒற்றுமையை அறியாமல் இருப்பவர்களுக்கும் அல்லது அந்த வார்த்தையை மட்டுமே தெரிந்திருந்து அது எதை குறிக்கிறது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கும் இந்த பதிவு நிச்சயம் உபயோகமாக இருக்கும். இந்த பதிவில் பார்க்க போவதே எல்லா சித்தர்கள் மற்றும் ஞானிகளின் பாடல்களில் மிளிரும் மெய்யான மெய்பொருளான இறைவன் திருவடிதான்.



ஆம், சித்தர்கள் என்றாலே அன்பு, இரக்கம், புலால் மறுத்தல் மற்றும் கொலை தவிர்த்தல் என்ற கொள்கை உடையவர்கள் மேலும் பல அற்புதங்களை செய்வார்கள் என்று தெரிந்திருக்கும் அளவிற்க்கு இந்த இறைவன் திருவடி பற்றி அதிகம் தெரியவில்லை. ஈடு இணையில்லாத இந்த திருவடி தவத்தை செய்த மற்றும் அதை நமக்கும் தந்த எல்லா சித்தர்களின் பாதத்தையும் பணிந்து பதிகிறோம்.

இங்கு நாம் பார்க்க போவது இறைவன் திருவடி (அ) அடி (அ) தாள் (அ) பத்ம பாதம் (அ) நற்றாள் (அ) நிமலனடி என்பதைத்தான். ஆம், இந்த எல்லா வார்த்தைகளும் ஒரே வார்த்தையைதான் குறிக்கின்றன. இந்த இறைவன் திருவடி பற்றி பட்டவர்த்தனமாக எங்கும் வெளியில் சொல்வதில்லை. இங்கு நான் தெரிந்து கொண்டதை பதிகிறேன். அதாவது நான் தெரிந்து கொண்டதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதை சொல்ல வாய்ப்பு தந்த என் குரு நாதர் சிவ செல்வராஜ்அய்யாவை வணங்கி, வள்ளல் பெருமானையும் வணங்கி எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வணங்கி பதிகிறேன்



ஆம், மூச்சு பயிற்ச்சி, சூரிய நமஸ்காரம், யோகாசன பயிற்ச்சி, மனிதர்களுக்குள் இருக்கும் உறவு முறைகளை அதாவது இகலோக வாழ்க்கையை பிரச்சினை இல்லாமல் எப்படி நகர்த்துவது போன்று உபதேசங்களும் மற்றும் கழுத்துக்கு கிழே செய்யும் கர்ம பயிர்ச்சிகள் எல்லாம் ஒரு அளவிற்க்கு நம் உடம்பை சிறிது பண்படுத்துவத்ற்க்கு பயன்படுமே தவிர ஒரு காலும் இறைவனிடம் கொண்டு சேர்க்காது என்று நம்புகிறோம். சொல்வது மட்டும் அல்லாமல் சித்தர்கள் மற்றும் ஞானிகள் பாடலகளை விளக்கங்க்ளோடு வைக்கிறோம்.

வள்ளலார் மற்றும் சித்தர்களின் திருவடி தவ முறையை அறியாதவர்களுக்கு, ஆன்மீகத்தில் உண்மையான தேடுதல் உள்ளவர்களுக்கு இங்கு போடப்படும் பாடல்களும் விளக்கங்களும் நிச்சயம் உபயோகமாக இருக்கும் மேலும் உங்களுக்கு வள்ளலாரின் மீது நம்பிக்கை இருந்தால் (அ) ஏதாவது ஒரு சித்தரின் மீதோ (அ) ஞானியின் மீதோ நம்பிக்கை இருந்தால் அவர்களை நினைத்து படித்தால் நிச்சயமாக இது உங்கள் கண்களை திறக்கும். இங்கு நீங்கள் ஒரு விடயம் கவனிக்க வேண்டும். ஆம், இங்கு நான் வள்ளலாரை ஞான சற்குருவாக ஏற்றிருந்தாலும் வள்ளலாரை மட்டுமே நம்பி நான் உங்களை படிக்க சொல்ல வில்லை எந்த சித்தரின் மீது நம்பிக்கை இருந்தாலும் அவர்களை நம்பி படிக்க சொல்கிறோமே எப்படி!!!! ஏன் எனில் எல்லா சித்தர்களும் மற்றும் ஞானிகளும் இந்த இறைவன் திருவடி (அ) மெய்பொருளை பற்றிதான் சொல்லியிருக்கிறார்கள். இதுதான் ஞானத்திற்க்கான பாதை. எல்லா ஞானிகளும் இந்த திருவடி (அ) மெய்பொருளை பற்றித்தான் சும்மா இருந்தார்கள். ஆம், சும்மா இருந்தே சுகம் பெற்றார்கள்! இதை விட்டு விட்டு வேறு எதை செய்தாலும் ஞான பாதையில் முன்னேற முடியாது! ஆம், சும்மா இருப்பது எப்படி என்று தெரிய வேண்டும் என்றால் நிச்சயமாக இந்த இறைவன் திருவடி பற்றி தெரிந்திருக்க வேண்டும் ஏன் எனில் அப்பொழுதுதான் சும்மா இருக்க (தவம் – Meditation) முடியும்.

இறைவனை நோக்கி நாம் வைக்கும் அடியில் இந்த வார்த்தை (திருவடி – கண்) எல்லா சித்தர்கள் மற்றும் ஞானிகள் பாடல்களிலும், நாம் இறைவனை வழிபடும் இடங்களிலும் மேலும் நமது தமிழ் பழமொழியில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை பற்றியே பார்க்க போகிறோம்.

ஏனெனில் இங்கு Meditation என்றால் கண்மூடி செய்வது என்று பெரும்பாலும் பரப்பபட்டிருக்கிறது. ஆனால் தவம் என்பது கண்மூடி செய்வதல்ல!!! சித்தர்கள் சொன்ன தவ முறையை தெரிந்து கொள்ள இந்த சித்தர்கள் சொன்ன திருவடி பற்றி நிச்சயம் புரிந்திருக்க வேண்டும்.

திருவள்ளுவர் (Thiruvalluvar), திருமூலர் (Thirumoolar), மாணிக்கவாசகர் (Manikavasagar), திருஞானசம்பந்தர் (thirugnanasambandar), சிவவாக்கியர் (SivaVakiyar), தாயுமானவர் (Thayumanavar), அபிராமி பட்டர் (Abirami Pattar), பட்டினத்தார் (Pattinathar) போன்ற எல்லா ஞானிகளின் பாடல்களிலிருந்தும் மற்றும் வள்ளல் பெருமானின் பாடல்களிலிருந்தும் இறைவன் திருவடி கண் தான் என்பதை எடுத்து வைக்கிறோம். படித்து சிந்தித்து தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.







----------------------------------------------------------------------------------------------------------------




தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.




-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

6 கருத்துகள்:

  1. Dear sir,
    I would like to get the ebook version of below books, please let me know where I can download.

    Tamil Version Books

    1 – சாகாக்கல்வி

    2 – வள்ளல் யார்?

    Many thanks,
    Balaji

    பதிலளிநீக்கு
  2. Just an update sir,
    I am not able to download the book from http://www.vallalyaar.com/


    Many thanks,
    Balaji

    பதிலளிநீக்கு
  3. Dear Balaji

    Download access is not there.. You can read the books online.
    All Books of Sivaselvaraj ayya are available at Connemara chennai and other major library.

    If you can visit vadalur thai poosam feb6/7/8/9. you can buy all the
    books.

    பதிலளிநீக்கு
  4. அன்பு நண்பரே,
    மிக மிக அருமையான பதிவு.எப்பொழுது ,திருவடி தரிசனம் ,பெற போகிறோம் என்று ஆவலாய் உள்ளது ?.அதற்கு,திருவருள் கூட்டுவிக்க வேண்டும் .
    மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
  5. நம்மை அறிவதை விட வாழ்க்கையில் பெரிய வேலை என்ன இருக்க போகிறது.

    பதிலளிநீக்கு
  6. Unmai pathirikaila sonna padi anthe arutpeum Jothi Andavar vanthachi evanunga vupathesam tharan thichai tharanu Tamil nada yamathitu irukanga ipo anthe arut perum Jothi Andavar vanthachi puthukottai meivazhi Salai la irukaru vanthu maranathula irunthu thappichi konga viruppam vullavar

    பதிலளிநீக்கு

Popular Posts