17. அன்னைப்பத்து
“வேத மொழியார்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதரிந் நாதனார் அன்னே என்னும்”
அம்மா என் உள்ளம் கவர் கள்வன் இறைவன் பேசுவது அனைத்தும் வேதம்! வெண்ணீறு அணிந்த மேனி செம்மேனி உடையவர்! நாதத்தொனி காட்டும் கூட்டும் பறை உடையவர்! அன்னையே இது என்ன? என வினவுகிறாள் மேலும், அந்த நாத பறையுடைய இறைவன் நான்முகன் திருமாலுக்குமே நாதனாம்! இது என்ன அன்னையே என வியக்கிறாள்!
“கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
உண்ணின் றருக்குவர் அன்னே என்னும்
உண்ணின் றருக்கி உவப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்”
அம்மா என் உள்ளம் கவர்ந்த அந்த இறைவன் கண்ணிலே அஞ்சனமையிடும் கருணையே உருவான கடல் போன்றவர்! என் உள்நின்று உருக்குவார் அன்னையே இது என்ன? என தாயிடம் வினவுகிறாள். என் உள்நின்று உருக்கி உவப்பிலா ஆனந்தம் பேரானந்தம் பரவச நிலையருளி கண்ணீராக கொட்டச் செய்வார் இது என்ன அன்னையே!
“நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத் திருப்பாரால் அன்னே என்னும்
சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தராய் அன்னே என்னும்”
என் உள்ளம் புகுந்த அந்த இறைவன் என்றும் மணக்கோலத்தில் மங்கலமாக விளங்கும் பேரழகு உடையவர்! என் சித்தத்திலே குடிகொண்டு விட்டார்! அம்மா! இது என்ன! என் சித்தத்தில் இருப்பவர் தென்திசை அமர்ந்த திருபெருந்துறைவாழும் அத்தன் ஆனந்தமானவர் இது என்ன அம்மா?
இவையெல்லாம் மெய்பொருள் பற்றி தவம் செய்யும் நாம் காணும், நம் மனதில் எழும் எண்ணங்கள் அனுபவம் எல்லாமாகும்! இறைவனே நம் மணாளர் அவர் எக்கணமும் நம்மை கடிமணம் செய்ய தயாராக இருக்கிறார்! இப்பேர்ப்பட்ட குணமுடைய ஈடில்லா கணவரை - கண்ணிலிருப்பவரை மணக்க நாம் என்ன தவம் செய்தோமோ? ஞானதவம் செய்க! வருவார் இறைவன்! சேர்ப்பார் தன்னோடு!
For upadesam - Deeksha - Satsang