வியாழன், 14 ஜூலை, 2016

வடலூர் - ஆத்ம ஞானம்

திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒளியுடலாகிய தினம்
தைப்பூசம்! 139 வருடங்கள் ஆகிறது!இன்றும் வருடா வருடம் பல லட்சம் மக்கள் அந்த மாபெரும் ஞானியின் அருள்பெற வடலூர் வருகிறார்கள்!

அதுமட்டுமா,உலகுக்கே ஞான சற்குருவான வள்ளல் பெருமான் உலக மக்களுக்கு ஆத்ம  ஞானத்தை உணர்த்தும் பொருட்டு சத்திய ஞான சபையை ஏற்படுத்தி தைப்பூச ஜோதி தரிசனமும் காட்டுவித்தார்கள்!

நம் உடலில் தலையின் உள்ளே மத்தியில்
ஆத்ம ஜோதி விளங்குவதை உணர்த்தும் விதமாக சத்திய ஞான சபையில் உள்ளே ஜோதியை வைத்து அதற்குமுன் 7 திரைகளை அமைத்து ஞான அனுபவ நிலையை விளக்கி காட்டியுள்ளார்கள். இப்படி இருக்குது உன்னிலே! உணர்ந்து கொள்! என  அறிவுறுத்துகிறார்!

வடலூருக்கு வா! சத்திய ஞான சபையில் ஜோதியை பார்!
எப்படி இருக்கிறது என நேரில் பார்த்து தெரிந்து கொள்! இது போல உனக்குள்
ஜோதி தரிசனம் உன் ஆத்ம தரிசனம் நீ காண வேண்டும் அதற்கு வழி உன்
இரு கண்களே!

Popular Posts