சனி, 20 செப்டம்பர், 2025

கண்ணாடி கண்டு தொழுதால் கலிதீரும் - பீரப்பா

  கண்ணாடி கண்டு தொழுதால் கலிதீரும்

                 பக்கம் -44.

முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து கும்பிட்டால் துன்பம் எல்லாம் போய்விடுமா?அப்படிதான் பலரும் கண்ணாடியை வைத்து பூஜித்தும் வருகிறார்கள்! பக்தி முத்தி போய்விட்டது!

பீரப்பா சொல்வது நம் கண் ஆடியை கண்டு தொழுக என்பதாகும்! நம் கண்களில் ஆடிக்கொண்டிருப்பது ஜோதி தானே! அந்த ஜோதியை கண்டு தொழ வேண்டும் என்கிறார்! அப்படி ஜோதியை கண்டவர்க்கு பாவம் புண்ணியம் என்ற இரு வினைகள் - கலிதீரும் என்கிறார்!இதுவே ஞானம்!

தண்ணாடி  - தன் ஆடி, யாவணியுந் தானாடி - அ உள்ள தான் ஆடி, - அதாவது வலது கண் அதாவது சூரிய கலை.☀️அதில் நின்ற ஒரு - அதன் மூலம் நாம் அடையக்கூடிய விண்ணாடி விண்ணில் ஆகாயத்தில் ஆடிக்கொண்டிருக்கும் பேரொளியை நாம் காண துடிக்கிறோமே!? அதற்கு ஒரே வழி நம் கண்ணில் ஆடிக்கொண்டிருக்கும் நம் ஆத்ம ஜோதியை முதலில் காண்பது தான்!

இதுதான் ஒரே வழி இறைவனை காண இறைவனை அடைய ஒரே மார்க்கம் இதுதான்! இதல்லாமல் வேறு எல்லாம் வீண் பேச்சு! ஒரு பலனும் இல்லை என பீரப்பா கூறுகிறார்கள்.

நமது தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோவில்களிலும் கண்ணாடி உண்டு! கர்ப்பகிரஹத்தில் இறைவனுக்கு தலைக்கு பின் ஒரு ஜோதி ஏற்றி கண்ணாடி மூலம் பல ஜோதியாக தெரியும் படி வைத்திருப்பார்கள்.ஒரு ஜோதி தான் பல பல ஜோதியாக நமக்குத் தெரிகிறது! இறைவன் ஒருவரே அவர்தான் பற்பல விதமாக தெரிகிறார் என்ற தத்துவத்தை விளக்கத் தான் அந்த ஜோதி! கோவிலுக்குள் செல்லும் நாம் எந்த கோவிலுக்குள் சென்றாலும் இந்த ஒரே இறைவன் தான் பற்பல ஜோதியாக உள்ளான் என்ற தத்துவத்தை நாம் காணலாம்! கண்டு பின் திரும்பும் போது மூலஸ்தானத்திற்கு எதிரில் பெரிய நிலைக்கண்ணாடியை நாம் காணலாம்! ஏன் அர்ச்சகர் தரும் விபூதியை பார்த்து சரியாக பூசிக்கொள்ளவா? தீபாராதனை சமயம் அந்த கண்ணாடி வழியாக கூட்ட நேரத்தில் கண்டு வணங்கவா? இல்லை!? பின் எதற்காக?

கர்ப்பகிரஹத்தில் ஏக இறைவன் தான் என்ற தத்துவத்தை உணர்த்தினர் ஞானிகள்,  திரும்பிய உடன், மேலே பார்க்கையில் கண்ணாடியில் -  மூலஸ்தானத்திலே உள்ள இறைவனும்,நம் உருவமும் தெரியக் காண்கிறோம்!அதாவது கண்ணாடியில் இறைவனும் நம் உருவமும் தெரியும்!? இதுதான் ஞானம்!

ஏ மனிதா! கோவிலில் இறைவனை காண வந்திருக்கிறாயே எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே! - அவரை நீ உன்னில் தான் காண வேண்டும்! உனக்குள் தான் இறைவன் இருக்கிறார்!

  உனக்குள் இறைவன் இருப்பதை கண்ணாடி - கண் - ஆடி வழியாகத்தான் பார்க்க முடியும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்! இதுவே ஞானம்! கண்ணில் மணியில் மத்தியில் ஜோதியாகிய இறைவன் இருப்பதை உணர்க! என்பதே ஞானிகள் கூற்று.

நிலைக் கண்ணாடியை கும்பிடும் மக்களே, உங்கள் மனம் நிலைக்குமானால் கண்ணிலே - ஆடிக்கொண்டிருக்கும் ஜோதியை காண்பீர்கள்! இதை விளக்க சாட்சி பாவனையே புறத்தில் எல்லா கோயில்களிலும் வைக்கப்பட்டுள்ளது நிலைக்கண்ணாடி!

நிலைக்கண்ணாடியிலே நம் புற உருவம் தெளிவாகத் தெரியுமல்லவா? அதுபோல நம் மனம் கண் -  ஆடி -  ஜோதியிலே 👀 நிலைக்குமானால் நம் அக உருவம் தெளிவாக காணலாம். இந்த பூத உடலுக்குள் உள்ள சூட்சும உடலை காணலாம்! சாதனை சாதனை சாதனை எனத் தொடந்து செய்தால் காணலாம் நம்முள் நம்மையே!!

 👁️🔥👁️


உலக குருவின் திருவடிகளே சரணம்🙏🏻

ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்🙏🏻

அடிகள் உறையும் அறனெறி நாடு



"முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்"

ஞானவிளக்கம் :

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த -

ஒவ்வொரு மனிதனும் என்று பிறக்க வேண்டும் எப்படி அதன் முடிவு அமைய வேண்டும் என்பதை முன்னரே வகுப்பவன் யாராக இருக்க முடியும் ? எல்லாவற்றையும் நடத்துபவன் இயக்குபவன் தானே இறைவன் ! இதுவே தேவ இரகசியம் !

நாம் என்று ? எங்கு ? யாருக்கு ? பிறக்க வேண்டும் என தீர்மானித்து நம்மை இந்த உலகில் பிறப்பிக்க அருள்பவன் இறைவன் அல்லாமல் வேறு யார் ? அடிகள் உறையும் அறனெறி நாடு -

அடிகள் - திருவடிகள் இறைவனின் திருவடிகள் தான் நம் கண்கள் என பற்பல ஞானிகள் பகர்ந்துள்ளனர். வேதங்களும் அவ்வாறே கூறுகின்றன.

அங்ஙனம் திருவடியாகிய நம் கண்களில் உறையும் ஜோதியை உணர்ந்து தவம் செய்வதே உத்தமம் !

கண்களில் ஜோதி இருப்பதை உணர்ந்து அதை நினைத்து உணர்ந்து நெகிழ நெகிழ தவம் செய்வதே தூய நெறி என அற நெறி என இறைவனை அடைய வழி காட்டும் ஒப்பற்ற வழி நெறி என்று திருமூலரும் தெளிவாக உரைக்கின்றார்.


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts