ஞாயிறு, 24 நவம்பர், 2024

தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால்

 பிள்ளைச் சிறு விண்ணப்பம்

தடித்தஓர் மகனைத் தந்தை ஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்

பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனி ஆற்றேன்

பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனி ஆற்றேன்

திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் பாமாலைகள் ஒவ்வொன்றும் ஞான அனுபவமே! இப்பாடல் உலகப்பொருள் இலகுவாக புரிந்துவிடும்! ஞானம்! நாம் நம் கண்மணி ஒளியை எண்ணி தவம் புரியும்போது, தந்தை பற்றிக்கொள்ளும்! தாயாகிய - வலது அதேபோல இடது கண் வீங்கி தடித்தால் வலது கண் அவ்வொளியை உணர்வை உள்வாங்கிக் கொள்ளும்தால் வலது, கருணைக்கடலே எனக்கு தந்தையும் நீ! தாயும் நீ! அம்மையப்பனான நீ எனக்கு உணர்வு மேலீட்டால் துன்பம் வராது சுகமாக இருக்க அருள்புரிவாயாக! என் கண்மணி ஒளியாக ஆடும் அம்பலவாணா வேதனை நீங்கி சுகமாக தவம் நிலவ அருள்புரிவாயாக!


குருவின் திருவடி சரணம் 

👁️🔥👁️

உண்ணாமுலை - அண்ணாமலை

''உண்ணாமுலை யுமையாளொடு

முடனாகிய வொருவன் -
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ -
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் -
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண மறுமே"

தேவாரம் பாடல் - 97

உண்ணாமுலை - திருமணமான பின்பு தானே தாயாகி தன் பிள்ளைக்கு முலைப்பால் ஊட்டுவாள் தாய்! ஆனால் உலகீன்ற அன்னை பராசக்தி பார்வதி உண்ணா முலையம்மன் என்றால் அவள் கன்னி என்றே பொருள். சிறு பெண் என்றே பொருள்! வாலை - பாலா குழந்தை என்றே பொருள்! 








ஒவ்வொருவரும் தன்னுள் இருக்கும் சீவனை காணுமுன் உள்ளே வாலையருளால் அமுதம் பெறுவார்கள்! சீவனை காண்பார்கள் சிவமாவார்கள்! வாலை அமுதம் உண்டவனே ஞானியாவான்! அந்த சீவனோடு சிவமும் சக்தியுமாய் இருக்கிறான் சிவம்! அந்த பெண்ணாகிய பெருமான் மலையென உயர்ந்து நிற்கிறான் மணி திகழ! கண்மணியில் திகழும் படியாக! அருவிகள் பாய விலங்குகள் அதிர மண்ணிலே சிறந்த மலை அண்ணாமலையாம்! 

அருவி பாய என்றது மலையென விளங்கும் கண்ணிலிருந்து தவத்தால் கண்ணீர் அருவியென கொட்டும். துர்குணங்களே துஷ்ட மிருகங்கள் எனப்பட்டது. காடும் மலையுமான இடம் கரடுமுரடான மலை நம் வினை சூழ்ந்த கண்ணே அண்ணாமலை! 

இந்த கண்ணிலே திருவாகிய இறைவன் ஒளியானவன் அண்ணாமலையான், உண்ணா முலையாளோடும் இருப்பதை அறிந்து உணர்ந்து தவம் செய்வார் பாவவினை தீரும் அக்னி மலையை உணர்ந்து தவம் செய்பவன் தன்னுள் அக்னியை பெருக்கி அருள் பெறுவான் ஞானம் அடைவான்! தன் வினையாவும் நீங்கப்பெறுவான்! தூயவனாவான்!

மூவர் உணர்ந்த முக்கண்
பக்கம் - 29,30.
உலக குருவின் திருவடிகளே சரணம்
ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்

🔥 திருமூலர் கூறும் ஞானம் 🔥



🔥 திருமூலர் கூறும் ஞானம் 🔥

"திருவடியே சிவ மாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல் கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே"

திருமந்திரம் - 138

இறைவனின் திருவடியே நமது கண்கள் !
சற்குரு உபதேசம் பெற்று தவம் செய்தால் நம் உள்ளம் புரிந்து கொண்டால் நம் கண்களே சிவமாகிய ஒளி உள்ளது என தெளிவாக உணரலாம் ! தேறிட்டாம்பா ! என நம் உறுதியை பார்த்து மற்றவர் கூற வேண்டும் !

திருவடியாகிய நம் கண்களே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்கு நம்மை அழைத்துச் செல்லுமாதலால் அதுவே சிவலோகம் அல்லவா ?

எப்படிபோகும் ? நாம் கண்ணில் மணியில் ஒளியை வைத்து சிந்தித்தால் அல்லவா செல்லும் !
மணியில் மனதை இருத்து !

திருவடியே நமக்கு கதி மோட்சம் தருவதாகும்.
திருவடி மூலமாகத் தானே சிவலோகம் சேரலாம் !
சேர்ந்து சிவ நடனம் காணலாம் ! கண்டால் தானே கதி மோட்சம் !
திருவடியே தஞ்சம் என பரிபூரண சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும் ! அதாவது வினைகளற்று பரிசுத்தமாகும் ! அழுக்காகிய மும் மலம் அகன்று ஆத்மா தெளிவாக துலங்கும் !

▪️எல்லாவற்றுக்கும் தேவை திருவடி !
▪️எல்லாம் பெற தேவை திருவடி !
▪️நாம் நாட வேண்டியது திருவடி !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

விதிப்படி வாழ்வதல்ல, மனித வாழ்க்கை !


விதிப்படி வாழ்வதல்ல,
மனித வாழ்க்கை !
விதியை வெல்லக் கூடியவன்தான்,மனிதன் !

நம்முடைய AIM,
நம்முடைய இலட்சியம் !
உயர்ந்ததாக இருக்கணும் !
நோக்கம் -
நல்லதாக இருக்கணும் !

இறைவனை அடையணும் !
நிச்சயமாக ,
குருமார்கள் - ஞானிகள்
காப்பாங்க !

எதுவா நடக்கட்டும் ! சாதனை,
தொடர்ந்துட்டே இருக்கணும் !

கர்ம வினை - உங்களை
போட்டு அலறடிக்கும்.

தாக்குப் பிடிக்கணும் !
வைராக்கியமாக இருக்கணும் !
இருந்தால், சாதிக்கலாம் !

👁️ஞான🔥சற்குரு👁️

Popular Posts