ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

ஓடிக்கொண்டிருக்கும் மனதை இறைவன் திருவடியில்....

கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில் பொன்னை புதைத்து வைக்க முடியுமா?

ஆற்றிலே வெள்ளம் இல்லாத போது பொன் புதைப்பவனும் முட்டாளே!

ஆற்றங்கரையில், அமைதியான இடத்திலேதான் எதையும் வைத்து பயன்பெற இயலும்.

நம் வினைகளால் மனம் ஓயாது ஓடிக்கொண்டே இருக்கின்றது. கடல் அலைபோல சலித்துக் கொண்டே இருப்பதுதான் நம் மனம்!

அப்படிப்பட்ட மனதில் எப்படி இறைவனை  எண்ண முடியும்.?
உணர்வது? மனமானது வினை உள்ளளவும் இருக்கும்!
செயல்பட்டுக் கொண்டேயிருக்கும்!

ஆற்று வெள்ளத்தில் எதிர்நீச்சல் போட முடியாது.! நிற்கவும் முடியாது!

அதன் போக்கிலேயே போய் கரையேற வேண்டியதுதான்! ஓடிக்கொண்டிருக்கும் மனதை  இறைவன் திருவடியில் ஓடச்செய்வதே புத்திசாலித்தனம்.

நம் கண்மணியில் மனதை நிறுத்தி பழக பழக ஓடும் பொல்லாத மனம் ஒருநாள் அடங்கும்.

வேகம் குறைந்து இறைவன் திருவடியாகிய நம் கண்மணி ஒளியில் நின்று விடும்!

குருமூலம் கண்மணியில் உணர்வை தீட்சை பெற்றவன் பழகி பழகி தவம்செய்து உணர்வை பெருக்கி ஒளியை பெருக்கி மனதை இல்லாமலாக்கிவிடுவான்? எத்துன்பமும் வராது காப்பாற்றப்படுவான்!



ஞானசற்குரு திருசிவ  செல்வராஜ் ஐயா
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞான உரை இரண்டாம் பகுதி
பக்கம்:22

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts