வியாழன், 14 பிப்ரவரி, 2019

சத்விசாரம் செய்வது எப்படி? – வள்ளலார்


சுத்தசன்மாக்க சாதனங்களாக வள்ளல் பெருமான் நமக்கு கூறுவது இரண்டு.

அவைகள்:   பரோபகாரம்,
                       சத்விசாரம்.

அதில் "சத்விசாரமாக"  வள்ளலார் கூறுவதை பற்றி இக்கட்டுரையில் பார்போம்.

'' சத்விசாரம்'' செய்கிறேன் என்று பல வள்ளலார் பக்தர்கள் இணைய தளத்திலும், நேரிலும் விவாதம் செய்து கொண்டுள்ளனர்.

சிலரோ விஞ்ஞானத்தினைக் கொண்டு விளக்கம் கூற முயல்கின்றனர்.

ஆனால், இதையா வள்ளல் பெருமான் "சத்விசாரம்" என்றார்🤔?

ஆன்ம அறிவினால் தான் கடவுளை அறிய முடியும் என்றும் ஆண்டவர் தான் நமக்கு தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார் என்று வள்ளல் பெருமான் தெளிவாக கூறுகிறார்.

அதனால் வெறும் புத்தகத்தினை படிப்பதாலோ அல்லது விவாதம் புரிவதாலோ எக்காலத்திலும் உண்மையினை அறிய முடியாது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


ஏனெனில் மேற்கூறிய முறைகள்  நமது அந்தகரனங்களான மனம் , புத்தியை கொண்டு தெரிந்து கொள்ள முற்படுவது.

அதனால் மேற்குறிய யாவும் சத்விசாரம் அல்ல.!

சத்விசரமாக வள்ளல் பெருமான் கூறுவது இதையே:

“சத்விசாரமென்பது கடவுளினது புகழையும் ஆன்மாவின் தரத்தையும் நமது சிறுமையையும் கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது.”

வள்ளல் பெருமான் மேல் கூறி உள்ள வரிகளை இன்னொரு முறை படித்து நினைவில் வைத்து கொண்டு அடுத்து படிக்கத் தொடருங்கள்.

சத்விசாரம் என்னவென்று பேருபதேசத்திலும்,உரைநடை பகுதியிலும்
வள்ளல் பெருமானே மேலும் விளக்கி உள்ளார்.

சத்விசாரம் = சத் + வி + சாரம். சத் (அ) சத்தியம் . நமது உடலில் சத்தியம் ஆக , அழியாததாக விளங்குவது நமது ஆன்மா.

வி – விலக்குதல் / நீக்குதல். சாரம் – துன்பம் / துக்கம்.

அதாவது சத்விசாரம் எனில் நமது ஆன்மாவினது துக்கத்தினை நீக்குதல் என்று பொருள் படும்.

ஆன்மாவிருக்கு உள்ள துக்கத்தினை நிவர்த்தி செய்து கொள்வது தான் சத்விசாரம். ஆன்மாவிருக்கு துக்கம் எதனால் உண்டாகிறது? ஆன்மாவிருக்கு துன்பம் (அ) குறை அதை பற்றியுள்ள அதன் திரைகளே என்கிறார் வள்ளலார்.

ஆன்மாவிற்கு துன்பம் தரும் இத்திரைகளை நீக்க நாம் செய்யும் நன் முயற்சியே சத்விசாரம் ஆகும்.

இம்முயற்சியாக வள்ளல் பெருமான் கூறுவது நமது திரையை நீக்க எந்நேரமும் இடைவிடாது தெய்வத்தினை  நினைத்தும் , ஸ்தோத்திரித்தும் நமது குறையை ஊன்றியும் வருவதே.

தெய்வத்தின் புகழ் பாடுதல் , நமது சிறுமையினை நினைத்தல் இவைகள் நமக்கு மன நெகிழ்ச்சியை உண்டாக்கும். (மன நெகிழ்ச்சியே பக்தி.)  பணிவினை கொடுக்கும்.

ஆகா சத்விசாரத்திற்கு நமக்கு முதலில் வேண்டியது" பக்தியும், பணிவும்" . 

அடுத்து குறையினை கடவுள் "திருவடி" யில் விண்ணப்பியுங்கள் என்கிறார்.

இங்கு நன்றாக கவனியுங்கள் கடவுளிடம் விண்ணபிக்க சொல்ல வில்லை.

கடவுள் திருவடியில் விண்ணபிக்க  சொல்கிறார்.

குறை என்பது நமது ஆன்மாவினை பற்றி உள்ள திரைகள் என்று அறிந்தோம்.

அடுத்து கடவுள் திருவடி என்பது எது?

எவ்வாறு விண்ணப்பிப்பது என்று அறிய வேண்டும் அல்லவா?

இந்த  திருவடியினை போற்றி  “திருவடி புகழ்ச்சியில்” பல நூறு பாடல்களை பாடி உள்ளார் வள்ளல் பெருமான்💪.

திருவடி என்பது நமது கண்கள் தான் என்பதை எங்கள் இணைய தளம் முழுவதும் எல்லா ஞானிகளின் பாடல்களை கொண்டு ஆதாரத்தோடு விளக்கம் அளித்துஉள்ளோம்.

“காணும் கண்களுக்கு காட்டும் ஒளியாய் , காட்டும் ஒளிதனக்கு காட்டுவிக்கும் ஒளியாய் பூனும் திருவடிகள்” – திருவருட்பா

கண்ணாகவும், கண்மணி ஒளியாகவும் , அந்த ஒளிக்கு ஒளி தரும் ஒளியாகவும் இறைவன் திருவடிகள் விளங்குகிறது என்பதே இதன் பொருள்👍.

சூட்சுமமாக கண்ணில் துலங்கும் ஒளியில் தான் நமது வினை திரை அழிந்து இல்லாமல் போகும். அதனால் தான் இறைவன் திருவடியில் விண்ணபியுங்கள் என்கிறார் வள்ளல் பெருமான்.

இறைவன் திருவடியில் விண்ணப்பிபது எவ்வாறு?

பேருபதேசத்தில் சுத்த அதியுஷ்ணத்தினால் தான் திரைகள் நீங்கும் என்று கூறி உள்ளார்கள்.
இறைவன் திருவடியே இந்த சுத்த அதியுஷ்ணத்தினை உண்டு பண்ண முடியும்.

ஆக கண்மணியில் கண்மணி ஒளியினை கொண்டு உஷ்ணத்தினை  உண்டு பண்ணுதலே கடவுள் திருவடியில் சமர்பித்தல் / விண்ணபித்தல் ஆகும்.

கடவுள் திருவடியில் (அ) கண்மணி ஒளியினால் ஏற்படும் உஷ்ணம்  அதனால் இது சுத்த உஷ்ணம் எனப்படும்.


சாதாரண மனிதர்களுக்கு கண்மணியில் ஒளி இருப்பினும் ஏன் இந்த உஷ்ணம் ஏற்படுவது இல்லை?

ஏனெனில் நம்முள் உள்ள இறைவன் செயல் படாமல் நம் வினை செயல்படுவதால் தான்.

இறைவன் தான்  செயல்படமால் சாட்சியாக இருந்து வினை வழியே நம்மை ஆட்டுவிப்பதினால்.

நமது கண்மணி மத்தியில் ஊசி முனை அளவு ஒரு துவாரம் இருக்கிறது. இதில் தான் நமது ஆன்ம ஒளி துலங்குகிறது. சூட்சமமாக உள்ள இந்த ஆன்ம ஒளியினை சூட்சுமமான வினை திரைகள் மறைத்து உள்ளன.

வள்ளல் பெருமான் போன்ற ஞானி ஒருவரது ஒளியினால் வினை திரைகள் துளைக்கப்பட்டு, நமது கண்மணி ஒளி தூண்டப்பட வேண்டும். அப்போது தான் நம் உள் இருக்கும் இறைவன் செயல் பட ஆரம்பிபார்.

இதை தான் “குரு அருள் இல்லையேல் திருவருள் இல்லை” என்கிறார்கள்.

சரி எவ்வாறு நாம் வள்ளல்பெருமானின் ஒளியை பெறுவது?!. 

அருட்பெரும் ஜோதி ஆகி உள்ள வள்ளல் பெருமானை நாம் நேரடியாக  பெறவோ (அ) காணவோ இயலாது . அதனால் மனித உருவில் உள்ள குருவின் மூலமே வள்ளலார் நம்முள் பிரவேசிப்பார்.

நமக்கு உயிர் தந்தது எல்லாம் வல்ல இறைவன் தான் ஆனால் தாய் தந்தையின் மூலம் தானே இந்த நாம் உலகத்தில் பிரவேசித்தோம். அது போலவே நம்முள் வள்ளல் பெருமானை பெற மனித உருவில் ஒரு குரு வேண்டும்.

வள்ளல் பெருமான் நம்முள் வர காரணமாக உள்ளவரை தான் ஞான சற்குரு என்கிறோம்.

அதனால் தான் பல இடங்களில் வள்ளல் பெருமான் குருவினை பெறுங்கள் என்று கூறி உள்ளார்கள்.

இந்நிகழ்வினை  தான் திருவடி தீட்சை என்பர்.

தீட்சை என்றால் மலம் ஒழித்தல் என்றும்,
தீ + அட்ச்சை என்று பொருள்.

இறைவனை (கண்மணி ஒளியை) செயல்படாமல் செய்யும் மலத்தினை நீக்குதல் தான் தீட்சை.

அதாவது நமது கண்ணில் சுத்த உஷ்ணத்தினை பெற நாம் நம்முள் வள்ளலாரை பெறுவதே தீட்சை.

வள்ளலார் தான் என் குரு என்று கூறுபவர்கள் அவர் சூட்சுமாக உங்களுக்குள் பிரவேசிக்க இப்போது ஒரு ஞானசற்குருவை பெற்றேயாக வேண்டும்.

தகுந்த ஆச்சாரியர் மூலம் உங்கள் நடுக்கண்ணைத் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம் - திருவருட்பா!

இவ்வாறு நமது கண்ணில் பெரும் உஷ்ணத்தில் (உணர்வில்) வள்ளல் பெருமானின் துணை கொண்டு நாம் ஒன்றுவதே சத்விசாரம் ஆகும்.

இது தான் திருவடி தவம் ஆகும். பக்தியோடு செய்யும் இந்த திருவடி  தவத்தின் மூலம் தான் யோகிகள் காட்டிற்கு சென்று செய்யும் தவத்தினை விட அதிக உஷ்ணம் பெற முடியும் என்கிறார் வள்ளல் பெருமான்.

இறைவன் திருவடியில் நமது மனதினை எப்போதும் வைத்து இருப்பது தான் சும்மா இருத்தல் ஆகும்.

இந்த சத்விசாரம் தொடர தொடர நமது திரைகள் சிறிது சிறிதாக நீங்கும்.    ஆண்டவர் வெளிபடுவார். நமக்கு தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார். பெறவேண்டியதை பெற்றுகொள்ளலாம்.

இதுவே சுத்த சன்மார்க்கத்தின் சாதனம். இதை விடுத்து வெறும் விவாதம் புரிவதாலோ அல்லது விஞ்ஞானம் பேசுவதாலோஒரு பயனும் இல்லை.

இவைகளால் மனம் அதிகம் செயல் பட்டு திரையின் கடினத்தினை தான் அதிகப்படுத்தும்.

நயன தீட்சை பெற்று தவம் செய்க
கண் தவம் (உணர்வோடு இரு ) செய்க
விழித்திரு!


 --->பார்க்க Www.vallalyaar.com

👁👁

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts