செவ்வாய், 20 மார்ச், 2018

கடவுளை காணும் வழி


கடவுளை காணும் வழி :–
திருஅருட்பிரகாச வள்ளலார்.
(Www.VallalYaar.Com)

இறைவனை அடைவதாக சொல்லி 
பலர் செய்யும் தவறான
செயல் முறைகளை கீழ்கண்ட
பாடலின் மூலம் விளக்குகிறார் திருவருட்பிரகாச வள்ளலார்.

"காண்பது கருதி மாலொடு மலர்வாழ்
கடவுளர் இருவரும் தங்கள்
மாண்பது மாறி வேறுரு எடுத்தும்
வள்ளல் நின் உரு அறிந்திலரே"
– திருவருட்பா *(தலைப்பு : அறிவரும் பெருமை)
இந்த பாடலின் மெய்ஞ்ஞான விளக்கத்தை ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் “திருவருட்பா” பாடல்களுக்கு எழுதி உள்ள உரையில் “திருவருட்பா பாமாலை“ முதல் பகுதி என்ற நூலில் விளக்கி உள்ளார்கள்.
இறைவனை காண வேண்டுமென , திருமால் பன்றி உருவெடுத்து அதல பாதாளம் போனார் காண வில்லை. பிரம்மன் அன்ன பட்சியாக உருவெடுத்து ஆகாயத்தில் மேலே மேலே போனார் காணவில்லை. இதுகதை!? இவைகள் நமக்கு தெரிவிப்பது என்ன?
நம் உடம்பில் , யோகம் – தவம் செய்கிறேன் என்று பலர் மூலாதாரத்தை நாடி குய்யத்துக்கும் குதத்திற்கும் மத்திய பகுதியில் நினைவை நிறுத்தியோ , பிரணாயாமம் செய்தோ இன்னும் பல வழிகளிலும் தவம் செய்வர். அங்கே காண முடியாது இறைவனை.
இன்னும் சிலர் நம் உடல் சிரசில் மேல் நினைவை நிறுத்தி தவம் செய்வர். பிராணாயாமம் செய்து காற்றை நிறுத்துவர் . அபாயம். மூடும் தலையையும் இல்லாமல் செய்யும் தவம் இது. பேராபத்துக்கள் இதனால் ஏற்படும். பிரம்மன் சிரசுக்கு மேலே போன கதை இதுதான். காணவே முடியாது கடவுளை.
இந்த இரு வழியிலும் செல்வோர் தான் அதிகம்.
கீழே போனாலும்(குண்டலினி-வராகர்) காண முடியாது.
மேலே போனாலும்(பிரம்மா-வாசி)
காண முடியாது.

நடுவிலே – கண்மணி நடுவிலே ஒளியான கடவுளை காண உணர வேண்டும். வழி காட்ட குரு வேண்டும். விழி காட்ட பெற்றால் விழியின் உள் சென்று இறைவன் – திருவடியை உணர்ந்து தவம் செய்தால் திருமுடி அறியலாம். உணரலாம். காணலாம்.
காலை பிடித்தால் தலை தாழ்ந்து வந்து விடும் அல்லவா. திருவடியை பிடித்தால் திருமுடி நம் கைக்கு வந்துவிடும். இறைவன் கருணை வடிவானவன் அல்லவா? திருவடியை தொட்டால் திருமுடியை காட்டுவான். காணலாம் கண்ணார கடவுளை கண்ணிலேயே. முதலில் திருவடி தரிசனம். பின்பு தான் திருமுடி தரிசனம்.
கண்ணில் தான் – கண்மணி ஒளியில் தான் தவம் செய்ய வேண்டும் என்று மற்ற பாடலிலும் வள்ளல் பெருமான் திருவருட்பாவில் கூறி உள்ளார்கள்.
கண்மணிக்குள் துலங்கும் கண்மணி ஒளியான இறைவன் திருவடியை காணவும் கண்மணி ஒளியை நினைந்து , குரு அருளால் பெற்ற ஒளி உணர்வை பற்றி கண்ணீர் பெருக தவம் செய்ய வேண்டும்.
இதுவே இறைவன் அடி – முடி காண ஒரே வழி.

தகுந்த ஆச்சாரியர் மூலம் உங்கள் நடுக்கண்ணைத்(கண்மணிமத்தி) திறக்கப் பெற்றுக் கொள்வது நலம் (அருட்பா)
👀

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts