ஞாயிறு, 12 மார்ச், 2017

நெஞ்சு கனகல்லும் நெகிழ்ந்துருக


ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனை பணிந்து வாழ்த்தினால்
மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
துக்க மியாவையும் தூர ஓடுமே

மனமே மனிதர்கள் காமத்தால் ஏற்படும் உடல் சூட்டையும்
அதன் பின்னால் வரும் துன்பங்கள் யாவையும் நீங்க தன்
உடலில் ஒற்றியிருக்கும் -கண்மணியின் உள் ஒற்றியிருக்கும்
அந்த ஒளியை பற்றி, மேலும் மேலும் பற்றி வளர்ச் செய்தால்
தவம் செய்தால் தப்பலாம்! இன்பமாக வாழலாம். மும்மலமாகிய
விஷத்தை கொண்டநாதன் கண்மணி ஒளி -படம் பக்கநாதன்!

கல்லை யொத்த என் கன்ம நெஞ்சமே - பாடல் 7

கல் போன்றது என் கன்ம நெஞ்சம் - கல்மனம். நம் மனம் - கன்ம நெஞ்சம்.
அதாவது நாம் இப்பிறவியில் கொண்டுவந்த பிராரத்துவ கர்ம வினை நம்
மனம் மூலமாக அரங்கேறுகிறது. பிறந்து நடத்தும் ஆகான்மிய கன்மமும்
நம் மனம் மூலமே நடக்கிறது.  

'தவத்தால் இவ்விரண்டும் இல்லாது போகையில் வரும் சஞ்சித கர்மமும்
வரும் இடம் மனம் தான். வினையை தாங்குவதால் சராசரி மனிதனின் மனம்
கல்லாகி விடுகிறது. "நெஞ்சு கனகல்லும் நெகிழ்ந்துருக" என ஒரு ஞானி பாடுகிறார்.

மனம் கல்லான மனிதன் தான் யார் என உணரத்தான் நம் முன்னோர்கள் கோயிலில் கல்லால் இறை உருவத்தை பலவாராக வடித்தார்கள்! கல்லான மனம் படைத்த  மனிதன் மனம் உருக உருக கடவுள் காட்சி அனுபவம் பெறுவான்! கோவிலில் கல்லாக வடிக்கப்பட்ட கடவுள் சிலை முன் இவன் போய் கல்லாக உட்கார்ந்து இருப்பானேயானால் கர்ப்பகிரகத்தில் உள்ள கல் பேசும். கல் போல் அமர்ந்த மனிதன் காணுவான் கண்ணாலே!

உடல் கல்லாகிவிட்டால் கன்மட்டுமே உணர்வோடு இருப்பதை அனுபவத்தில்
உணரலாம்! கல்லான மனம் கரைய கண்குளிர தவம்  செய்ய வேண்டும்.
உடல் கல்லாக வேண்டும். மனம் இல்லாது போக வேண்டும்! மனம் இல்லாது
போனால் வினை இல்லாது போக வேண்டும்! மனம் இல்லாது போனால்
வினை இல்லாது போகும்! வினை இல்லாது போனால் பிறப்பு இறப்பு
இல்லாது போகுமே! அதுதானே வேண்டும்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts