ஞாயிறு, 12 மார்ச், 2017

பொருள் / அருள் இல்லார்க்கு?

2.16 எழுத்தறியும் பெருமான் மாலை

பொன்னைமதித்தையா நின் பொன்னடியை போற்றாத ஏழைகட்கும் ஏழை கண்டாய் - பாடல்19

பொன்னை பெரிதாக மதித்து அதனை பெற அல்லும் பகலும் பாடுபடும் இவ்வுலகில் பொன் பொருள் இல்லாதவரை ஏழை என்பர்! ஆனால் இறைவனின் பொன்னடியை - தங்க ஜோதியை உணராதவன்
தான் உண்மையிலே ஏழையிலும் ஏழை!! பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை! அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை!

பொருள் என்றால் பொன் பணம் அல்ல!? மெய்ப்பொருள்! மெய்ப்பொருள் உணராதவன் தவம் செய்யாதவன் இவ்வுலகில் வாழ முடியாது!

வினைகளுக்குட்பட்டு ஜனன மரண பிணியில் மாட்டிகொள்வான்!
 இவ்வுலகம் சிறப்பாக வாழ வேண்டுமானால்
தன்னிலே இருக்கும் பொருளை - மெய்ப்பொருளை அறிய வேண்டும். குரு மூலமாக உணர வேண்டும். இவ்வுலகமே இல்லையெனில் அவ்வுலகம் எங்ஙனம் கிட்டும்! இவ்வுலகில் பொருள் அறிந்து குரு மூலமாக உணர்ந்து தவம் செய்பவர்க்கே அவ்வுலகம்
கிட்டும். அ + உலகம் = அவ்வுலகம் கிட்டும் இறைவன் இருக்கும் உலகம் கிட்டும்!  அதைவிட பெரும்பேறு உண்டுமா?!


ஞான சற்குரு சிவசெல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts