செவ்வாய், 18 ஏப்ரல், 2017

விதியினை வெல்ல வாலை அன்னை கூறும் வழி




“அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே”

திருமந்திரம் பாடல் – 1186

உலகத்தவர் கதை கதையை விதம் விதமாய் என்னவெல்லாமோ கூறுவார்!? இவை அனைத்தையும் தூரத் தள்ளி விடுங்கள்!

இறைவனை துதி செய்யுங்கள். குருவை நாடி இறைவன் நம் உடலில் கண்ணில் மணியில் ஒளியாக இருக்கிறன் என்பதை ஓர்ந்து தெளிந்து தவம் செய்யுங்கள்.

அப்போது கண்மணி சுழற்சி கூடும். இதுவே தவப்பயன்.
நோக்கு, பார், உணர்! அங்கேயே நில். ஒளி பெருகி முச்சுடரும் ஒன்றாகி விதியை வென்றிடலாம். முக்கர்மங்களையும் (பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம்) மும்மலங்களையும் இல்லாமல் ஆக்கி இன்புறலாம்.
சந்திரனில் இருக்கும் தாய் சொன்ன மூன்று ஜோதிகளையும் அடைவதே பெரும் பேறாகும்.

மண்டலம் மூன்று என்றது மூன்று ஜோதியே! சூர்யா மண்டலம் – வலது கண். சந்திர மண்டலம் – இடது கண். அக்னி மண்டலம் – உள் ஆத்ம ஸ்தானம்.
மதிமலராள் – மதி என்றால் சந்திரன். மலராள் – கண் மலரில் உள்ளவள்.
சந்திரனில் உள்ள சக்தி தாய்! இதையே அவ்வையாரும் “மூன்று மண்டலத்தில் முட்டிய தூணை …” என விநாயகர் அகவலில் பாடியுள்ளார். உணர்க!

- ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா
மந்திர மணி மாலை நூலில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts