திங்கள், 13 ஜூலை, 2015

நந்தி = நம் தீ


அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள் செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தே
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே






நந்தியம் பெருமான் - நம் தீயான அந்த பரம்பொருள் பேரொளி!
அன்புமயம்! அறிவு மாயம்! அறிவே வடிவாகி ஒளிர்வதே நம் ஆன்மா!
அதை எனக்கு அறிவித்தது என் நந்தி! நந்தியை அடைந்தால் அறிவு
துலங்குவது அதனால்தான்! ஒரு கணப்பொழுதில் எல்லா ஞானமும்
நம் உள் ஒளியை அறிவு வடிவை அடைவதால் பெறலாம் என வள்ளலாரும்
கூறுகிறார் ! இதை அறிவித்து நந்தி ஞான சாதனை செய்ய நமக்கு
அருள் புரிந்தாலே நம்மால் அறிய முடியும்!ஞான சற்குருவிடம் மெய் பொருள்
உபதேசம் பெற்று நந்தியை அடைந்து அவருளாலே நானும் அறிவு ஞான
சொரூபம் என அறிந்து கொண்டேன்! அறிவுக்கு அழிவில்லை! அறிவிற்கு
ஒளிக்கு அறிவே ஒளியே ஆதாரம்! சுத்த அறிவே, பரிபூரண அறிவே ஞானம்!
நம் ஒளி பெருகப் பெருக ஞானக்கனல் பெருகி உள்ளொளி பெருகும் போது
அறிவு கொஞ்சங் கொஞ்சமாக துலங்கும். உள்ளொளி பெருக அறிவு பெருகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts