ஞாயிறு, 14 ஜூன், 2015

முப்புரம் ஆவது மும்மல காரியம்


அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும்மல காரியம்
அப்புறம் எய்தமை யாரறி வாரே! - திருமூலர்





அப்புவை அணிந்த சிவந்த சடைகளையுடைய ஆதி முதல்வன்
சிவம் ஒளி! நமது கண்களில் நீர் உள்ளது தவம் செய்வதால் சிவந்த ஒளிக்கலைகளை உடையது அந்த ஆதியே மணியின் ஒளி! சிவபெருமான் திரிபுரந்தகர்களை அழிக்க அவர்கள் கோட்டைகளை முப்புரங்களை புன்னகையால் எரித்து அழித்தார் என புராண கதை கூறுவார்! இங்ஙனம் கதை அளக்கும் சைவர்கள் மூடர்கள் முட்டாள்கள்  என திருமூலர் கூறுகிறார்! 

ஞானம் அறியாதவர்களை இதுவரை அடியேன் மூடர்கள்
என்று கூறுவது சரிதானே! கதை பேசி காலத்தை ஓட்டுபவர்கள் முட்டாள்களே! அதை கேட்டும்  பாமரன் ஒருநாளும் கடை தேற முடியாது!

"முப்புரம் ஆவது மும்மல காரியம்"  திருமூலரே கூறுகிறார் முப்புரம் என்பது நமது ஆத்மாவை மறைத்து நமது கண்ணை மறைத்திருக்கும் மெல்லிய - ஜவ்வே - திரையே மும்மலங்களால் ஆன சூட்சும சக்தியாகும்! இந்த திரை தான் சிவன் புன்னகைக்க எரிந்து விடும்! 

அதாவது புன்னகை - உதடுகள் லேசாக பிரிவது!நம் கண்மணி ஊசி முனை துவாரத்தின் உள் ஒளியே சிவம்! நம் தவத்தால் ஒளி பெருகி ஊசிமுனை துவாரத்தை அடைத்திருக்கும் ஜவ்வு லேசாக விலகும். விலக உள் ஒளி பிரவாகித்து வினை திரை யை எரித்து விடும்! எவ்வளவு பெரிய ஞான அனுபவத்தை திருமூலர் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்! அதன் விளக்கத்தை அடியேனை வைத்து எவ்வளவு தெளிவாக எளிதாக ஞான விளக்கம் கொடுத்திருக்கிறார் அப்பெருமான்! இதுவே மெய்ஞானம் !

கதை பேசி காலத்தை ஓட்டாதீர் சைவர்களே! சைபர்கலே! உண்மை ஞானம் உணர்க! சாதி சமய வேறுபாடுகளை களைந்து ஒரே நெறியில் உயர் நெறியாம் சன்மார்க்க நிலை நின்று சாயுச்சயம் பெற வாரீர்! 

சிவன் புன்னைகைக்க மும்மலம் கழிய பிறகென்ன ஆத்ம ஞானம் கிட்டும் அதுவே பேரின்பம்! நீ முட்டாள் என கூறுவது உன்னை திட்டுவது அல்ல ! உண்மை அறியாமல் இருக்கிறாயே! உன் மெய்யில் அறியாமல் இருக்கிறாயே ! சிவம் இருப்பது உள்ளிலே! 

அறி என அறிவுருத்தவே சிந்தி நன்றாக சிந்தி! கண்ணீர் சிந்தி தவம் செய்தாலே சந்திப்பாய் சிவத்தை! சிவத்தை நீ சந்திக்கா விடில் நீ சவம்! ஏ மனிதா சீவனை சிவமாக்கு  இல்லையேல் சவந்தான்! தப்ப முடியாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts