ஞாயிறு, 16 நவம்பர், 2014

புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரம்!!

"ஒன்றாகக்  காண்பதே  காட்சி ! புலன்  ஐந்தும்
வென்றான்தன்  வீரமே  வீரம் ; -  ஒன்றானும்
"சாகாமல்  கற்பதே " வித்தை ;  தனைப்பிறர்
ஏவாமல்  உண்பதே  ஊண் ".
                                      -  ஒளவையார்

           கடவுளை  ஒன்றாக  காண்பதே  காட்சி!  கடவுளை  அடைந்த ஞானியர்கள்  பலர்  இருப்பினும்  அவர்கள்  அனைவரும் ஒருவரே ! அப்படி  கருதுபவரே  ஞானம்  பெறுவர் ! சாகாமல்  கற்பதே  கல்வி ! சாகாகல்வி  பயலுபவனே  ஞானம்  பெற  முடியும் ! செத்தவர்கள் மீண்டும்
 பிறப்பர் ! பிறந்து , செத்து , பிறப்பவர் வினைகளுக்குட்பட்ட மனிதனே ! அவர்கள்  ஞானி  அல்ல ! சாகாதவரே  ஞானி ! சித்தர் !  பிறப்பு  இறப்பை வென்றவரே  இறைவன்  திருவடியை  அடைவர் ! ஒளவையாரின் 
இந்த  ஒரு பாட்டு  போதும் !  எது  ஞானம்  என்று  விளங்க !  விளக்க !  ஜாதி  மதம்  இனம்  மொழி  நாடு  என  எல்லாம்  கடந்து  நாமனைவரும் கடவுளின்  பிள்ளைகளே  என்று  பார்ப்பவர்களுக்கே  ஞானம்  கிட்டும் !

ஞானம் பெற விழி
ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts