வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

பேரெழுத்தில் ஈசன் வந்து பேசுவான்

பேர்எழுத்தி லீசன் வந்து பேசுவது மெய்யே
- ஞான கடல் தக்கலை பீர் முகமது.


'ய' என்பது திரிசூலம் போன்றே மூன்று முனையுள்ளது.
அது மடித்த நிலை - மூன்று முனைகளும் சேர்த்தால் என்பதாகும்.

சூலாயுதமாக இருந்து வேலாயுதமாக மாறிவிடும். ஞான வேல்
என்பது தான் வழக்கு! சூலயுதமாக மூன்று கூறாக இருந்த
சூரிய சந்திர அக்னி உள்ளே ஒன்று சேர்ந்தால் ஒரே கூறாகிவிடுமல்லவா?
மூன்று ஒளி சேர்ந்தால் அதனுடைய சக்தி அளப்பரிய தல்லவா?
மூன்றும் ஒன்றானபோது ஞானம் பிறக்குது! அறிவுக்கூர்மை உண்டாகும்!


முச்சுடரும் ஒன்றாய் சேர்வதே 36 தத்துவம் வென்ற நிலை!
சூரியன் 12
சந்திரன் 16
அக்னி 8

ஆக 36, இது தான் முதல் தத்துவ நிக்கிரகம்! தத்துவ வெற்றி!
 பேரெழுத்து - நம் பெயர் எழுத்து என்ன? நாம் ஆத்மா தானே!
ஒளிதானே ! ஒளியை - தீயை குறிக்கும் எழுத்து 'சி' அல்லவா?
நமசிவாய பஞ்சாட்சரத்தில் நெருப்பு 'சி ' தானே ! 

பேரெழுத்தில் ஈசன் வந்து பேசுவான் முச்சுடரும் ஒன்றாக
ஆத்ம நிலையில் நம் முன் ஈசனான இறைவனான பேரொளி
தோன்றும் என்பதே இதன் பொருள்! நம் முச்சுடரை ஒன்றாக்கினால்
நமக்கு முன் பேரொளி - இறைவன் காட்சி கிட்டும்! எவ்வளவு
பெரிய ஞானத்தை - பரிபாசையாக - நயமாக - சிந்திக்கும்படி
சொல்லியிருக்கிறார் பீராப்பா! நம் இரு கண் ஒளி உள்ளே
சென்று அக்னிகலையுடன் சேர்ந்தால் நம் முன் பெருஞ்சோதி
காணலாம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்.  ஞானக்கடல் பீர்முஹம்மது

1 கருத்து:

  1. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
    http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_6.html?showComment=1409960935899#c1091949626357065465

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

Popular Posts