வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கண்டம் என்பது பரிபாசை!

ஐந்திருக்குது அதிலொன்று என் கண்ணில் நிற்குது காணாத நேரமென் கருத்தில் நிற்குது ... - தக்கலை பீர் மொகமது ஐந்து இருக்குது அதில் ஒன்று என் கண்ணில் நிற்குது என்கிறார் பீரப்பா. இதையே வள்ளல் பெருமான் நமது உடலில் ஜீவஸ்தானம் 5 உண்டு. அதில் முக்கியமானது 2. அது யாதெனில் 1 கண்டம் 2 சிரம். கண்டம் என்பது பரிபாசை! கண்ணை தான் கண்டம் என்கிறார்கள் சித்தர்கள்! பீரப்பா சொன்ன 5 ல் 1 ஆன ஜீவன் - ஒளி கண்ணில் உள்ளதையே, வள்ளலாரும் கண்டமாகிய கண்களில் உள்ளது என்றே கூறுகிறார். நாம் தவம் செய்யும் போது கண்ணில் காணும் ஒளியானது மற்ற நேரங்களில் நம் கருத்தில் எண்ணத்தில் நின்றொளிரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts