முத்துக் கண்ணை முறுக்கித் திருத்தியே
யகத்துக் கண்ணை யறுத்துப்பிளந்தபின்
வகுத்த சோதி மணிவிளக் கென்னுளே
தொகுத்துப் பார்க்கச் சுகம்பெற்றாய் நெஞ்சமே
~ஞான மணிமாலை , தக்கலை பீர்முஹம்மது
நம் கண்களை முருக்கித் திருத்தி என்றால் முன்னால்
பார்ப்பதை விட்டு திரும்பி உள்ளே பார்ப்பதாகும் ! அகத்து
கண்ணை அறுத்து பிளந்து என்பது நம் கண்மணி மத்தியிலுள்ள
ஊசிமுனை துவாரம் அடைபட்டிருக்கிறதை அறுத்து பிளந்து -
அடைத்துக் கொண்டிருக்கும் படலம் அறுபட்டு நீங்குவது
என்பதாகும் ! அதன்பின் தோன்றும் ஜோதியை பார்க்கப்
பார்க்க , மூன்று ஜோதியையும் ஒன்றாக்கி தொகுத்துப் பார்த்தால்
சுகம் பெறலாம் என்பதாகும் .
நம் கண் புறப்பார்வையை விடுத்து அகப்பார்வை மூலம்
முச்சுடரையும் ஒன்றாக்க சாதனை செய்தால் பேரானந்தம் கிட்டும் .
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014
பணிவே ஒருவனை இறைவனிடம் சேர்ப்பிக்கும்
"பக்தியாய் விழிக ளிரண்டும் பரமதி லொடுங்கினாக்கால
~ ஞானப்பால், தக்கலை பீர்முஹம்மது
நம் இருவிழிகள் பரமாகிய அக்னியுடன் உள் உள்ள மூன்றாவது கலையுடன் ஒடுங்க வேண்டும் . அதற்கும் பக்தி வேண்டும் . அன்பு வேண்டும் . இதைத்தான் வள்ளல் பெருமான் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழுங்கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்று வனைந்து வனைந்து ஏத்துதும் என்கிறார். சாதனை செய்ய வேண்டும். பக்தியோடு செய்ய வேண்டும்.அப்போது தான், அன்பும் கருணையும் நம்மில் உருவானால்தான் அன்பே உருவான இறைவன் அருள் தருவான்! பக்தியே ஒருவனை பணிய வைக்கும்! பணிவே ஒருவனை இறைவனிடம் சேர்ப்பிக்கும்! பக்தியோடு தவம் செய்ய வேண்டும்.!

ஞானமணி மாலை தக்கலை பீர்முஹம்மது
"நாலினை யிரண்டொன் 'றாக்கி நடுவினிலருளை நோக்கி
நூலினை படித்தோர் தங்கள் நொடியினைக் கேட்பாயாகில்
மேல்வினை வாரா மீண்டு மெய்வினை தொலைந்தேபோகுங்
காலனும் வாரான் வந்தாற் கடிந்துயிர் பிடிக்க மாட்டான் "
பீரப்பா பாடல்கள் அத்தனையும் ஞான அனுபவ நிலையை பகர்வதாகும் .
சாதாரணமாக பொருள் கொள்பவர்கள் அறிய முடியாது . மெய்ப்பொருள்
உபதேசம் பெற்றவரே அறிய முடியும் . நாலினை இரண்டொன்றாக்கி -
சந்திர கலையின் எஞ்சிய 4 கலைகளை இரு கண்மூலம் தவம் செய்யும்போது ஒன்றாக்கி உள்ளே அக்னி கலையில் சேர்க்கும் தந்திரமே !
நடுவினில் அருளை நோக்கி - நம் சிரசு நடுவில் உள்ளே நோக்கி
நூலினை படித்தோர் - ஞான நூற்களைப் படித்து குருவை யடைந்து
உபதேசம் பெற்றவர்கள் . தங்கள் நொடியினை கேட்பாயாகில் மேல்வினை
வாரா - தவம் செய்பவர்களுக்கு துன்பம் தருவதான முன் வினைகள் -
பிராப்த கர்மம் வராது தொலைந்து போகும் . இப் பிறப்பெடுத்த பின்
வரும் ஆகாமிய கர்மம் தவம் செய்பவர்களுக்கு வரவே வராது .
காலனும் வாரான் வந்தாற் கடிந்துயிர் பிடிக்கான்
"தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளு மில்லை " ஔவையார் கூற்று .
தவம் செய்பவரை எமன் அணுக முடியாது ! உயிர் பிரியாது ! மரணம்
கிடையாது ! பேரின்ப பெருவாழ்வே .
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014
குருடர்கள் ஞானம் பெற முடியுமா?
நம் உயிரை பற்றி உள்ள வினைதிரைகள் நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு உள்ள துவாரத்தில் துலங்கும் ஒளியை (இறைவன் திருவடி) மறைத்து கொண்டு உள்ளது. இவ்வினைதிரை பார்வை சக்தி உள்ளவர்களுக்கு கண்ணாடி போல் அமைந்து உள்ளதால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிகிறது.
இதில் மிக பெரிய பாவம் குருடராக பிறப்பது. இவர்களுக்கு வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளத்தால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிவதில்லை. எதை விட பெரிய துரதிஷ்டம் திருவடியான கண்ணை அல்லது கண் ஒளியை பற்றி தவம் செய்ய முடியாமல் போவதே.
ஆனாலும் இறைவன் கருணை வடிவானவர். குருடர்கள் நேரடியாக தம் ஆன்ம ஸ்தானத்தை நினைத்து , அதில் குரு தீட்சையின் முலம் உணர்வு பெற்று தவம் செய்ய வேண்டும்.
இவ்வாறு தவம் செய்வது கடினமே என்றாலும் விடா முயற்சியின் மூலமும், வைராக்கியதுடனும் சாதனை செய்தால் வினை திரை அகன்று ஞானம் பெறலாம்.
எங்கள் ஞான சற்குரு நாதர் திரு.சிவசெல்வராஜ் அய்யா 2 கண் இல்லா அன்பர்களுக்கு தீட்சை தந்து உள்ளார்.
பேரெழுத்தில் ஈசன் வந்து பேசுவான்
பேர்எழுத்தி லீசன் வந்து பேசுவது மெய்யே
- ஞான கடல் தக்கலை பீர் முகமது.
'ய' என்பது திரிசூலம் போன்றே மூன்று முனையுள்ளது.
அது மடித்த நிலை - மூன்று முனைகளும் சேர்த்தால் என்பதாகும்.
சூலாயுதமாக இருந்து வேலாயுதமாக மாறிவிடும். ஞான வேல்
என்பது தான் வழக்கு! சூலயுதமாக மூன்று கூறாக இருந்த
சூரிய சந்திர அக்னி உள்ளே ஒன்று சேர்ந்தால் ஒரே கூறாகிவிடுமல்லவா?
மூன்று ஒளி சேர்ந்தால் அதனுடைய சக்தி அளப்பரிய தல்லவா?
மூன்றும் ஒன்றானபோது ஞானம் பிறக்குது! அறிவுக்கூர்மை உண்டாகும்!
முச்சுடரும் ஒன்றாய் சேர்வதே 36 தத்துவம் வென்ற நிலை!
சூரியன் 12
சந்திரன் 16
அக்னி 8
ஆக 36, இது தான் முதல் தத்துவ நிக்கிரகம்! தத்துவ வெற்றி!
பேரெழுத்து - நம் பெயர் எழுத்து என்ன? நாம் ஆத்மா தானே!
ஒளிதானே ! ஒளியை - தீயை குறிக்கும் எழுத்து 'சி' அல்லவா?
நமசிவாய பஞ்சாட்சரத்தில் நெருப்பு 'சி ' தானே !
பேரெழுத்தில் ஈசன் வந்து பேசுவான் முச்சுடரும் ஒன்றாக
ஆத்ம நிலையில் நம் முன் ஈசனான இறைவனான பேரொளி
தோன்றும் என்பதே இதன் பொருள்! நம் முச்சுடரை ஒன்றாக்கினால்
நமக்கு முன் பேரொளி - இறைவன் காட்சி கிட்டும்! எவ்வளவு
பெரிய ஞானத்தை - பரிபாசையாக - நயமாக - சிந்திக்கும்படி
சொல்லியிருக்கிறார் பீராப்பா! நம் இரு கண் ஒளி உள்ளே
சென்று அக்னிகலையுடன் சேர்ந்தால் நம் முன் பெருஞ்சோதி
காணலாம்!
ஞான சற்குரு சிவசெல்வராஜ். ஞானக்கடல் பீர்முஹம்மது

வியாழன், 14 ஆகஸ்ட், 2014
கண்டம் என்பது பரிபாசை!
ஐந்திருக்குது அதிலொன்று என் கண்ணில் நிற்குது
காணாத நேரமென் கருத்தில் நிற்குது ... - தக்கலை பீர் மொகமது
ஐந்து இருக்குது அதில் ஒன்று என் கண்ணில் நிற்குது என்கிறார்
பீரப்பா. இதையே வள்ளல் பெருமான் நமது உடலில் ஜீவஸ்தானம் 5 உண்டு.
அதில் முக்கியமானது 2.
அது யாதெனில்
1 கண்டம்
2 சிரம்.
கண்டம் என்பது பரிபாசை!
கண்ணை தான் கண்டம் என்கிறார்கள் சித்தர்கள்!
பீரப்பா சொன்ன 5 ல் 1 ஆன ஜீவன் - ஒளி கண்ணில்
உள்ளதையே, வள்ளலாரும் கண்டமாகிய கண்களில் உள்ளது என்றே கூறுகிறார்.
நாம் தவம் செய்யும் போது கண்ணில் காணும் ஒளியானது மற்ற நேரங்களில்
நம் கருத்தில் எண்ணத்தில் நின்றொளிரும்.
திருவருட்பிரகாச வள்ளலாரின் திருநெறிகள்
1. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்க.
2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.
3. சாதி , சமய , மத , இன வேறுபாடுகளை காணற்க.
4. சிறு தெய்வ வழிபாட்டினையும், பலியிடுவதினையும் விளக்குக.
5.புலால் உண்ணற்க. எவ்வுயிரையும் கொலை செய்யற்க. பஞ்ச மா பாதகங்கள் ஆனா (களவு, கொலை, காமம், பொய், கள் உண்ணுதல்) ஆகியவை முற்றிலும் கைவிடுக.
6. காமத்தில் இருந்து மீள உன் மனைவியினை தவிர எல்லா பெண்களையும் தாயாக , சாகோதரியாக பார். அகில லோக நாயகியான பராசக்தி அன்னையின் அம்சங்களாக பெண்களை பார்த்தல் தான் காமத்தில் இருந்து விடுபட முடியும்.
7. பசித்தவர்களின் பசியினை போக்குதலே உண்மை வழிபாடாக கொள்க.
8. தகுந்த ஞான ஆசிரியரின் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்க பெறுங்கள். (திருவடி தீக்ஷை என்பது இதுவே).
9. இறக்காமல் வாழ்வாங்கு வாழ ஞான தவம் செய்க.
10. பக்தி யோடும் , பண்போடும் வாழ்க.
11. கடவுளை பற்றி இரகசியம் எதுவும் இன்றி எல்லோரும் அறிய கூறுக.
12. இந்திரிய , கரண, ஜீவ , ஆன்ம , நித்திய , ஜீவகாருண்ய ஒழுக்கங்களை கடை பிடிக்க.
13. உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க. புறத்தே வீட்டிலும் விளக்கு ஏற்றி வழிபடுக.
14. உயிர் குலமே கடவுள் விளங்கும் ஆலயமாக கருதி உயிர்கட்கு இரங்கி இதம் புரிக. இரகசியம் என எதையும் மறைகாதீர்.
15. வேஷம் போடாதே. ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகில் விளங்க உண்மையாக உழை.
16. மரணமில்லா பெருவாழ்வு எல்லோரும் பெற ஞான தானம் செய்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
வெண்ணிலாகக் கண்ணி "தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே " தன்னை அறிந்தாலே இன்பமுறலாம்...