வெள்ளி, 20 ஜூன், 2014

குருவின் தேவை எப்போது?

            எண்ணில்லா பிறவிகளை பெற்ற நாம் இனியாவது பிறவாமல் இருக்கவே, பிறந்த இப்பிறவியில் மரணமடையாது இருக்கவே பாடு பட வேண்டும். பிறந்த இப்பிறப்பில் மரணமடையாது இருந்து விட்டால் உயிர் நம் உடலிலே தங்கி விட்டால் உயிராகிய ஒளி பெருகி உடலும் ஒளியாகி முக்தி பேறடையலாம்! ஞானம் பெறலாம்!

இது பற்றி கூற 4 வேதம் 18 புராணம் உபநிஷத்துகள் பல்வேறு சாஸ்திரங்கள் எண்ணற்ற ஞானிகளின் உபதேசங்கள் உள்ளன! களிமண்  போலே அறிவே இல்லாமல் பிறந்த நமக்கு இதை சொல்பவர் யார்? என்ன இருக்கிறது என்று தெரியாமலே சாவாரே அதிகம்! வேதத்தை அறிய முற்படுபவனுக்கோ ஆயிரம் தடைகள்! மொழிப்பிரச்சனை! ஜாதிபிரச்சனை! இதை எல்லாம் தாண்டி வந்தால் புரிய வைப்பது யார்? பரிபாசை ரகசியம் என மேலும் தடைகள்!

கடவுளை கண்டே ஆகவேண்டும் என்ற தீவிர வேட்கையே ஒருவனுக்கு கடவுளை அடைய வழிகாட்டும்! குரு மூலமாக!  யாரோ ஒருவரை
எதோ ஒன்றை தூண்டி அந்த இறைவனே ஆத்ம தாகம் கொண்டவனை கடைத்தேற வழிகாட்டுவார்!

நல்ல ஒரு குருவை காண்பிப்பார்! அவன்தான் பிழைத்தான்! இரட்சிக்கப்படுவான்!

இருக்கும் ஞான நூற்க்களோ ஏராளம்! மதமோ ஏராளம்!
சாதாரண மனிதன் எதை படிப்பான்! எதை பிடிப்பான்! குழம்பி விடுவான்! சரியான வழி காட்டுதல் இல்லை என்றால் பைத்தியம் தான் பிடிக்கும்! கேடுகெட்ட இந்த உலகத்தில் போலிகள் ஏராளம் ஏராளம்!
உண்மையான ஆன்ம தாகம் கொண்டவர் வாழ்வில் ஒழுக்கமாக நெறியானவர்களுக்கு  அவன் அருளால் நல்ல செய்திகள் காதில் விழும்!

கர்மத்தால் தடுமாறும் அவன் செய்த புண்ணியத்தால் வைராக்கியத்தால் உண்மை அறிவான்! பல வித போராட்டங்களுக்கு பிறகு ஞானம்
பெறுவான்! ஏனெனில் முற்பிறவி பலவற்றில் செய்த கர்மத்தை எங்கே கொண்டு தொலைப்பான்?!  தவம், தவத்தால் தான் கொஞ்சங்கொஞ்சமாக கர்மதிரை விலக வேண்டும்!

குருவருள் இந்த சமயத்தில் தான் பரிபூரணமாக இருக்கணும்! குருவருளால் தான் கடைத்தேற முடியும்! குருவில்லா வித்தை பாழ்! குரு பார்க்க கோடி வினை தீரும்! குருவே பரப்பிரம்மம். அந்த இறைவனே ஆத்ம சொருபமாக குருவாக உன்னை காத்து  அருள்வார்! குரு மூலம் எதை கற்கணுமோ அதை கல்! கற்றபடி நில்! நின்றால் நிலைப்பாய்! நீ அவனாவாய்! நீயே அதை உணர்வாய்! எதைப்படிப்பது குருவை படி! பிடி!  

-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

2 கருத்துகள்:

Popular Posts