வியாழன், 19 ஜூன், 2014

ஞான மார்க்கம் எது?

மடாதிபதிகள் பக்தி மார்க்கத்தை வளர்கின்றார். நாடி வரும் அன்பர்களுக்கு அஷ்டாச்சர மந்திரம் பஞ்சாட்சர மந்திரம் , ஷடாட்சர மந்திரம் முதலான மந்திர உபதேசம் செய்து பூஜை முறைகளை சொல்லி கொடுக்கிறார்கள்! பக்தி!

வைதீக முறைப்படி பிராமணர்கள் வேதபாராயணம் செய்கிறார்கள், யாகங்கள், அனுஷ்டானங்களை கற்பிக்கின்றார்கள். வேள்விகளை செய்து தன்னால் இயன்ற கர்மாக்களை செய்கின்றனர்! கர்ம மார்க்கம் இப்படி வளர்கிறது! கர்மம்!

பிரணாயமம், வாசியோகம், குண்டலினியோகம, சகஜமார்க்கம், ஹட யோகம், சுதர் சனகிரியா, கிரியா யோகம் சகஜ ஸ்திதி யோகா இப்படி பற்பல யோக மார்கங்கள் சொல்லி கொடுக்கின்றது ஒவ்வொரு  ஆசிரமும்! யோகம்!

ஒவ்வொரு மனிதனும் "தான் யார்  " என்பதை உணர வேண்டும் ! எல்லாம் வல்ல இறைவனின் ஒரு துளி ஒளி தான் "தான்" என்பதை உணர வேண்டும்! இது தான் ஞான மார்க்கம்! ஞான சற்குருவை பணிந்து தான் ஞானோபதேசம் ஞானதீட்சை பெற்று தவம் செய்தாலே முக்தி! ஞானம்!

இன்றைய உலகில் நடக்கும் கூத்துக்களை பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது, நமக்கே இப்படி என்றால் அன்பே வடிவான வள்ளலார் போன்ற ஞானிகள் வேதனை பட்டதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை ! எல்லோரும் ஞானம் பெற்றால் தானே மகிழ்ச்சியாக வாழ முடியும்? அப்படி என்றால் ரகசியம் என்று எதுவும் இருக்ககூடாது. பரிபாசையை உடைத்து உண்மை விளக்கம் மெய்ஞான விளக்கம் எல்லோரும் அறிய    எம் போன்றோரை ஞான சற்குருவாக்கி மெய் ஞான நூற்களை எழுத வைத்து ஞான உபதேசம் தீட்சை உலகருக்கு பெற அருள் புரிந்து உள்ளார்கள்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts