புதன், 4 டிசம்பர், 2013

நம் உயிர் உடலில் எங்கு இருக்க முடியும்?


இவ்வுயிர் அழிவற்றது என்றும் நாம் யார் என்ற கேள்விக்கு “நாம் என்பது” நம் உடலில் தங்கியுள்ள உயிர்

அதாவது ஜீவாத்மா தான் நான் என்று கூறிப்பிடுகின்றனர். இவ்வுயிரை அறிந்து , தெரிந்து, உணர்ந்தாலே நாம் யார் என்பதை தெளிவாக முற்றிலும் உணர முடியும்.

இவ்வுயிரை அறிய முதலில் இவ்வுயிர் நம் உடலில் எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கு இருக்கிறது என்று தெரிந்தால் தான் நாம் உடலில் அங்கு சென்று அதை உணர முடியும்.

நம் உயிர் உடலில் எங்கு இருக்க முடியும் என்பதை முதலில் நமது சிற்றறிவால் சிந்தனை செய்து அறிவோம்? அதன் பின் நம் அடைந்த முடிவை ஞானிகளின் பாடல்களின் மூலம் உறுதி செய்து கொள்வோம்.

உயிரின் தன்மை என்ன என்று தெரிந்து கொண்டு பின் அது எந்த இடத்தில் இருக்கும் என்று பார்போம். உயிரின் தன்மை அறிய இறந்த உடலுக்கும் உயிர் தங்கியுள்ள உடலுக்கும் உள்ள வித்தியாசத்தை கொண்டு பார்போம்.

எல்லா உயிர் உள்ள மனித உடலும் ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் உள்ளதை அறியலாம். இறந்த உடலில் இவ்வெப்பம் இல்லாமல் குளிர்ந்து போய் இருப்பதை நாம் பார்க்கலாம். அதனால் உயிரின் ஒரு தன்மை வெப்பம் (அ) ஜோதி என்று அறிந்து கொள்ளலாம்.

 ஆன்மா ஜோதி மயமானது என்ற ஞானிகளின் கூற்றின்படி உயிரின் மற்றொரு தன்மை ஒளி என்பதை அறியலாம்.

இவ்விரு முக்கியமான தன்மையினை கொண்டு உயிர் இருக்ககூடிய இடத்தை ஆராய்வோம்.முதல் படியாக ஒரு மனிதன் எந்த உறுப்பு இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை பார்போம்? கை, கால் இல்லாமல் உயிர் வாழ முடியும். நம் உடலில் இருதயம் கூட இல்லாமல் ஒரு கருவியின் உதவி கொண்டு நாம் உயிர் வாழ்கிறோம். இதனால் இவ்வுருப்புகளில் உயிர் இல்லை என நாம் முடிவு செய்து கொள்ளலாம்.
தலை இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது.

தலையே உடலில் பிரதான உறுப்பாக இருக்கிறது. “எண் சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பது சித்தர்கள் வாக்கியம்.

இதிலிருந்து உடலில் உயிர் தலையில் தான் இருக்கிறது – இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா?

நமது தலையில் எங்கு உயிர் இருக்க முடியும்? ஒரு சிறு உதாரணம் கொண்டு இதை ஆராய்வோம். நமது தலையினை ஒரு அறையாக பாவிப்போம். ஒரு விளக்கினை (ஒளி) ஏற்றி நடு அறையில் வைத்தால் தான் அவ்விளக்கின் ஒளி சமமாக எல்லா இடங்களுக்கும் பரவும். அது போலவே நமது உயிரானது சிரசின் நடுவில் அதாவது தலையின் உள் நடுவில் இருந்தால் தான் உயிர் ஆற்றல் தலையில் உள்ள ஐந்து உறுப்புகளுக்கும் சமமாக ஆற்றல் கொடுக்கும்.

அதனால் நமது சிந்தனையின் படி தலையின் நடுவில் தான் உயிர் இருக்க வேண்டும் என்று புலனாகிறது. நமது இந்த முடிவை ஞானிகளின் பாடல்களை கொண்டு சரியா என்று பார்போம்.

திருமூல நாயனார் தமிழ் மறையான திருமந்திரத்தில் அப்பட்டமாக இந்த ஞான இரகசியத்தை கூறியுள்ளார்.

நமது சிரசில் இருந்து உச்சியிலிருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது! அது நமது கண், காது, மூக்கு உள்ளே சேரும் மத்தியில் , வாயின் உள் அண்ணாகுவின் சற்று மேல் வந்து நிலை கொண்டு , அங்கிருந்து இருநாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது. இவ்விடமே சிரநடு.

மற்றுமொரு சித்தர் “உச்சிக்கு கீழ் அண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நித்தம் எரியுதடி ஞான பெண்ணே” என்று உயிர் உள்ள இடத்தை சுட்டி காட்டுகிறார். இதன் மூலம் உயிர் உள்ள இடம் நமது தலை மத்தி என்று புலனாகிறது.

அடுத்தாக தலையின் நடுவில் உள்ள உயிரை எவ்வாறு சென்று அடைவது என்று பாப்போம். இது மிகவும் எளிது. நமது தலையில் உள்ள எந்த உறுப்பில் ஒளி துலங்குகிறது? கண் அல்லவா?

ஆம் கண்ணே நமது ஜீவ ஒளியினை பிரதிபளிக்கிறது.

ஒளியாக உள்ள அந்த இறைவனின் அம்சமான உயிரை – ஒளியை கொண்டே தான் அடைய முடியும். அதனால் கண்களே நாம் நமக்குள் உட்புகும் வாசல். கண் ஒளியே இறைவன் திருவடி. மெய்யான ஒளியினை தாங்கி உள்ளதால் கண்ணே மெய்பொருள். இறைவன் திருவடியான கண்களை பிடித்தாலே நம்மை அறிந்து இறைவனை அறிய முடியும்.

கண்ணை பற்றி பாடாத ஞானிகளே இல்லை எனலாம். பரிபாசையாக , நேரடியாக, குறிப்பாக கண்ணையே ஞானிகள் , இறைவனை அடையும் வழி என்று கூறி உள்ளனர். கண்ணை பற்றி சொல்லியுள்ள சில ஞானிகளின் பாடல்களை பாப்போம்.


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts