Friday, December 6, 2013

வடலூர் “ஜோதி தரிசனம்” விளக்கம்
  வடலூர் சத்திய ஞானசபை  “ஜோதி தரிசனம்”   விளக்கம்வள்ளல் பெருமான் சத்ய ஞான சபையை 1872 ம் ஆண்டு நிறுவினார்.


ஞான உபதேசங்களை அருட்பாகளால் கூறி அருளிய வள்ளலார் பாமாரகளும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க கட்டியதே ஞான சபை.
.
சத்ய ஞான சபை எண் (8) கோண அமைப்பு உடையது. சத்ய ஞான சபை நம் தலை அமைப்பை போன்றது. முன்புறம் உள்ளே இருபுறமும் சிற்சபை , பொற்சபை உள்ளது. நடுவே உள்ளே – ஞானசபை உள்ளது

முன்வாசலில் உள்ள சிற்சபை , பொற்சபை நம் கண்களை குறிப்பது. ஞான சபை நம் அக்னி கலை உள்ள ஆன்ம ஸ்தானத்தை (நம் இரு கண்கள் உள் சேரும் இடம்) குறிப்பது.
.
  1. ஆணவம்
  2. கன்மம்/கர்மம்
  3. மாயை 

எனும் மும்மலங்களால் ஆன நமது கர்ம வினைகள் எழு திரைகள் போன்று ஆத்மா ஜோதி தெரியாதபடி மறைத்து கொண்டிருக்கும். இவ்வேழு திரைகள் விலகினால் தான் ஜோதி தரிசனம்.

நம் உயிரை பற்றி உள்ள வினைகள் நம் இரு கண்மணியில் நடுவில் உள்ள ஊசி முனை அளவு துவாரத்தை மூடியுள்ளது.

வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள் விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே.

இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான்.


இவ்வினாக்கள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.

குருவிடம் தீட்சை பெற்று- நம் கண்மணியில் உணர்வு பெற்று இந்த கண்மணி உணர்வில் நம் மனதை இருத்தி நினைந்து, உணர்ந்து தவம் செய்தால் நம் கண் ஒளி பெருகி அந்த வெப்பத்தால் வினை திரை கரையும். வினைகள் கரைய கரைய நம் துயர் நம்மை விட்டு நீங்கும். பின்னர் உள்ளே உள்ள ஜோதி தெரியும்.


குருவிடம் தீட்சை பெறுவதையே வள்ளல் பெருமான் “தகுந்த ஞான ஆசிரியரிடம் உங்கள் நடு கண் புருவ பூட்டை திறந்து கொள்வது நலம்” என்கிறார்.
.
தைபூசம் அன்று ஞானசபையில் ஒவ்வொன்றாக எழு வர்ண திரைகள் விலக்கப்பட்டு முடிவில் ஜோதி காண்பிக்க ஏற்பாடு செய்தார்.மேலும் தை பூச தினதன்று ஜோதி காண்பிக்கப்படும்

நேரத்தில் வலது பக்கம் சூரியனும் , இடது பக்கம் சந்திரனும் நேர் கோட்டில் இருக்கும். நமது உடலில் வலது கண் சூரியனையும் இடது கண் சந்திரனையும் குறிக்கும்.நமது உடலிலும் வலது கண் ஒளியும், இடது கண் ஒளியும் உள் சென்று அக்னி கலையோடு சேர்வதை குறிக்கவே இவ்வேறுபாடு. எட்டும் , இரண்டும் என்று நமது கண்களையே கூறிப்பிடுவர் சித்தர்கள், ஞானிகள்.
.
இதையே அகஸ்தியர் தனது துறையறி விளக்கத்தில் “சுடு கொண்ட திருஆடு துறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே” கூறிபிடுகிறார்

“சத்ய ஞான சபையை என்னுள் கண்டனன்” என்று வள்ளல் பெருமான் அனைவரும் தங்களுள் ஜோதி தரிசனம் காண வேண்டும் என்று கூறிப்பிடுகிறார்.

சத்ய ஞான சபையில் வெளியே வாசலில் வள்ளலார் பொரிந்த வாசகம் “புலால் கொலை தவிர்த்தவர் மட்டுமே உள்ளே வரவும்” என்று. இதன் மூலம் நம் வினையை வெல்ல, நம்மை உணர, ஆண்டவனை அடைய முதல் செயல் புலால் கொலை முற்றும் தவர்க்க வேண்டும் என்பதே. இவ்வாறு புலை, கொலை தவிர்த்தவர் தான் தம்முள் உள்ள ஆன்ம ஜோதியை தரிசிக்க தகுதி பெற்றவர் ஆவர்.
.
அன்புடையீர் எனவே புலால் உணவை தவிர்த்து , மது , புகை போன்ற போதை பழக்கத்தை விட்டு வள்ளல் பெருமான் கூறியபடி ஆகவினத்தாராக மாறுங்கள். வடலூர் வந்து சத்ய ஞான சபையில் ஜோதி தரிசனம் காணுங்கள்.
.
குருவிடம் தீட்சை பெற்று தவம் செய்து வினை திரையை விலக்கி உங்களுள் ஆன்ம தரிசனம் பெறுங்கள். வள்ளல் பெருமான் தங்களிடம் இருந்து காத்து வழிநடத்துவார்


எல்லா உயிரும் இன்புற்று வாழ்க.
 

கொல்ல நோன்பு குவளையமெல்லாம் ஓங்குக.

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

No comments:

Post a Comment

Popular Posts