ஞாயிறு, 19 மே, 2013

ஏன் மனிதனிடம் கருணை இல்லாமல் போனது??

           இப்போது நாட்டில் இருக்கும் பல வன்முறை செயல் நடை பெறுகிறது.
கொலை, கற்பழிப்பு, ஏமாற்றுதல், மிரட்டுதல், தீவிரவாதம் இப்படி
பல செயல் மூலம் ஒரு மனிதன் மற்றொரு ஆணுக்கோ பெண்ணுக்கோ
பெரும் வேதனை உட்படுத்த படுகிறார்கள். 

ஏன் ஒருவர் வேதனை மற்றொருவருக்கு புரிவது இல்லை? ஏன் அன்பு இல்லை? எல்லா உடலிலும் இறைவன் உயிராக உள்ளான். இறை தன்மை வெளிப்படாமல்  உள்ளதே! ஏன்? இதை மறைத்து கொண்டு உள்ளது என்ன?

இறைவன் நிலையில் உள்ள வள்ளல் பெருமான் சொல்வது என்ன?

மூவரும் தேவரும் சித்தரும் யாரும் பெற்றிடா  நிலை பெற்ற
இறைவன் செல்ல பிள்ளை திருஅருட்பிரகாச வள்ளலார் சொல்வது என்ன?


துக்கப்படுகின்றவரை நமது சகோதரரென்றும் துக்கப்படுகின்றார் என்றும்  அறிய தக்க ஆன்ம அறிவு என்கின்ற கண்ணானது அஞ்ஞான காசத்தால் மிகவும் ஒளி மழுங்கின படியாலும்,

அவைகளுக்கு உபகாரமாக கொண்ட மனம் முதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாச பிரதிபலிதமில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்த படியாலும் கண்டு அறிய கூடாமை ஆயிற்று !  (கண் ஒளி குறைந்து உள்ளது, ஏழு திரை கெட்டியாக உள்ளது)

இங்ஙனம் மனிதர்கள் இருப்பதால் தான் ஜீவகாருண்யம் இல்லாமல் போனது என வள்ளலார் தெளிவாக கூறுகிறார்!

இதெல்லாமல் ஜீவகாருன்யம் உள்ளவராய் இருப்பின் அவர் ஆன்ம திருஷ்டி விளக்கம் உள்ளவர் என அறியலாம்!!

எவர் ஒருவர் தன் ஜீவனை கருணையோடு பார்த்து உபநயனமான இரு கண்களில் தடிப்பாயுள்ள கண்ணாடியான மனம் முதலானவைகளை அகற்ற தவம் செய்கிறார்களோ  அவர்களே ஜீவகாருண்ய சீலராவர்!

நம் கண்களே இறைவன் திருவடி என ஞான சற்குரு உபதேசம் தீட்சை மூலம் உணர்ந்து ஞான தவம் செய்து

கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம்  செய்வதால் கண்ணை மறைக்கும் 7 திரை விலகி ஆத்ம ஒளியை தன் ஜீவ ஒளியை காணலாம்!
 
தன் ஜீவனை கருணையோடு பார்ப்பவரே காண்பர் ஒளியை!  ஜீவகாருண்யம் கடவுள் அருளை பெறுவதற்கு முக்கிய சாதனம்! அதன் இயல்பும் அதுவே!

அதாவது, கடவுளை அடைய முதலில் உன் கண்ணிலே துலங்கும் உன் ஜீவனை நேசி! இதுவே ஞான தவம்!  தவ மூலம் உன்னை நீ அறிவாய்! உணர்வாய்! நீயே ஜீவனே சிவனாகும்! அப்போது உன் இயல்பு அன்பு மாயமே!

வாடிய பயிரை கண்டு நீயும் வாடுவாய்! எந்த பயிரை!!? இது தான் ஞான நிலை! ஞானியின் நிலை!


முதலில் உன் ஜீவனை ரட்சிக்கும் வழியை விழியை பார்! பின் பிற ஜீவர்களை பார்! இது சுயநலம் அல்ல! பொது நலம் தான்!ஒரு ஜீவன் ரட்சிக்க பட்டால் உலகமே நன்மை அடையும்!

அற்ப விசயங்களில் ஈடுபடாமல் உன் ஜீவனை கடைத்தேற்றி அதன் மூலம் உலகுக்கு உதவு!  இது தான் உண்மையான ஜீவகாருண்யம்!

ஞானம் பெற்ற வள்ளலாரால் தான் உலகுக்கு மரணமிலா பெருவாழ்வு உபதேசிக்க முடிந்தது! ஞானம் பெற்ற புத்தரும் இயேசும் முகமது நபியும் உலகுக்கு செய்த நன்மை ஒன்ற இரண்டா?!

 சக்தியுள்ளவன் தானே பிறருக்கு உதவ முடியும்! வழி காட்ட முடியும்? வெறும் வாய்பந்தல் போடாமல் செயலில் காட்ட முதலில் நீ ஞான தவம் செய்! சாப்பாடு மட்டும் போட்டால் பத்தாது? சாப்பாடு மட்டுமே வாழ்வல்ல?!

எல்லாம் வேண்டும்?! மனித வாழ்வு சமையல் அறையில் இருந்து கழிவு அறை அல்ல! பூஜை அரை என்று ஒன்று இருக்கிறதே தெரியுமாயா ?! நிறைய வீடுகளில் சாமி அறை கிடையவே கிடையாது! இருந்தாலும் பூட்டிதான் வைத்து இருப்பார்!

பக்தியே இல்லாத பாமர் இடம் இருந்து ஞானத்தை எங்கு தேடுவது!?

ஜீவனை - உயிரை கவனியாது  புறத்தே இறைவனை தேடி அலைகிறார்கள்! ஒரு பயனும் இல்லை!? எப்போது உன் ஜீவனை நீ கருணையோடு உன்னுள்
பார்கிறாயோ? அன்று தான் உனக்கு முக்தி !

இதை தான் வள்ளலார் உணர்த்துகிறார்! சாப்பாடு போட்டால் மட்டுமே போதும் என்று இருந்தால் வள்ளலார் தர்ம சாலையுடன் நின்று இருப்பார் ! எதற்கு சத்திய ஞான சபை கட்டினார்? யோசிக்க வேண்டாமா நீங்கள்!?

ஜீவகாருண்ய ஒழுக்கம் - உன் ஜீவனை கருணையுடன் பார்
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

தவத்தால் ஏழு திரையை விளக்குவோம் ஜீவகாருண்யம் நிறைந்து விளங்குவோம்







திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.





1 கருத்து:

Popular Posts