மானிட உருவங்கொண்ட நீவீர் ஆன்ம நேய ஒருமைப்பாடு உடைய மாமனிதராக விளங்க வேண்டும் என்பது எம் அவா.
கிடைத்தற்கரிய
மானிட தேகம் பெற்ற நீவீர், பெறுதற்கரிய பிறவிப் பயனாகிய பேரின்ப
பெருவாழ்வு பெறவேண்டாமா? மரணமிலா பெருவாழ்வு - மோட்சப் பிராப்தி அடைய
வேண்டாமா?!
அதற்கு வழி, யுகம், யூகமாக நம் நாட்டில் வழங்கி வரும்
சனாதன தர்ம நெறியேயாகும்!? இது மதம் அல்ல!? குறிப்பிட்ட வர்களுக்கு
உரியதல்ல! உலகம் முழுமைக்கும் பொதுவான, மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டும்
உயர்ந்த உன்னத நெறி!
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பல்லாயிரம் கோயில்கள்! பற்பல
ஞானிகளால், சித்தர்களால், மகான்களால் உருவானது! வெவ்வேறு உருவங்களில்
வெவ்வேறு பெயர்களில் தோன்றியது! "ஓர் உருவம் ஒரு நாமம் இல்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டோமே" என்றார் மாணிக்க வாசகர் திருவாசகத்தில்! இது தான் ஞானம்!!
கடவுள் ஒருவரே! அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த அனுவுக்கு அணுவாக ஒளியே கடவுள்! பிரபஞ்சமெங்கும் நிறைந்த அந்த பேரொளியே பரம்பொருள்!
எங்கும் நிறைந்த பரமாத்மாவை கல்லிலும் செம்பிலும் மரத்திலும் நினைத்தபடி கற்பனையால், கண்டும்
வடித்தும் பெயரும் சூட்டி வணங்கினர் பக்தியாக!! உருவம் பல! பெயர் பல!
என்றாலும் கடவுள் ஒருவரே! ஒளியே! என்றனர் உணர்ந்த ஞானிகள்!
உலகில் 700 கோடி மனிதர்கள் எவ்வளவோ வேற்றுமைகள்! ஆனால் அனைவரும் மனிதன்
தானே! 700 கோடி ஜீவாத்மாக்கள் தானே! 700 கோடி ஜீவாத்மாக்கள் தானே!
பசுவாகியே சீவாத்மா தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் பாசமாகியே மும்மலத்தை
நீக்கி விட்டால் பதியாகிய நம் தலைவனை பரமாத்மாவை அடையலாம்! இது தான் ஞானம்!
"வம்மின் உலகியலீர் மரணமில பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்" என கூவி
அலைக்கின்றார் வள்ளலார்! அப்படியானால் எல்லோரும் ஞானம் பெறலாம் என்றுதானே
பொருள்! ஆம்! இதுவரை உலகில் தோன்றிய ஞானிகள் இதைதான் கூறியிருக்கிறார்கள்
சிறியவன்
ஆனவன் பெரியவன் ஆவதை போல் பக்தியில் இருந்து ஞானத்திற்கு வரணும்!
வினைப்பயன், பெரும்பாலோர் உருவத்தில் பெரிதாக வளர்ந்தாலும் அறிவில்
குழந்தைகளே! கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றே வாழ்ந்து வீழ்ந்து
விடுகிறார்கள்!
இன்றைய பள்ளிப்படிப்பு புள்ளிக்கு உதவவில்லை! ஏட்டு சுரைக்காய் கறிக்கு
உதவாது என்று சும்மாவா சொன்னார்கள்? ஞானம் - அறிவு வேண்டுமாயின் ஆன்மீக
நூற்களை படியுங்கள்! ஞான சற்குருவை நாடி உபதேசம் கேளுங்கள்!
தவம்செய்யுங்கள்! பெறலாம்!
ஞானம் பெற எட்டும் இரண்டும் பத்து என்பதை மட்டும் நீங்கள் அறிந்தால் உணர்ந்தால் போதும்!
"எண்ணும் எழுத்தும் கண் என தகும்"" அவ்வை கூறிய இதையே திருவள்ளுவர் கூறிகிறார் எப்படி?
"எண்னென்ப எனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்னென்ப வாழும் உயிருக்கு"
அதாவது உயிர் வாழ வேண்டுமானால் செத்து போகாமல் இருக்க வேண்டுமானால் எண்ணும்
எழுத்தும் இரு கண்கள் என்பதை அறிவாயாக! உணர்வாயாக! எண்ணாகவும் "8'' ஆகவும்
''அ" வாகவும் திகழ்வது '"கண்"' என அவ்வையார் கூறினார்! அதைதானே
திருவள்ளுவரும் ஆமோதித்தார்! இது தான் ஞானம்! பரிபாசை! தமிழில் எட்டாவது
எண்ணுக்கு ''அ"' என்பதே! குறியீடு! அ என்றால் எட்டு! அதுபோலே உ என்றால் 2! இதை தக்க குருமூலம் அறிந்து உணர வேண்டும்!
இந்த
அ என்பதே நம் வலது கண்!! இதுவே சூரிய கலை என்றும் சிவம் என்றும் கூறுவார்
ஞானியர்! உ என்பது இடது கண்! இதுவே சந்திர கலை என்றும் சக்தி என்றும்
கூறுவார் ஞானியர் பரிபாசையாக!
நமது இரு கண்களில் துலங்கும் ஒளியே சூரிய சந்திர ஒளியே, எட்டும்
இரண்டும் நம் சிரசின் உள்ளே நடுவில் பத்தான அக்னி கலையின் நம் ஆன்ம ஒளியின்
விளக்கமாகும்!
நாம் நம் இரு கண் ஒளியையும் 8+2 சேர்த்தால் 10-ய
வான நம் ஆத்மஸ்தானமான சிர நாடு உள் போய் சேரலாம்! எட்டும் இரண்டும்
சேர்ப்பதே ஞான தவம்! இதுவே ஞான ரகசியம்!
இந்த எட்டும் இரண்டும் பற்றி பாடாத சித்தர்களே ஞானிகளே இல்லை என்று கூறலாம் !
"'எட்டினோடு இரண்டு சேர்த்து எண்ணவும் அரியர் '" என்றார் ஒரு ஞான வள்ளல்! பொருளை எண்ணிக்கையில் சொல்லவில்லை ? அருள் பெற திருவடியை எண்ணி "பார்க்க" சொன்னார்கள்!
எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே - திருமந்திரம் 986
தமிழ் வேதம் திருமூலர் திருமந்திரம், எட்டும் இரண்டுமே சித்தாந்த சன்மார்க்க பாதம் என அறிதியிட்டுக் கூறுகிறார்!
பதம்
திருவடி மெய்ப்பொருள் நம் கண்களே!! தக்க ஆச்சாரியனை நாடி உபதேசம் தீட்சை
பெற்று உங்கள் நடுக்கண்ணை திறந்து விழித்திருந்து தவம் செய்! ஞானம்
கிட்டும் !
கண்ணை மூடி தவம் செய்வதல்ல தவம்! புறக்கண்ணும்
அகக்ண்ணும் திறக்கனும்! அதுவே ஞானம்! அதற்க்கு எட்டும் இரண்டும் தெரியனும்!
ஞான குருவிடம் சென்று உபதேசம் கேட்டு தெளியனும்! தீட்சை பெற்று
விழித்திருந்து ஞான தவம் செய்யணும்! உன் ஆன்மா கடைத்தேற விழித்திரு!
"உடம்புலே உத்தமன் கோயில் கொண்டான்" திருமந்திரம் 725
ஒவ்வொரு மனித
உடலினுள்ளும் அந்த பரமாத்மாவே சீவாத்மாவாக கோயில் கொண்டுள்ளான்! நம் தலை
உள் மத்தியிலே ஒளியாக - நம் உயிராக திகழ்பவன் எல்லாம் வல்ல இறைவனே! அவனை
அடைய தடை மும்மலம்! நம் இரு கண் ஒளியைப் பெருக்கி மும்மலத்தை
நீக்கினால் நம்முள் துலங்கும் நம் ஆத்ம ஜோதியை சாட்சாத் பரம்பொருளை நாமே
தரிசிக்கிலாம்!! அடையலாம்! ஞானம் பெறலாம்!! இதுதான் ஞானம்! இது தான் சனாதன
தர்மம்
கூறுவதும் சன்மார்க்கம் என வள்ளலார் உரைப்பதுமாகும்! எல்லா சித்தர்களும்
ஞானிகளும் கூறுவதும் இதையே! இது மதம் அல்ல! உலக மக்கள் அனைவருக்குமான
ஒப்பற்ற , உன்னதமான வாழ்க்கை நெறி!
"உடம்பினைப் பெற்ற பயனாவததெல்லாம்
உடம்பினில் உத்தமனை காண் "
ஞானத்தாய் ஔவையார் கூறிய ஔவை குரள் இது!
"'ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்பட்டும்''
உலக பொதுமறை திருக்குறள் கூறும் ஞானம் இது!
ஒத்தது-
ஒன்று போல் இருக்கும் மற்றொன்று! உலகில் இரட்டை பிள்ளைகளிலும் வித்தியாசம்
உண்டு. மனித உடலில் வித்தியாசம் இல்லாதது நம் இருகண்களே! நாம் பிறந்தது
முதல் 100 வயது ஆனாலும் நம் உடலில் வளர்ச்சி அடையாதாது நம் கண்கள் மட்டுமே!
தாயின் கருவிலே முதன் முதலாக தோன்றும் உறுப்பு நம் கண்! கண் தானம்
யாருக்கும் கொடுக்கலாம் அல்லவா!
அப்படியானால் கண் எல்லோருக்கும் ஒரு போலவே இருக்கிறது என அறியலாம் அல்லவா!
உலகத்தில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஒன்று போலவே இருப்பது கண் மட்டுமே!!
இதுதான் ஒத்து இருப்பது. ஒத்து இருக்கும் கண்ணை, எட்டும் இரண்டுமான கண்ணை ,
அதுதான் இறைவன் திருவடி மெய்ப்பொருள் -பதம் என எவன் அறிகிறானோ அவன்
உணர்வான் அவன் உயிர் வாழ்வான்! இதை அறியாதவன் செத்து போவான்! இதை விட ஞானம் அறிய வேறொன்றும் வேண்டாம்!
செந்தமிழ்
அருள்நெறியை வளர்க்கத்தான்! இலக்கணம் இலக்கியம் பேசி காலத்தை
கொள்வதற்கல்ல!! படிப்பது பண்டுவதற்கே! வீண் வாதம் புரிவதற்கல்ல!
"'கற்றோர் என்போர் முகத்திரண்டு கண் உடையோரே"'
கண்ணின் மகத்துவம் அறியாதவன் குருடனே! இந்திய ஞான பூமியில் இருந்து கொண்டு ஞானம் அரியவில்லையெனில் அவன் இந்த பூமிக்கு பரமே!!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக!
ஆன்மீக செம்மல் ஞானகுரு சிவசெல்வராஜ்
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
கண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...
அருமையான சிறப்பான விளக்கத்திற்கு நன்றி...
பதிலளிநீக்குAiyya Thekshai tarum unmai ya na guru ungalluku therinthal ennodu pagirungal. Ungal tholai pesi ennai pagiravum, naan ungaluku call sigiren.
பதிலளிநீக்குNandri,
Saravanan.R
Dear saravanan please call to any number below and know about the guru. talk to any one in this number. to know the number please see this website. http://www.vallalyaar.com/contact-us/
பதிலளிநீக்குஅருமையான சிறப்பான விளக்கத்திற்கு நன்றி...
பதிலளிநீக்குஅருமையான சிறப்பான விளக்கத்திற்கு நன்றி
பதிலளிநீக்குமற்றும் ஐயா ஓட தமிழ் சொற்பொழிவு இருந்தால் எந்த வலைதளத்திற்கு கிடைக்கும் என்று கூறவும்
மிக்க உதவியாய் இருக்கும்
நன்றி
செந்தில் - துபாய்
Please see this link for guru's speech... http://www.youtube.com/user/balunatarajan
பதிலளிநீக்குMei Anbey Sivam Mei Arulai peyttru Mei Enpathai Adeithey Theeruvan
பதிலளிநீக்கு