புதன், 27 ஜூன், 2012

திருவடி தவத்தின் பயன் என்ன?




நம் கண்மணியில் வலது கண் சூரியன், இடதுகண்  சந்திரன் ஆகிய இரு
கண்மணிகளிலும் தவம் செய்வதால் பெருகும் ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும் ஒன்றான நிலை ! ஜோதி பாதம்! திருவடி!!

இந்நிலை பெரும் முயற்சியிலிருக்கும்  சாதகனுக்கு படிப்படியாக உச்சியில் இருந்து  உள்ளங்கால் வரை  உள்ள 72000 நாடி நரம்பிலும்  கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும்!!

உடல் தூய்மையடையும்! நோய் நோடிவராது! உடல் உறுதி பெறும்! உள்ளம் பண்பாடும்!  இறை அருள் கிட்டும்! எல்லா ஞானிகளின்  ஆசிர்வாதம் பெறுவான்!!

ஜோதி தரிசனம் கிட்டும்!

திரைகள் விலகும் ஆன்மா பிரகாசிக்கும்! அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும்!

உச்சியை அடைந்தால் அறிவுப் பிரகாசம்! பரவெளி காணலாம்! வெட்ட வெளியில் உலவலாம்! பேரின்பம்! பேரின்பம்! பேரின்பமே!

இது தான் சனாதன தர்மம் உரைக்கிறது!







-ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி



1 கருத்து:

  1. திருவடித்தவத்தின் பயனை தங்களின் பதிவின் மூலமாக அறிந்தேன். அதனை பெறுவதற்கு ,திருவருள் கூட்டுவிக்கவேண்டும். மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு

Popular Posts