தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம்.
தீட்சை பெற முக்கிய தகுதி :
1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும்.
3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும். இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் தீட்சை பெறலாம்.
2. தவம் செய்வது எப்படி?
- தவம் என்றால் மந்திர ஜபம் அல்ல.
- தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்பதோ அல்ல.
- தவம் என்றால் பிரணாயாமமோ அல்ல.
- தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல.
- கண்மூடி செய்யும் எந்த செயலும் தவம் ஆகாது.
கண்களை திறந்து தான் “விழி திறந்து” தான் தவம் செய்ய வேண்டும்.
இறைவன் திருவடியில் (நம் கண்ணில்- கண் மணியில் – கண்மணி ஒளியில்) மனதினை நிறுத்துவதே தவமாகும். சும்மா இரு என்பதன் அர்த்தம் இதுவே.
அதாவது நம் மனதை திருவடியில் வைத்து இருப்பதே.
குரு தீட்சை பெற்று நம் கண்ணில் உணர்வு பெற்று அதை
நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும். இங்நனம் தவம் தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம்.
நமது வள்ளல் பெருமான் ஞான சரியையில் கூறியபடி நாம் இவ்வாறு தவம் செய்தால் பெறலாம் நல்ல வரமே.
நம் வினைகள் எல்லாம் எரிந்து விடும். பெறலாம் மரணமிலா பெருவாழ்வே. பிறவாப்பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாகி இணையலாம்.
பேரின்பம் பெறலாம்.
3 குருடர்கள் ஞானம் பெற முடியுமா?
நம் உயிரை பற்றி உள்ள வினைதிரைகள் நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு உள்ள துவாரத்தில் துலங்கும் ஒளியை (இறைவன் திருவடி) மறைத்து கொண்டு உள்ளது.
இவ்வினைதிரை பார்வை சக்தி உள்ளவர்களுக்கு கண்ணாடி போல் அமைந்து உள்ளதால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிகிறது.
இதில் மிக பெரிய பாவம் குருடராக பிறப்பது. இவர்களுக்கு வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளத்தால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிவதில்லை.
இதை விட பெரிய துரதிஷ்டம் திருவடியான கண்ணை அல்லது கண் ஒளியை பற்றி தவம் செய்ய முடியாமல் போவதே.
ஆனாலும் இறைவன் கருணை வடிவானவர். குருடர்கள் நேரடியாக தம் ஆன்ம ஸ்தானத்தை நினைத்து , அதில் குரு தீட்சையின் முலம் உணர்வு பெற்று தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்வது கடினமே என்றாலும் விடா முயற்சியின் மூலமும், வைராக்கியதுடனும் சாதனை செய்தால் வினை திரை அகன்று ஞானம் பெறலாம்.
எங்கள் ஞான சற்குரு நாதர் திரு.சிவசெல்வராஜ் அய்யா 2 கண் இல்லா அன்பர்களுக்கு தீட்சை தந்து உள்ளார்.
www.vallalyaar.com
நல்ல விளக்கம் அருமையான பதிவு .மிக்க நன்றி .
பதிலளிநீக்கு