அவளின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளின்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளின்றி யூர் புகு மாறறி யே னே"

அவள் - சக்தி - வாலை - தாய் - 'உ' இடது கண்மணி ஒளி!
சக்தியை அறியாத தேவர் யாருமில்லை? ஏன் தெரியுமா?
சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும்!
அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அறியாமலிருப்பரா?
சக்தியில்லையேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாதே! உடலில் சக்தி
இருந்தால் தானே நடமாட முடியும்! பின்னரல்லவா தவம் செய்வது?!
ஆக சக்தி இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது! சக்தி - வாலை
துணையின்றி பஞ்சகிர்த்தியம் புரியும் மூர்த்திகளாலும் ஒன்றும் செய்ய
இயலாது! பஞ்ச பூதங்கள் இயங்க சக்தி வேண்டும். நம் புலன்கள் இயங்க
சக்தி வேண்டும்!. ஏன்? சிவத்தோடு சக்தி இருந்தாலே இயக்கம்! எங்கும்
சிவமயம்! சிவம் சக்தி மயம்!
அவளே வாலை! தாய்! கன்னி 'ய' குமரியில் குடிகொண்டு முக்கடல்
தீரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் தாய்! பாலா பரமேஸ்வரி
சக்தியில்லையேல் ஒன்றுமில்லை! அசைவற்றிருக்கும் சிவம், அசையா
கல்போன்ற ஒளி களிநடம் புரிய சக்தி தான் தேவை! அந்த தாய் வாலை அருள்
தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசி பெற்றே சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்! சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்! நம்மை கருவாய்
வயிற்றில் சுமந்து பெற்ற தாயை விட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி
அமுதூட்டி அரவணைபவள் வாலைதாயே! நமது உடலுக்கு சக்தி யூட்டிய தாய்!
உலக அன்னை ! அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி ! ஆதிபராசக்தி! கன்னிகா பரமேஸ்வரி! நம் கண்ணுக்கு கண்ணாக விளங்குபவள் ! நம் உயிர் துலங்க உறுதுனையானவள் சக்தியே! தாயே!
தாயை வணங்கும் முதல் தெய்வம் தாயே என இன்று எல்லோரும் கூறுவது
உடல் கொடுத்த தாயை பற்றி! உயிராய் இருந்து வளர்க்கும் தாயை அறிவார்
இல்லை! இறைவனை அடைய அமுதூட்டி வழிகாட்டும் உலகத்தாயை அறியவில்லை!
அவளை அறியாத பேர்க்கு மாயை! மகாமாயை அவளே! அறிந்து
பணிந்தவருக்கு அமுதூட்டும் அன்னை! வாலையை பணியாமல் யாரும்
தேவராக முடியாது! சித்தராக முடியாது! ஞானியாக முடியாது! சிவமே சக்தியை தன்னோடு சரிபாதி யாக கொண்டார் எனில் சக்தியின் மகத்துவம்
புரியவேண்டாமா? அந்த சக்தி மாமாயை வாலை கன்னி 'ய' குமரி அடியேனை
கன்னியாகுமரி யிலே சற்குருவாக இருத்தி தங்க ஜோதி ஞான சபை தந்து
இத்தனை ஞான நூற்களையும் எழுதி வெளியிட்டு உலகத்துக்கு சேவை செய்யும் அருள் புரிந்தவள்! தாயை பணிந்தால் தயவுடையவனானேனே! அதனால் தான் எல்லோருக்கும் ஞான இரகசியங்களை போதிக்கிறேன்!
எழுதுகிறேன்!
"சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
செம்பவள மேனி கொண்ட சக்தியவள் வாலையே!
முக்கடலும் சங்கமிக்கும் முக்தி யருள் தலமாம்
கன்னியவள் குமரி யிலே கண்டு கொள் பணிந்தே"