வியாழன், 27 நவம்பர், 2025

இறைவனை குருமொழியால் அறிந்து

திருமந்திரம் - 3052

"இணங்க வேண்டா இனியுல கோருடன்
நுணங்கு கல்வியும் நூல்களும் என்செயும்
வணங்க வேண்டா வடிவை யறிந்தபின்
பிணங்க வேண்டா பிதற்றை யொழியுமே"

மெய்ப்பொருள் உபதேசம் பெற்று தீட்சை பெற்ற ஆத்மசாதகன் தனித்திருக்கவே விரும்புவான் !
உலக சந்தைக் கூட்டத்தை விரும்பவே மாட்டான் !

உலகோருடன் ஒட்டமாட்டான் !
யாருக்கும் பயப்படமாட்டான் !
யாருக்கும் பணிய மாட்டான் !

"நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்"
என திருநாவுக்கரசர் நவில்கிறார் !

"பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்த பின்னே"
என்கிறார் அபிராமிபட்டர் !

🙏இறைவனை பணிந்தபின் இந்த உலகமே துச்சம் ஞானிகளுக்கு ! ஆத்ம சாதகர்களுக்கு !🙏

இது ஆணவமல்ல !! இறைவனை குருமொழியால் அறிந்து அனுபவம் பெற்றபின் இனி நூற்கள் எதற்கு ?

மேலும் மேலும் அனுபவம் பெற சாதனை ! சாதனைதான் வேண்டும் !
காயத்தினுள் கடவுளை கண்டபின் வேறு புறத்தே தெய்வ உருவங்களை வணங்க வேண்டாம் !
ஒளியாக உள்ளே கண்டபின் கல்செம்பு மரத்தை வணங்க வேண்டுமா ?
இதெல்லாம் பக்தியில் செல்லும் குழந்தைகளுக்கு !

ஞான சாதனை புரிபவருக்கல்ல !
முட்டாள்களோடு வாதம் பண்ண வேண்டாம்!
யாரோடும் சண்டை சச்சரவு போட வேண்டாம் !

அமைதியாயிரு ! பசித்திரு ! 👁️விழித்திரு !👁️
சிறு தெய்வ வழிபாடு வேண்டவே வேண்டாம் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

நூல் - மந்திரமணி மாலை
www.vallalyaar.com

சூரியன் 12 கலை சந்திரன் 16 கலை அக்னி 8 கலை

"பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை பான்மதி
ஒத்த நல் அங்கிய தெட்டெட் டுயர் கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே"

பத்தும் இரண்டும் பகலவன் கலை !
பன்னிரண்டு ஒளிக் கலைகளையுடையது சூரியன் நமது வலது கண் !

பதினாறு ஒளிக் கலைகளையுடையது சந்திரன் நமது இடது கண் !
இவ்விரண்டு கண்ணும் ஒத்து - ஒன்று சேர்ந்து உள்ளே சேரும் இடம் அக்னிகலை !
அது எட்டு கலை எட்டின் விரிவுமாகும் !

இம்மூன்று கலைகளையும் ஒளிக்கதிர்களையும் ஒன்றிணைப்பதே நம் ஞான சாதனையாகும் !

சூரியன் 12 கலை
சந்திரன் 16 கலை
அக்னி 8 கலை

முதலில் இம் மூன்றும் சேர 36 கலையாகும் !
ஆத்மஸ்தானம் அடைந்தவன் 36 கலை பெற்றவன் 36 தத்துவம் வென்றவன் என்பர் !

ஒப்பற்ற உயர்ந்த ஞான சாதனை இது !

சந்திரனின் ஒவ்வொரு ஒளிக் கலையும் சூரியனுடன் ஒவ்வொன்றாக சேரும் 
இப்படி சூரியகலை 12 உடன் சந்திர கலை 12 சேரும் !

எஞ்சிய சந்திர ஒளிக்கலை 4 சூரியனை ஊடுருவி அக்னி கலையுடன் சேரும் !

அங்கே ஏற்கனவே 8 கலை உண்டு இந்த 4ம் அங்கே போய் சேர்ந்ததும் அதுவும் 
12 கலையுடன் மிளிரும் !


இப்போது

சூரியகலை 12
சந்திரகலை 12
அக்னிகலை 12

என மூன்றும் ஒன்றாகவே ஒரே நிலைபெறும் !

இதுவே, " முச்சுடரும் ஒன்றாகி முடிந்ததோர் ஜோதி பாதம் அச்சுதனும் அயனும் காணா அனந்தமாம் பாதம் " என ஞானிகள் கூறுவர் !
அந்த பாதம். பதம் அடைந்தவர் தன்னை அறிந்தவராவார் ? தத்துவம் 36-ம் கடந்த ஆத்ம ஞானியாவார் !
என்னுள்ளிருந்து நந்தி உரைக்க அடியேன் எழுதிவிட்டேன் எல்லா ஞான இரகசியங்களையும் !அனுபவங்களையுமே !

படித்து தெளிந்து உணர்ந்து பண்படுக !


இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

புதன், 19 நவம்பர், 2025

இறைவன் திருவடி பற்றி ஞானிகள் மகான்கள் கூறுவது



1 காளத்தியான் என் கண்ணில் உள்ளான் கான் - அப்பர் பெருமான்

2 கண்ணே சரீரத்தின் விளக்காய் இருக்கிறது - பைபிள்

3 சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ - ஞான கவி பாரதியார்

4 விண்ணொளி யாக விளங்கும் பிரமமே. கண்ணொளி ஆகுமடி குதம்பாய். கண்ணொளி ஆகுமடி.

5 சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - வள்ளலார்

6 விண்ணிறைந்து நின்ற சுடர்போலச் சீவர்கள்கண்ணிறைந்து நிற்குஞ் சிவம். - அவ்வையார்

7 கண்ணின் மணியை கருத்தின் தெளிவை, விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை

எண்ணி எண்ணி இரவும் பகலுமே நண்ணு கின்றவர் நாந்தொழுந் தெய்வமே" - தாயுமானசுவாமிகள்

Popular Posts