"இல்லறம்" என்றால், இல் - அறம் என்பது இல்லாகிய வீட்டில் அறநெறியோடு வாழ்வதை குறிப்பது ஒன்று! மற்றொன்று இல் என்றால் வீடுபேறு! வீடு என்பது நாம் குடியிருக்கின்ற வீடு என்பது உலக விளக்கம்.
ஆன்மீக விளக்கம் என்னவென்றால், நம் ஆன்மா குடியிருக்கும் வீடு - நம் உடல். நம் உடலாகிய இல்லத்தில் ஆன்மாவாக விளங்கும் இறைவனை, நல்நெறிநின்று வாழ்ந்து சாதனைகள் புரிந்து நிரந்தரமாக தங்க வைக்க வேண்டும். அதாவது இறைவன் குடிகொண்ட கோயிலாக நம் உடல் விளங்க வேண்டும்.
அதற்குரிய அறநெறிப்படி வாழவேண்டும். அதுவே உயர்ந்த இல்லறம்!
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்ற திருமந்திரம் இதை விளக்கும். இந்த இல்லறம் தான் ஒவ்வொருவரும் கண்டிப்பாக கைக்கொண்டேயாக வேண்டும்.
gnana sarguru
www.vallalyaar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக