திங்கள், 22 ஏப்ரல், 2019

நம் காயக்கப்பல்!

மனம் என்னும் தோணிபற்றி மதியென்னுங் கோலை துடுப்பாக யூன்றி சினம், கோபம், பொறாமை முதலிய துர்குணங்களை சரக்காக ஏற்றிக்கொண்டு சம்சார சாகரத்திலே
பெருங்கடலிலே போகும் போது காமம் என்னும் பாறை தாக்கி, மோதி கவிழ்ந்து விட்டதாம்!

நம் காயக்கப்பல்!

ஏன் இந்த அவலம்!

எத்தனையோ பிறவியாக இப்படியே கழிகிறது!

நம் காயமாகிய கப்பல், நம் உடலாகிய தோணி பிறவிப்
பெருங்கடலை தாண்டி கரை சேர வேண்டுமாயின், பரம்பொருளை(சற்குருவை) நினைத்து உணர்ந்து ஞானதவம் செய்யவேண்டும்!

தோணி போன்ற கண்களிலே ஒளியிலே மனதை நாட்டி நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தால் ஊன்றியிருந்து தவம் செய்தால் கண் ஒளி பெருகி நம் துர்குணங்களை அகற்றி வினையாகிய சரக்கு இல்லாமல், காமம் எனும் பாறையில் மோதி கவிழாமல் பத்திரமாக போய்சேரலாம்!

எப்படி? யாரால்?

நம் காயக்கப்பலுக்கு மாலுமி தான் கண்மணி ஒளி!

மாலுமியான ஒளி நம் உடலாகிய கப்பலை ஒட்டிச்சென்று பத்திரமாக கரை சேர்க்கும்!

எந்த கரை?

இறைவன் இருக்கும் அக்கரையிலே!

அக்கரை போகவேண்டுமென்ற அக்கறை நமக்கு இருந்தால் மட்டுமே, மாலுமியை நம்பி நம் காயகப்பலை ஒப்படைத்தாலே நாம் கரை சேர முடியும்!

மாலுமியை நம்பு!

பிறவிப் பெருங்கடல் கடக்கலாம்!

ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா

நூல் : மூவர் உணர்ந்த முக்கண்

பக்கம் : 102

குருவின் திருவடி சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts