குருவை பெற்று ஞானோபதேசம் ஞான தீட்சை பெற்று, ஆன்ம சாதனை
புரியும் ஒவ்வொருவரும் முதலில் கலை மகள் அருள் பெறுவான்!
கவி மழை புரிவான்! இதுவே உண்மை! மெய்ஞானம்!
அடுத்தது அருள் புரிவாள் அலை மகள்! வேண்டாம் என்று சொன்னாலும் வந்து குவியும் செல்வமெல்லாம்!
ஒன்றுக்கு பத்தாக பதினாறாக வந்து சேரும்!
நாம் பதினாறு கலையுடைய சந்திர கலையில் இடக்கண்ணில் ஆரம்பித்து
சூரியகலை வழியே ஒன்றான பத்தாமிடத்தை சேருவோம்!
இதுவே ஆத்ம சாதனை !தெய்வம் ஒன்றே!
அது பத்தாமிடத்தில் ய காரத்திலே ! அவள் கன்னி ய குமரியிலே!
நாம் நம் இடப்பாக சக்தியை பிடித்து சிவத்தின் வழியே
வாலையை அடையலாம்! எல்லாமே மெய்ஞானம்!
பாடு!
பிதற்று!
கத்து!
கதறு!
உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! நம் தாயுக்கு நம் பிதற்றல்
மழலையே! ரசிப்பாள்! நிச்சயம் அருள்வாள்!
நம் வாழ்வு நிச்சயம் - உறுதி - மரணமிலாதது என்று கண்டிப்பாக அருள் தருவாள்! இறைவனை தாயும் ஆனவன் என்றுதான் சொன்னார்கள்! கருவிலே திருவான தாயை வாலையை போற்றுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக