ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

சும்மா இருக்க குரு வழிகாட்ட வேண்டும் !

உயிர் அறியாது ஒடுங்குவது தூக்கம் ! உயிரை அறிந்து
ஆதாரத்தில் ஒடுக்குவது சமாதி ! சாதாரண மக்களுக்கு
தூக்கம் ஒரு வரப்பிரசாதம் ! ஒய்வு கிடைக்கிறது .
ஓய்வு என்றால் என்ன ? சும்மா இருப்பது தானே ?!
சும்மா இருப்பதுதான் ஞானம் ! அறியாமல் சும்மா
இருந்தால் ஓய்வு ! அறிந்து உணர்ந்து சும்மா இருந்தால்
ஞானம் கிட்டும் ! அறிந்து உணர்ந்து சும்மா இருக்க
குரு வழிகாட்ட வேண்டும் !


உயிரை அறிந்து ஆதாரங்களில் ஒடுங்கி விடாமல்
உணர்வோடு சும்மா இருப்பதுவே ஞானநிலை!
மோனநிலை! " சமாதி பழக்கம் பழக்கமல்ல,
சகஜ பழக்கமே பழக்கம் " என வள்ளலார் கூறுகிறார் .
சமாதியில் மூழ்குவது பெரிதல்ல , உயிர் அனுபவம்
உணர்ந்து பெற்ற பேரின்ப நிலையிலேயே சகஜமாக
எப்போதும் இருப்பதுவே சிறப்பு என்கிறார் .

உயிர் தூக்கத்தில் ஒடுங்குகிறது ! மரணத்தில்
உடலைவிட்டு பிரிந்து விடுகிறது ! மயக்கத்தில்
தடுமாறுகிறது ! தடுமாறாமல் ஒடுங்காமல் , பிரியாமல்
உயிரை அதன் தன்மையில் பெருக்கி அதாவது ஒளியான
உயிரை ஊசிமுனை அளவு ஒளியான உயிரை
உடல் முழுவதும் பரவும் அளவு பேரொளியாக
செய்து இந்த உடலிலேயே உயிரை நிலை பெறச்
செய்வதுமே ஞானம் ! உயிர் தன்மையை உடல்
பெற்று உடலும் ஒளிர்ந்து மிளிர்வதே ஞானம் !
ஊன உடலே ஒளி உடலாக பெறுவதே ஞானம் !

1 கருத்து:

  1. வணக்கம்
    ஐயா
    அருமையான கருத்தாடல் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

Popular Posts