வியாழன், 18 டிசம்பர், 2014

ஸ்ரீ ஆண்டாள் மெய் ஞானம் - திருவடி உபதேசம்.

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழி.
 மெய் ஞானம் - திருவடி உபதேசம்.
 



 
பூரம் - நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு வழிபாடு. (27 நட்சத்திரக்காரர்களுக்கு வழிபாடு, தியானமுறை)பாடல்:- 522 (நாலாயிர திவ்யப்பிரபந்தம்)


"முற்றத்தாடு புகுந்து நின்முகங் காட்டிப்புன் முறு வல்செய்து சிற்றி லோடெங்க சிந்தையும் சிதையக் கடவையோ? கோவிந்தா" முற்றமண்ணிடம் தாவி விண்ணுற நீண்ட அளந்து கொண்டாய்! எம்மைப்பற்றி மெய்ப்பிணக் கிட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்வார்?"


மெய் பொருள்:-நாங்கள் வளர்ச்சியடையாத சிறுமிகள் எங்கள் மணல் வீட்டை கலைக்காதே என்றனர்! இங்கு பக்குவமில்லா மானிடர் மணல் வீடு அவர் உடலேயாம்! கண்ணன் அருளவில்லையெனில் - (சிற்றில்-சின்னவீடு) கண் ஒளி பெருகி நாம் நம்மை உணரவில்லையெனில் சிற்றில்-சின்னவீடு நம் உடல் அழிந்துபோகும்!

இறைவா இந்தசிற்றில்  அழியாது ஒளி தந்து காத்தருள்வாய் கதையைப் பாராமல் ஞான அனுபவ நிலையைப் பார்க்கவும்!

முற்றத்தூடு புகுந்து - முற்ற சூரிய சந்திர அக்னி ஆகிய மூச்சு கூடும் இடம்! நம் கண் வழி அடைந்து செய்யும் போது ஒளி இரு கண்ணும் உள்ளே சேரும் இடமான முச்சந்திக்கு - முற்றத்துக்கு வந்து சேரும்!

நம் கண்மணி ஊசிமுனை வாசல் திறந்து ஒளிக்காட்சி காணும்! உள்ளே போங்குங்கால் ஊன உடல் சிதையும் ஒளியுடல் பெறுவோம்! மனம் செத்துவிடும்! வேறெந்த சிந்தனையும் இருக்காது! கோவிந்தனிடமே லயித்து விடுவோம்!

முற்றமண்ணிடம்தாவி - நம் சிரசின் உள் மத்தியில் நின்று ஒரு காலால் விண்ணளந்தாய் ஒற்றை காலில் நின்றாய்! இதுவே ஏக பாத மூர்த்தி என கோவில்களில் சிலை வடித்திருப்பார்கள். வாமன அவதாரம் விண்ணளந்த நிலை இதுவே! அதாவது நம் உள் ஆத்ம ஜோதி எழும்பி மேலே சகஸ்ராராத்தை அடையும்!

அப்போது என் மெய்யோடு இரண்டற கலந்து விடுவான் கண்ணன் - ஒளியானவன். நீவேறு நான் வேறு இல்லாத நிலை! நீயும் நானும் ஒன்றான நிலை!

எவ்வளவு அற்புதமான ஜீவாத்மா பரமாத்மா ஐக்ய நிலை?! ஆண்டாள் பாடிய அனுபவ ஞான நிலை! இதுவே ஞான ரகசியம் என்று கூறி அ + உ = ய. எட்டும் இரண்டாம் - பத்து. தவம் செய்யும் நிலை, பேரின்பம் பெருதல்.


இந்த ஞான உபதேசம் கன்னியாகுமரி ஞான சற்குரு சிவசெல்வராஜ் சுவாமிகள் "பரம பதம்" என்ற நூலிலிருந்து எடுத்து தறபட்டுள்ளது.




                                                       வேனும் - சுபம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts