திங்கள், 15 செப்டம்பர், 2014

சும்மா இருக்கும் சுகம்


சும்மா இருக்கத்தான் ஒவ்வொருவரும் படாத பாடு படுகிறார்கள்!
மந்திரம் ஓதுகிறான்! யாகம் வளர்க்கிறான்! யோகம் செய்கிறான்!
இவையெல்லாம் அற்ப பலன்களையே தரும்! ஞான சாதனையான
சும்மா இருக்கும் கலையை சற்குரு மூலமாக திருவடி தீட்சை
பெற்று உணர்ந்து தவம் செய்பவனே இறைவனை அடைவான்!
பேரின்பம் பெறுவான்!

பீரப்பா நமக்குத்தரும் நல் உபதேசம் 'சும்மா இரு" என்பதே!

ஆறாயிரம் அருட்பாக்களை பாடிஅருளிய திருவருட் பிரகாச
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் முதல்  பாடல் என்ன தெரியுமா?

இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது
மற்றொண்டு வருமோ அறியேன் எங்கோவே
துன்றுமல வெம்மாயையற்று வெளிக்குள் வெளி
கடந்து சும்மா இருக்கும் சுகம்

சுகம் எது தெரியுமா? சும்மா இருப்பதே!
ஞானம் எது தெரியுமா? சும்மா இருப்பதே!
கடவுளை காணவேண்டுமா சும்மா இரு!

தாயுமான சாமிகள் இரவுபகலாக விடாது கண்ணின் மணியில்
ஒளியை-இறைவனை கண்டு தொழும் தவ சீலர்களே
நாம் கும்பிடும் கடவுள் என சாதனை செய்பவர்களையே மிக மிக
உயர்வாக கூறுகிறார். இந்த உண்மை ஞானத்தை பல கோடியில்
ஒருவரே உணர்கிறார். அப்படிபட்டவரே நாம் கும்பிடும் கடவுள்
என்றால் அது மிகை இல்லை.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

1 கருத்து:

Popular Posts