திங்கள், 1 செப்டம்பர், 2014

கண் மருத்துவருக்கு தெரியுமா திருவடி தவம்?

ஞான சாதனை!- தவம்!- சும்மா இருக்கவேண்டும்! கண்மணி ஒளியை குருவிடம் தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யச்செய்ய ஒளிபெருகி சூட்சுமம் நிலையிலிருக்கும் வினையாகிய திரை உருகி கரைந்து விடும்! 

வினை தீரத்தீர  ஒளி மிஞ்சும்! மிஞ்சுகின்ற ஒளி உடல் முழுவதும் பரவும்! ஊன  உடலே ஒளி உடல் ஆகும்! பிறவி கிடையாது! வினை இல்லையெனில் பிறவி இல்லை!

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா .

1 . வினை திரை என்பது - ஜவ்வு. 
     ஆது சூக்கும வடிவில் உள்ளது. 
     தூல(Physical) வடிவு அல்ல. 

இதை தவத்தின் மூலமே கரைக்க முடியும். எந்த டாக்டராலும் சரி பண்ண முடியாது.மருத்துவருக்கு தூல வடிவை அறியும் அறிவு/கருவி  உள்ளது.
சூக்கும நிலையில் உள்ள உயிர் பற்றியும் அத்துடன் இருக்கும் வினை பற்றி அறியும் அறிவு/கருவி  இல்லை. இதை தவம் செய்து கர்ம வினையை
அழித்து உயிர் அனுபவம் பெற்ற ஞானிகள் அறிவர். இதை கண் மருத்துவர் கொண்ட கருவி மூலம் அறிய முடியாது.
அய்யாவின் அனைத்து  புத்தகத்தை ஊன்றி படித்தால் புரியும்.

 www.vallalyaar.com
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts