சனி, 19 ஜூலை, 2014

ஊனக்கண்ணை ஞான கண்ணாக்கு!!


முகத்தில் கண்கொண்டு பார்க்கும் மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்



நம் முகத்திலுள்ள இரு கண்களால் இவ்வுலகை பார்க்கிறோம்!
வாழ்கிறோம் அப்படியே செத்தும்  போகிறார்கள். அதனால் தான் புறத்தே
பார்த்து மனதை அலையவிடும் மனிதர்களை மூடர்கள் என்றார் திருமூலர்!

ஏ, மனிதா உன் கண்ணால் உன் அகத்தில், உன் உடலினுள்,  உன் கடத்தில்,
உன் மெய்யினுள் பார்?! எப்படிப் பார்ப்பது என்பதை குரு உபதேசம்
கேட்டு தெரிந்து கொள்?! 

அங்ஙனம் விழி வழியாக உன் அகத்தே ஒளிரும் ஆன்ம ஜோதியை கண்டால்
நீயே உத்தமன் நீயே ஞானி! அருட்பெருஞ்ஜோதியாம் நம் உயிரை - ஆத்மா
ஜோதியை - ஆத்ம ஜோதியை  காண நம் கண் வழியே நம் உடலின் உள்
போவதே ஞானம்!  நம் புறக்கண்ணே தவம் செய்து ஒளி பெருகும்!

 நம் ஊனக்கண்ணே தவத்தால் ஒளி பெருகுவதால் ஞான கண்ணாக மிளிரும்.
ஒளிவிட்டு பிரகாசிக்கும்! சூரிய கண்ணான வலது கண்ணான இடது கண்ணும்
சேர்வதே பிளஸ் + மைனஸ் - சேர்வதே சக்தி பிறக்க ஏதுவாகும்! பாசிடிவ் நெகடிவ் சேர்ந்தால் தானே பவர்! அப்போது மூச்சுடரும் ஒன்றாகும்! இரு கண் ஒளியும் ஒன்று சேரும் இடந்தான் வாலை இருப்பிடம்! 'ய'' காரம்! பத்தாமிடம்! நாம் பற்றவேண்டிய இடம்!

தியானம் என்றால் தியானிப்பது. அறிந்த பொருளை திரும்ப திரும்ப நினைப்பது தியானம்- தவம் என்பர்! நாம் அறிந்த பொருள் - மெய்பொருள் நம் ஒளிப்படைத்த கண்ணே! விழியே! அதை, கண்மணி ஒளியை திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் விடாது நினைத்து கொண்டு இருப்பது தான் தியானம்!
வள்ளலார் இதைதான் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து தவம் செய் என்றார்! இறைவன் நம் கண்களில் ஜோதியாக துலங்குகிறான் என்பதை அறிந்தவனே பாக்கியவான்! புண்ணிய ஆத்மா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts