வெள்ளி, 23 நவம்பர், 2012

விதி படி வாழ்வது அல்ல மனித வாழ்க்கை

விதியை மதியால் வெல்லலாம்! எப்படி?

விதிக்கப்பட்ட பிராரப்த கர்மம்(~50 % கர்மம்) மூலம் பிறவி எடுத்தோம், நாம் சேர்த்து வைத்த கர்ம வினையால் எடுத்த பிறவி.நாம் பிறந்து வந்தது நாம் முடிவு பண்ணியது அல்ல, நமது தாய் தந்தை முடிவு பண்ணி வந்தது அல்ல.நாம் இப்பிறவி எடுத்து வந்து, நம் மதியால் நமது கர்ம வினையை அழித்து "நாம் யார்" என்று தெரிந்து கொள்ளவேண்டியது.எப்படி தன்னை அறிவது? தவம் செய்யவேண்டும்.

விதி படி வாழ்வது அல்ல மனித வாழ்க்கை!  விதியை வெல்ல கூடியவன் மனிதன். இறைவன் நமக்கு ஒரு சான்ஸ் கொடுத்து உள்ளார். 50% கர்மத்தை கொடுத்து மனிதனாக பிறப்பிக்க வைத்தான். மனிதனாக பிறந்த நாம் அதை உணர்ந்து , இந்த விதி வினையில் இருந்து எப்படி விடுதலை அடையவேண்டும் என்று பார்க்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனம்! பிறந்து. மேலும் மேலும் வினையை சேர்த்து இன்னும் இறந்து பிறக்க கூடாது. நாம் செய்ய வேண்டியது ஏற்கனவே கொண்டு வந்தது ப்ராப்த கருமத்தை தீர்த்து வினை இல்லாத நிலையை தேடவேண்டும். நம் வாழ்வை வினை இல்லாத தன்மைக்கு அமைத்து கொள்ள வேண்டும். 



மேலும் அறிய .....

2 கருத்துகள்:

  1. நன்றாக எழுதுகிறீர்கள்....

    கண்ணொளிக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு .தங்களின் கூற்றுப்படி ,விதியை மதியால் வெல்லலாம் ஆனால் அதற்கும் அவனின் அருள் வேண்டும் என்பது சாத்தியமே .
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

Popular Posts